திங்கள், 14 பிப்ரவரி, 2022

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பிஎஸ்எல்வி 52 ராக்கெட்

 3 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் செலுத்தப்பட்ட பிஎஸ்எல்வி 52 ராக்கெட் வெற்றிக்கரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் இருந்து 3 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி 52 ரக ராக்கெட் காலை 5.59 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. தொடர்ந்து, துல்லியமான பாதையில் செலுத்தப்பட்ட ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.

இந்த பிஎஸ்எல்வி சி52 ராக்கெட் மூலம் ஈஓஎஸ்-04 என்ற செயற்கைக்கோளும், இன்ஸ்பயர் சாட்-1 மற்றும் ஐ.என்.எஸ்-2டிடி என்ற 2 சிறிய வகையிலான செயற்கைக்கோள்களும் ஏவப்பட்டன. இஸ்ரோ தலைவராக சோமநாத் பதவியேற்ற பின், முதல் ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளது.

அதேபோல், இந்த ஆண்டில் இஸ்ரோவால் ஏவப்பட்ட முதல் செயற்கைக்கோள் இதுவாகும். செயற்கைக்கோளின் மொத்த எடை ஆயிரத்து 170 கிலோ ஆகும். ஆயுட்காலம் 10 ஆண்டுகள் ஆகும். வானிலை மாற்றங்கள், விவசாயம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளை இந்த செயற்கைகோள்கள் மூலம் கண்காணிக்க முடியும் எனவும் பூமியின் வெப்ப நிலை மாற்றங்களை அறிந்து கொள்ள முடியும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. பிஎஸ்எல்வி சி52 ராக்கெட் மூலம் 3 செயற்கைக்கோள்களை விண்ணில் வெற்றிகரமாக ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

source https://news7tamil.live/isro-successfully-launches-pslv-c52.html