வெள்ளி, 26 மார்ச், 2021

பெட்ரோல் டீசல் விலை

source : https://tamil.indianexpress.com/explained/why-are-oil-companies-cutting-petrol-diesel-prices-now-285667/

Why are oil companies cutting petrol, diesel prices now : 6 மாதங்களுக்கும் மேலாக அதிகரித்துக் கொண்டே சென்ற பெட்ரோல் டீசல் விலை கடந்த இரண்டு நாட்களாக குறைந்துவிட்டது. விலையேற்றத்தின் காரணமாக வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத அளவில் பெட்ரோல் விலை அதிகரித்தது. இன்று ஓ,எம்.சி. 21` பைசாக்களை குறைத்து ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ. 90.78க்கு விற்பனை செய்து வருகிறது. டீசல் விலை 20 பைசாக்கள் குறைக்கப்பட்டு ரூ. 81.1% ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 70 டாலர்களாக இந்த மாதத்தின் துவக்கத்தில் இருந்தது. தற்போது அது 63.5 டாலராக விற்பனை செய்யப்படுகிறது. கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு என்ன காரணம் என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.

ஓ.எம்.சி. ஏன் விலையை குறைத்துள்ளது?

24 நாட்களுக்கு ஒரே நிலையாக நிலையாக இருந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன. உலகளாவிய எண்ணெய் நிறுவனங்கள் விலையை குறைத்ததால் இந்தியாவில் எண்ணெய் விலை குறைந்துள்ளது. மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா மற்றும் அசாமில் நடைபெறவிருக்கும் முக்கிய மாநிலத் தேர்தல்களில் எரிபொருள் விலைகள் தேர்தல் பிரச்சினையாக மாறியுள்ளதால், கச்சா விலைகள் உயர்ந்துள்ள போதிலும் OMC விலை மாற்றத்தை நிறுத்தியுள்ளதாக வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.விலை குறைப்பு லிட்டருக்கு ரூ. 2.5 முதல் 3 வரை இருக்கலாம் என்றும் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

இருப்பினும் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைக்கவில்லை. டீசல் மற்றும் பெட்ரோல் மீதான கலால்வரியை கொரோனா தொற்று காலத்தில் மத்திய அரசின் வருவாயை அதிகரிக்க 2020ம் ஆண்டு உயர்த்தியது. கடந்த ஆண்டு மத்திய அரசு பெட்ரோல் மீதான வரியை ரூ. 13 உயர்த்தியுள்ளது. அதே போன்று டீசல் விலையை 16 வரை உயர்த்தியுள்ளது. பிப்ரவரியில் மேற்கு வங்கம், அசாம், ராஜஸ்தான், மற்றும் மேகலாயா ஆகிய மாநிலங்கள் மாநில வரியை குறைத்தது.

தற்போது ஏன் விலை குறைந்துள்ளது?

கச்சா எண்ணெய் வழங்கல் மற்றும் தேவை பற்றிய கவலைகள் ஆகிய இரண்டும் கச்சா எண்ணெய் விலையில் சமீபத்திய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன, இது அக்டோபர் மாத இறுதியில் ஒரு பீப்பாய்க்கு சுமார் 40 டாலர்களிலிருந்து மார்ச் தொடக்கத்தில் 70 டாலராக உயர்ந்துள்ளது. ஐரோப்பாவில் புதிய கோவிட் -19 கட்டுப்பாடுகள் மற்றும் அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரிக்கும் என்ற அச்சத்தில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை அக்டோபர் மற்றும் மார்ச்சுக்கு இடைப்பட்ட காலத்தில் அதிகரித்துக் கொண்டே வந்தது. ஏனெனில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் ஒபெக் + குழு கச்சா எண்ணெய் விலைகள் கோவிட்டுக்கு முந்தைய அளவை எட்டிய போதிலும் உற்பத்தியை குறைக்க தொடர முடிவு செய்தன.

பிப்ரவரி மத்தியில் அமெரிக்காவில் ஏற்பட்ட பனிப்பொழிவு காரணமாக அங்கு எண்ணெய் உற்பத்தி குறைய துவங்கியது. எவ்வாறாயினும், உயரும் கச்சா எண்ணெய் விலைகள் அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெய் விநியோகத்தை மீட்டெடுப்பதை துரிதப்படுத்தியுள்ளன என்று நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதே போன்று ஐரோப்பாவில் தடுப்பூசி விநியோகம் மிகவும் குறைவாக உள்ளது என்பதால் தேவையும் குறைந்துள்ளது.

உற்பத்தி குறைப்பை மேற்கொள்ளக் கூடாது என்று சௌதி அரேபியாவிடம் கேட்டுக் கொண்ட போதும் அது தொடர்ந்ததால் இந்தியா அங்கிருந்து எண்ணெய் இறக்குமதியை குறைத்தது. அதனால் அமெரிக்காவில் எண்ணெய் உற்பத்தி அதிகரிக்க துவங்கியது. தற்போது இந்தியா அதிக அளவு எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது அமெரிக்கா.