ஞாயிறு, 9 மே, 2021

24 மாநிலங்களில் 15% ஆக உயர்ந்த கோவிட் தொற்று விகிதம்

 Over 15% positivity in 24 states : கடந்த வாரத்தைக் காட்டிலும் இம்முறை 24 மாநிலங்களில் கொரோனா நேர்மறை விகிதம் 15%க்கும் அதிகமாக உள்ளது என்று மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது. 30 மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா தொற்று 2 வாரங்களில் அதிகரித்து வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த தரவுகள் கூடுதல் கவனத்திற்கு முன்வைக்கப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. வெள்ளிக்கிழமை இந்தியாவில் மொத்தமாக 36,45,164 நபர்கள் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 4,14,188 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளது. மொத்தம் 3915 நபர்கள் உயிரிழந்துள்ளனர் என்று அரசு அறிவித்துள்ளது.

சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் ஆர்த்தி அகுஜா கடந்த வாரம் ஏழு மாநிலங்களில் கொரோனா தொற்று நேர்மறை விகிதம் சுமார் 30%க்கும் மேல் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார். கோவா (48.5 சதவீதம்), ஹரியானா (36.1 சதவீதம்), புதுச்சேரி (34.9 சதவீதம்) ), மேற்கு வங்கம் (33.1 சதவீதம்), கர்நாடகா, டெல்லி, ராஜஸ்தான் (தலா 29.9 சதவீதம்) என்ற விகிதத்தில் நேர்மறை பதிவாகியுள்ளது.

12 மாநிலங்களில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவிற்கு சிக்கிசை பெற்று வருகின்றனர். 7 மாநிலங்களில் கொரோனாவிற்கு 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரையிலான நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேர்மறை விகிதம் நாட்டில் எவ்வாறு கொரோனா தொற்று பரவுகிறது என்பதை பார்ப்பதற்கான முக்கியமான வழிகாட்டி. மூன்று மாநிலங்களில் மட்டும் தான் நேர்மறை விகிதம் 5%க்கும் குறைவாக உள்ளது. 9 மாநிலங்களில் நேர்மறை விகிதம் 5-15% வரையிலும், 24 மாநிலங்களில் நேர்மறை விகிதம் 15%க்கு மேலே உள்ளது. இந்த அதிக நேர்மறை விகிதம் நாட்டுக்கும் நமக்கும் அதிக கவலையை ஏற்படுத்துகிறது என்றார் ஆர்த்தி.

கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, மேற்கு வங்கம், பீகார், ஹரியானா, ஒடிசா, உத்தரகண்ட், பஞ்சாப், அசாம், இமாச்சல பிரதேசம் மற்றும் காஷ்மீர் போன்ற 12 மாநிலங்களில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று வழக்குகள் அதிகரித்து வருவதாக அவர் கூறினார். ஒவ்வொரு வாரமும் நேர்மறை விகிதம் அதிகரித்துக் கொண்டே வரும் 30 மாவட்டங்களில் 10 மாவட்டங்கள் கேரளாவில் உள்ளது. கோழிக்கோடு, எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம், திருவனந்தபுரம், கோட்டயம், ஆலப்புழா, பாலக்காடு, கொல்லம், கண்ணூர் மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா வழக்குகள் அதிகரித்து வருகிறது. ஆந்திராவில் 7 மாவட்டங்களிலும் – சித்தூர், கிழக்கு கோதாவரி, ஸ்ரீகாகுளம், விசாகப்பட்டினம், கர்னூல், குண்டூர், மற்றும் அனந்தபூர், கர்நாடகாவில் மூன்று மாவட்டங்களிலும் பெங்களூரு நகரம், மைசூரு, மற்றும் துமகுரு மாவட்டங்களிலும் இதே நிலை நீடிக்கிறது.

ஹரியானா (குருகிராம், ஃபரிதாபாத்), மேற்கு வங்கம் (வடக்கு 24-பரகனாஸ், கொல்கத்தா), மற்றும் மகாராஷ்டிரா (சதாரா, சோலாப்பூர்) என தலா இரண்டு மாவட்டங்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் இருந்தன. 30 மாவட்டங்களில் சென்னை, பாட்னா மற்றும் குர்தா (ஒடிசா) ஆகியவையும் அடங்கும். தொடர்ந்து அதிகரித்து வரும் பரவலால் மூன்றாவது தவிர்க்க முடியாதது என்று கூறி இரண்டு நாட்களுக்குப் பிறகு, அரசாங்கத்தின் உயர்மட்ட அறிவியல் ஆலோசகர் வெள்ளிக்கிழமை, வலுவான நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டால், மூன்றாவது அலை, உண்மையில், இந்தியாவைத் தாக்காது என்றார்.

அலைகள் மற்றும் அவற்றின் எண்ணிக்கைக்கு பதிலாக, நோய்த்தொற்றுகளின் இருப்பிடம், நேரம் மற்றும் தீவிரம் பற்றி பேசுவது பயனுள்ளதாக இருக்கும் என்று பிரதமரின் முதன்மை அறிவியல் ஆலோசகர் டாக்டர் கே விஜயரகவன் கூறினார். நாங்கள் வலுவான நடவடிக்கைகளை எடுத்தால், மூன்றாவது அலை உருவாகாது என்றார். இது மாநிலங்களில் உள்ளூர் மட்டத்தில் வழிகாட்டுதல் எவ்வளவு திறம்பட செயல்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்தது என்றார் விஜயராகவன். முன்னெச்சரிக்கை, கண்காணிப்பு, கட்டுப்படுத்துதல், சிகிச்சை மற்றும் சோதனை பற்றிய வழிகாட்டுதல்களை நாம் முறையாக பின்பற்றினால் இந்த நோயில் இருந்து தப்பிக்கலாம் என்றார்.


கடந்த மாதம் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் டாக்டர் விஜயராகவன் இதே கருத்தைத் தெரிவித்திருந்தார். மே மாதத்தில் இந்தியா உச்சம் பெறக்கூடும், ஆனால் நடத்தை மூலம் நாம் என்ன செய்கிறோம் என்பதைப் பொறுத்தது என்று அவர் கூறினார். நிலைமை மேலும் மோசமடைய வேண்டும் என்பதல்ல. உடனடி வலுவான நடவடிக்கையால், மேலும் மோசமடைவதைத் தடுக்க முடியும். எவ்வாறாயினும்முற்றிலும் முக்கியமானது முகக்கவசங்கள் மற்றும் தனி மனித இடைவெளி என்று அவர் கூறினார்.

source https://tamil.indianexpress.com/india/over-15-positivity-in-24-states-cases-trending-steeply-up-in-30-districts-301119/