புதன், 8 செப்டம்பர், 2021

முசாபர்நகரில் ‘மகா பஞ்சாயத்து’: உ.பி. தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய முடிவு

 

மத்திய பாஜக அரசின் மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த உத்தரப்பிரதேசத்தின் முசாஃபர்நகரில் விவசாயிகளின் மகா பஞ்சாயத்து கூட்டம் நடைபெற்றது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜகவுக்கு எதிரான போராட்டத்தையும், பிரச்சாரத்தையும் முன்னெடுக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரில் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தை விவசாய அமைப்பினர் நடத்தினர். இக் கூட்டத்தில், பாரத் கிஸான் யூனியன் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிகைத் உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்க தலைவர்கள் கலந்துகொண்டனர்.

கடந்த ஒன்பது மாதங்களாக இயக்கத்தை முன்னெடுத்து வரும் விவசாய சங்கங்களின் அமைப்பான சம்யுக்த் கிசான் மோர்ச்சா (SKM) இக்கூட்டத்தை ஒரு “மகாபஞ்சாயத்து” என்று குறிப்பிட்டுள்ளது.

2013 இல் வகுப்புவாதக் கலவரங்கள் நடைபெற்ற உபி மாநிலத்தின் மேற்கு மாவட்டங்கள் பா.ஜனதாவின் எழுச்சி வரை ராஷ்டிரிய லோக் தளம் (RLD) கோட்டையாக இருந்தது. புகழ்பெற்ற விவசாயிகள் தலைவரான மறைந்த மகேந்திர சிங் திகாயின் மகன்களான நரேஷ் திகைத் மற்றும் ராகேஷ் திகைத் ஆகியோரின் ஆதரவைப் பெற முடிந்தது.

பாஜகவுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்திற்கு பாரதிய கிசான் யூனியனின் ராகேஷ் திகாயத் தலைமை தாங்கினார். “உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை ஆகியோரை உபி மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதுபோன்ற அரசு இருந்தால், கலவரங்கள் ஏற்படும். இந்த நிலம் கடந்த காலத்தில் “அல்லாஹு அக்பர், ஹர ஹர மகாதேவ்” போன்ற முழக்கங்களை கண்டது. பாஜகவினர் பிரிப்பது பற்றி பேசுகிறார்கள், நாங்கள் ஒன்றிணைவது பற்றி பேசுகிறோம்.

விவசாய சங்கங்களுடன் கடைசி சுற்று பேச்சுவார்த்தை நடந்த பிறகு ஜனவரி 22ஆம் தேதி முதல் விவசாயிகளை மத்திய அரசு அணுகவில்லை. கடந்த ஒன்பது மாதங்களில் 600 க்கும் மேற்பட்ட விவசாயகள் போராட்டத்தில் இறந்ததற்கு மத்திய அரசு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை என கூறிய அவர் எங்கள் பிரச்சாரம் முழு நாட்டையும் உள்ளடக்கும், எங்கள் நோக்கம் நாட்டை காப்பாற்ற வேண்டும் என்பதுதான்” என்றார்.

விவசாய நிலங்கள், நெடுஞ்சாலைகள், மின்சாரம், எல்ஐசி, வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களை அதானி, அம்பானி போன்றவர்களிடம் விற்க மத்திய அரசு முயற்சிக்கிறது. FCI குடோன்கள் மற்றும் துறைமுகங்கள் கூட விற்கப்படுகின்றன. மத்திய அரசு முழு நாட்டையும் விற்பனை செய்ய முயல்கிறது.

மத்திய அரசு மூன்று சர்ச்சைக்குரிய சட்டங்களான விவசாயிகள் விளைபொருட்கள் வணிகம் & வர்த்தகம், அத்தியாவசிய பொருட்கள் அவசர திருத்த சட்டம், விலை உறுதியளிப்பு & பண்ணை ஒப்பந்த அவசர சட்டம் ஆகியவற்றை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் அல்லது ஏ.பி.எம்.சி. மண்டிகளிலும், மண்டிகளுக்கு வெளியிலும் வேளாண் விளைபொருள்களை விவசாயிகள் வாங்கவோ, விற்கவோ இந்தச் சட்டங்கள் வகை செய்கின்றன.
இந்த விதிமுறைக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை கூட்டத்தில் உ.பி., ஹரியானா, ராஜஸ்தான், தெலுங்கானா, கர்நாடகா, உத்தரகண்ட் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

வேளாண் சட்டங்களை ரத்து செய்யவும் மாநிலத்தில் ஒரு பெரிய அளவிலான விவசாயிகள் இயக்கத்தை திரட்டவும் அரசுக்கு எதிரான ஒரு தொடர்ச்சியான போராட்டம் நடத்த உள்ளனர். வருகிற 27-ந் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் (பாரத் பந்த்) நடத்தப்படும் என்று விவசாய சங்க தலைவர்கள் அறிவித்தனர். முதலில், 25-ந் தேதிக்கு திட்டமிடப்பட்டது. பின்னர் 27-ந் தேதிக்கு மாற்றப்பட்டது.

