செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

தமிழ்நாட்டில் 2,000க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

 14 2 2022 இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 1,634 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நேற்றைய தினத்தில், 2,296 பேர் புதிதாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை இன்று 1,634 ஆக குறைந்துள்ளது. இன்றைய தினத்தில் மட்டும் 93,295 பேருக்கு மாநிலம் முழுவதும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மேற்குறிப்பிட்ட தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.

இந்த மொத்த பாதிப்பில், 960 பேர் ஆண்களும், 674 பெண்களும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல இன்று 7,365 சிகிச்சை முடித்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 33,64,013 பேர் குணமடைந்துள்ளனர்.

அதேபோல உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37,932 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

source https://news7tamil.live/less-than-2000-corona-cases-in-tamil-nadu.html