Virologist Shahid Jameel quits govt’s genome mapping group :17.05.2021 இந்தியன் SARS-COV-2 ஜெனோமிக்ஸ் கன்சோர்டியா (Indian SARS-COV-2 Genomics Consortia (INSACOG)) குழுவின் தலைவராக பதவி வகித்த, கொரோனா பெருந்தொற்று காலத்தில் அறிவியல் பூர்வமாக பேசிய நபர்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்த வைராலஜிஸ்ட் ஷாகித் ஜமீல் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். INSACOG என்ற இந்த அமைப்பு, இந்தியாவின் ஜீனோம் சீக்வன்ஸிங் ஆய்வுகளை ஒருங்கிணைத்தது.
INSACOG என்ற அறிவியல்சார் அமைப்பு இந்த ஆண்டின் ஜனவரி மாதம் துவங்கப்பட்டது. கொரோனா வைரஸ் மற்றும் அதன் பிறழ்வு வைரஸ்களின் ஜீனோம் சீக்வன்ஸிங் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்ததோடு மட்டும் அல்லாமல், இந்தியாவின் தலைசிறந்த 10 ஆய்வகங்களில் ஜீனோம் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கான வலை அமைப்பை உருவாக்கியது. 6 மாதங்கள் மட்டுமே செயல்பட இந்த குழு அமைக்கப்பட்டாலும் பின்பு அதன் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. மிக மெதுவான வேகத்தில் முன்னேறி வந்த மரபணு வரிசைமுறை ஆராய்ச்சி,இந்த அமைப்பிற்குப் பிறகுதான் வேகத்தை அதிகரித்தது.
இந்தியாவில் கொரோனா தொற்று குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் உட்பட பல முக்கிய செய்தித்தாள்களில் அவர் கட்டுரைகள் எழுதியும், இது தொடர்பாக பேசியும் வந்தார். கடந்த வாரம் தான் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏற்பாடு செய்த எக்ஸ்பிளைன்ட் லைவ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விஞ்ஞான விஷயங்களில் தன் மனம் திறந்து பேசிய ஜமீல், இரண்டாவது அலையின் போது, வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளை விமர்சித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், கொரோனா தொற்று ஜனவரி மாதமே முடிந்துவிட்டது என்று அதிகாரிகள் முன்கூட்டியே நம்பி தவறு செய்துவிட்டனர். மேலும் பல முந்தைய மாதங்களில் கொரோனா தடுப்பிற்காக உருவாக்கப்பட்ட பல தற்காலிக வசதிகளை அரசு முடக்கியதாகவும் அவர் கூறினார்.
சோதனை மற்றும் தனிமைப்படுத்தலை அதிகரிக்க வேண்டும், மேலும் தற்காலிக வசதிகளை உருவாக்குவதன் மூலம் மருத்துவமனை படுக்கைகளை உயர்த்த வேண்டும், ஓய்வு பெற்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை மீண்டும் பணிக்கு அமர்த்த வேண்டும். மேலும் மருந்து மற்றும் ஆக்ஸிஜன் விநியோக சங்கிலியை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நடவடிக்கைகள் அனைத்திற்கும் இந்தியாவில் உள்ள சக ஆராய்ச்சியாளர்கள் ஆதரவு தருகின்றனர். ஆனால் அவர்கள் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட கொள்கை வகுப்பிற்கு பிடிவாதமான எதிர்ப்பை எதிர்கொள்கின்றனர், தரவுகளின் அடிப்படையில் முடிவெடுப்பது மற்றொரு விபத்து, ஏனெனில் இந்தியாவில் தொற்றுநோய் கட்டுப்பாட்டை மீறிவிட்டது. நாங்கள் தாங்கிக் கொண்டிருக்கும் மனித இழப்பு நிரந்தரமான வடுவை ஏற்படுத்தும் என்று அவர் அந்த பத்திரிக்கையில் எழுதியுள்ளார்.
ஜமீல் சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தின் ஆக்ஸிஜன் விநியோகத்தை நிர்வகிக்க ஒரு பணிக்குழுவை நியமிக்க வேண்டும் என்ற உத்தரவையும் அவர் கடுமையாக விமர்சனம் செய்தார். இது உண்மையிலேயே துரதிர்ஷ்டவசமானது. ஏற்கனவே நம்மிடம் உள்ள மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. மேலும் அவர்களில் சில சிறந்த மருத்துவர்களை தேர்வு செய்து ஆக்ஸிஜன் வழங்கல் சங்கிலியை மேற்பார்வையிடுங்கள் என்று கூறுகின்றனர். மருத்துவர்களுக்கு மருந்துகள் பற்றி தான் ஆக்ஸிஜன் விநியோகம் குறித்தும் அதன் தளவாடங்கள் குறித்தும் அவர்களுக்கு என்ன தெரியும் என்றும் அவர் விமர்சனம் செய்தார்.
source https://tamil.indianexpress.com/india/virologist-shahid-jameel-quits-govts-genome-mapping-group-303939/