BKU தலைவர் பல்பீர் சிங் ராஜேவால் கூறுகையில்,” வாக்கு அரசியலைத் தவிர அரசுக்கு எதுவும் புரியவில்லை என்றால், நாங்கள் ‘வாட் பார் சோட்’ செய்வோம் . மேற்குவங்க தேர்தலில் அதை செய்தோம். வாக்களித்தோம். முடிவுகள் தெளிவுபடுத்தின, “என்றார்.

BKU குர்னம் சிங் சதுனி கூறுகையில்,”இன்று, கூடியிருக்கும் விவசாயிகள் எண்ணிக்கை மூலம் அரசை அசைக்க முடியும் என காட்டியுள்ளீர்கள். அரசு இன்னும் அசைக்கப்பட வேண்டும். உத்தரபிரதேசத்தில் 8 கோடி விவசாயிகளின் வாக்குகள் உள்ளன. பாஜகவை தோற்கடிப்போம். விவசாயிகளிடம் இருந்து வேட்பாளர்களைப் பெற்று அவர்களிடமிருந்து அரசியல் ஆணையை பெறுங்கள். மிஷன் பஞ்சாப்பும் இருக்க வேண்டும். கொள்கை வகுப்பாளர்களை மாற்றும் வரை, எதுவும் நடக்காது” என்றார்.

ஸ்வராஜ் இந்தியாவின் தலைவர் யோகேந்திர யாதவ் கூறுகையில்,”வகுப்புவாத அரசியலைக் கண்டிக்குமாறு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்ததால், முசாபர்நகர் கலவரம் கிட்டத்தட்ட ஒவ்வொரு உரையிலும் குறிப்பிடப்பட்டது. இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் இரத்த ஆறுகள் ஓடிய அதே முசாபர்நகர் இதுதான். அரசியல் விளையாட்டில் அவர்களது வீடு எரிக்கப்பட்டது. இரு சமூகங்களை சண்டையிட வைக்கும் ஒருவர், தேசத்தின் உண்மையான மகனாக இருக்க முடியாது, ”என்றார்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு SKM குழு உருவாக்குவதற்கான திட்டத்தை வரையறுக்க அடுத்த மாதம் லக்னோவில் கூட்டங்கள் நடத்தப்படும் என்று விவசாய தலைவர்கள் கூறினர். வரும் வாரங்களில் ஹரியானா மற்றும் ராஜஸ்தான் (ஜெய்ப்பூர்) ஆகிய இடங்களில் மகாபஞ்சாயத்துகளைத் நடத்த திட்டமிட்டுள்ளனர். மிஷன் UPயின் ஒரு பகுதியாக, தேர்தலை முன்னிட்டு மாநிலத்தில் அதிக அளவிலான கூட்டங்கள் நடத்தப்படும் என கூறினர்.

கிராந்திகாரி கிசான் யூனியன் டாக்டர் தர்ஷன் பால் கூறுகையில்,”கரும்பு விலை நிர்ணயத்திற்காக போராட்டங்களை நடத்த கூட்டங்களை நடத்த உள்ளோம். போராட்டக்காரர்களின் ஆதரவுக்குப் பிறகு பஞ்சாப் விவசாயிகள் கரும்புக்கு குவிண்டாலுக்கு ரூ. 360 பெறுகின்றனர். உத்தரப் பிரதேசத்தில் உள்ள விவசாயிகள் குவிண்டாலுக்கு தற்போதைய விலை 325 ரூபாயை விட அதிக தொகையைப் பெறுவதை நாங்கள் உறுதி செய்ய வேண்டும். அதற்காக நாம் குரல் எழுப்பினால் அது சாத்தியம்”என்றார்.

இந்த நிகழ்வில் கட்சித் தலைவர் ஜெயந்த் சவுத்ரி மற்றும் RLD ஆதரவாளர்கள் பதாதகைளை ஏந்தியிருந்தனர். விவசாயிகளின் மீது ரோஜா இதழ்களை ஹெலிகாப்டரில் இருந்து இறக்க சவுத்ரிக்கு நிர்வாகம் அனுமதி மறுத்ததாக கட்சித் தலைவர்கள் கூறினர்.

இதற்கிடையில், மேடையில் 85 வயதான தலைவர் குலாம் முகமது ஜோலா இருந்தார். அவர் கலவரத்திற்குப் பிறகு 2013 இல் BKU உடன் பிரிந்து பாரதிய கிசான் மஸ்தூர் மஞ்சை உருவாக்கினார். “அவர் உடல்நிலை சரியில்லாததால் அவர் கூட்டத்தில் உரையாற்றவில்லை,” என்று ஒரு SKM செய்தித் தொடர்பாளர் கூறினார்.

source https://tamil.indianexpress.com/india/mahapanchayat-muzaffarnagar-up-polls-farmers-protest-against-bjp-339161/

Related Posts: