வியாழன், 3 பிப்ரவரி, 2022

குண்டூர் ஜின்னா கோபுரத்தில் மூவர்ணக்கொடி

 2 2 2022 ஆந்திரப் பிரதேச மாநிலம், குண்டூரில் ஜின்னா கோபுரம் அமைந்துள்ளது. இந்தக் கோபுரத்தின் பெயரை மாற்றி முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் என பெயர் சூட்டுமாறு அந்த மாநில பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

இந்த நிலையில், இந்தக் கோபுரத்தில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு ஹிந்து வாஹினி அமைப்பினர் எனக் கூறிக் கொண்டு தடை உத்தரவை மீறி 3 பேர் குடியரசு தினத்தன்று வந்தனர்.

அவர்களுடன் 15 முதல் 20 பேர் கொண்ட கும்பல் வந்தது. அவர்களை போலீஸாரர் கைது செய்து காவலில் வைத்து அன்றைய தினமே விடுவித்தது.

இந்தச் சூழலில், குண்டூர் கிழக்கு தொகுதி எம்எல்ஏவும் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான முகமது முஸ்தபா ஜின்னா கோபுரத்துக்கு மூவர்ணக்கொடியை வரைய நடவடிக்கை எடுத்தார்.

அவர் கூறுகையில், ‘பல்வேறு குழுக்களின் கோரிக்கையை ஏற்று இந்த கோபுரத்துக்கு மூவர்ணக்கொடியை பிரதிபலிக்கும் வகையில் வர்ணம் தீட்டப்பட்டது.  பிப்ரவரி 3-ஆம் தேதி இந்த கோபுரத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பாஜகவினர் வகுப்புவாத மோதல்களை தூண்டுவதற்கு பதிலாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யலாம்’ என்றார்.

source https://tamil.indianexpress.com/india/jinnah-tower-guntur-andhra-pradesh-tricolour-bjp-405564/