ஞாயிறு, 13 பிப்ரவரி, 2022

ஹிஜாப்: உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகள் கருத்து கூற இந்தியா எதிர்ப்பு

 12 2 2022 ஹிஜாப் விவகாரம் தொடர்பாக பல்வேறு நாடுகள் கருத்து தெரிவித்து வந்த நிலையில். உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் வகையிலான கருத்துக்கள் வரவேற்கப்படாது என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பானது, கர்நாடகாவில் நடந்து வரும் ஹிஜாப் சர்ச்சை குறித்து சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க அலுவலகம் (ஐஆர்எஃப்) அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து வந்துள்ளது.

ஐஆர்எஃப் தனது அறிக்கையில், “கர்நாடக ஹிஜாப் தடை மத சுதந்திரத்தை மீறுவதாகவும், பெண்கள் மற்றும் சிறுமிகளை களங்கப்படுத்துகிறது மற்றும் ஒதுக்கி வைப்பதாகவும் இருக்கிறது என குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில், வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி வெளியிட்டுள்ள பதிவில், கர்நாடக மாநிலத்தில் சில கல்வி நிலையங்களில் முன்வந்துள்ள ஹிஜாப் பிரச்சனை குறித்து பெங்களூரு உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. எங்கள் அரசியலமைப்பு, வழிமுறைகள், ஜனநாயக நெறிமுறைகளின் அடிப்படையில் இதுபோன்ற சிக்கல்களுக்கு தீர்வு காணப்படும். இந்தியாவை நன்கு அறிந்தவர்கள் அந்த உண்மைகளை உரியமுறையில் பாராட்டுவர். இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் வெளி கருத்துகள் எப்போதும் ஏற்கப்படாது என தெரிவித்துள்ளார்.

source https://tamil.indianexpress.com/india/india-after-global-remarks-on-karnataka-hijab-row-410577/