ஞாயிறு, 6 பிப்ரவரி, 2022

கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு கட்ட ரூ. 4 லட்சம் மானியம்; தமிழக அரசு அறிவிப்பு

 5 2 2022 கட்டடத் தொழிலாளர்கள் தங்களுக்கு சொந்தமான வீடுகளைக் கட்டவோ அல்லது வாங்கவோ, தமிழக அரசு வழங்கும் ரூ. 4 லட்சம் மானியத் தொகையை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று தமிழ்நாடு கட்டட தொழிலாளர்கள் வாரியம் அறிவித்துள்ளது.

முதல்வர் சட்டமன்றத்தில், கட்டட தொழிலாளர்கள் தங்களுக்கு சொந்தமாக வீடுகளைக் கட்டிக் கொள்ள ரூ. 4 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ள்ளார்.

கட்டடத் தொழிலாளர்கள் வாரியத்தின் தலைவர் பொன் குமார் இது தொடர்பாக குறிப்பிடுகையில், முதல்கட்டமாக இந்த மானியத்தொகை தகுதிபெற்ற 10 ஆயிரம் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் கீழ், கட்டுமானத் தொழிலாளர்கள் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அல்லது பயனாளிகள் தலைமையிலான கட்டுமானம் (BLC) மூலம் கட்டப்பட்ட குடியிருப்புகளை ஒதுக்கவும் நிதி உதவியை தேர்வு செய்யலாம்.

எந்தவொரு கட்டுமானத் தொழிலாளியும் சொந்தமாக மனை வைத்திருக்கும் மற்றும் வீடு கட்ட விரும்புவோருக்கு, வீடு கட்டும் போது பல்வேறு கால கட்டங்களில் செலவுகளை சமாளிக்க ரூ. 4 லட்சம் மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தது கட்டப்படும் வீடு 300 சதுர அடி இருக்க வேண்டும் என்றும் அதற்கான தொகையை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (DRDA) மூலம் அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியிருப்புகளை தேர்வு செய்யும் கட்டுமான தொழிலாளர்களுக்கு, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளின் அடிப்படையில் நிதி உதவி வழங்கப்படும்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-construction-workers-to-get-rs-4-lakh-subsidy-for-houses-406762/