
Tamil health tips: இன்றைய தலைமுறையினர் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக உயர் கொலஸ்ட்ரால் (High Cholesterol) உள்ளது. மனித உடலில் இரண்டு வகையான கொலஸ்ட்ரால் உள்ளது – HDL (நல்ல கொழுப்பு) மற்றும் LDL (கெட்ட கொழுப்பு). எல்டிஎல் அளவு அதிகரிக்கும் போது, அது நமது இதய ஆரோக்கியத்தை பாதிக்கிறது. அதனால்தான் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நமது கொலஸ்ட்ரால் அளவைக் கண்காணிக்க நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இன்று, பர்கர்கள், பீட்சாக்கள், சிப்ஸ் போன்றவைகள் நம் வாழ்வில் தவிர்க்க முடியாத பகுதியாக மாறிவிட்ட நிலையில், சில சமயங்களில் நொறுக்குத் தீனிகளை உண்பது பரவாயில்லை என்றாலும், நம் ஆசை கட்டுப்பாட்டை மீறும் போது பிரச்சனை எழுகிறது. அதிக அளவு வறுத்த மற்றும் நொறுக்குத் தீனிகளை உண்ணும் வாழ்க்கை முறை பல நோய்களுக்கு வழிவகுக்கிறது. மேலும், அதிக கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சனையை கொண்டு வருகிறது.
நல்ல உணவு, வழக்கமான உடற்பயிற்சி, சிறந்த உடல் எடை மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவற்றின் மூலம் அதிக கொலஸ்ட்ராலைத் தடுக்கலாம் மற்றும் திறம்பட கட்டுப்படுத்தலாம் என்று உணவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். அந்த வகையில் உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை அளிக்கவும், உடலை ஆரோக்கியமானதாக வைத்திருக்கவும் உதவும் மூன்று சூப்பர் ஃபுட்ஸ்களை இங்கு பார்க்கலாம்.

தயிர்

கொழுப்பை கட்டுப்படுத்துவதில் முக்கிய உணவுப் பொருளாக தயிர் உள்ளது. தயிரில் இருக்கும் பொட்டாசியம், ஜிங்க், மெக்னீசியம், புரதம் மற்றும் கால்சியம் போன்ற முக்கிய சத்துக்கள் உடலில் சேரும் கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி உடலை ஆரோக்கியாமாக வைக்க உதவுகின்றன.
பழங்கள்

பெர்ரி, ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு போன்ற நம்முடைய உடலில் சேரும் கேட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் முக்கிய பழங்களாக உள்ளன. மாம்பழம் மற்றும் அன்னாசி போன்ற இனிப்பு பழங்களை சாப்பிட்டால் சர்க்கரை அளவு அதிகரிக்கும். எனவே, நீங்கள் எடுத்துக்கொள்ளும் பழங்களில் அதிக கவனம் அவசியம்.
உறுப்பு இறைச்சி
உறுப்பு இறைச்சிகளில் பல்வேறு வகைகள் உள்ளன. ஒவ்வொரு இறைச்சியும் மாறுப்பட்ட சுவை மற்றும் ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளன. கல்லீரல் ஒரு நச்சு உறுப்பாகும். உறுப்பு இறைச்சிகளிலேயே அதிக ஊட்டச்சத்துக்களை கொண்ட இறைச்சியாக இது உள்ளது. எனவே, மூளை, ஈரல் போன்ற உறுப்பு இறைச்சி உட்கொள்ளலாம்.
இந்த உறுப்பு இறைச்சிகள் மிகவும் சத்தானவை. தவிர இவற்றில் ஏராளமான நன்மைகள் இருப்பதால், உங்கள் தினசரி உணவில் உறுப்பு இறைச்சியை சேர்த்துக் கொள்ளலாம். இவை கொழுப்பை அதிகரிக்காது.
source https://tamil.indianexpress.com/food/foods-to-reduce-bad-cholesterol-in-the-body-tamil-480385/