உதய்பூரில் தையல்காரர் வெட்டிக் கொல்லப்படுவதற்கு சரியாக ஒரு வாரத்திற்கு முன்பு, ஜூன் 21 அன்று மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் 54 வயதான கடை உரிமையாளர் உமேஷ் பிரஹலாத்ராவ் கோல்ஹே கொல்லப்பட்டார்.
ஒரு தொலைக்காட்சி விவாதத்தில், நபிகள் நாயகத்தைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறிய பாஜகவின் நுபுர் ஷர்மாவை ஆதரிக்கும் சமூக ஊடகப் பதிவிற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக கோல்ஹே கொல்லப்பட்டதாக இப்போது புலனாய்வாளர்கள் நம்புகிறார்கள்.
இதுகுறித்து உமேஷ் கோஹ்லேவின்’ மகன் சங்கேத் கோஹ்லேவின் புகாரின் பேரில் அமராவதியில் உள்ள சிட்டி கோட்வாலி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆரம்ப விசாரணையில், முட்சீர் அகமது (22) மற்றும் ஷாருக் பதான் (25) ஆகிய இருவர் ஜூன் 23 அன்று கைதாகினர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொலையில் மேலும் நான்கு நபர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது, அதில் அப்துல் தௌபிக், 24, சோயிப் கான், 22, மற்றும் அதிப் ரஷித், 22 ஆகிய மூன்று பேர், ஜூன் 25 அன்று கைது செய்யப்பட்டனர். மற்றொரு குற்றவாளியான ஷமிம் அகமது ஃபிரோஸ் அகமது, தலைமறைவாக உள்ளான்.
ஜூன் 21 ஆம் தேதி இரவு 10 மணி முதல் 10.30 மணிக்குள் உமேஷ் கோல்ஹே தனது ‘அமித் மெடிக்கல் ஸ்டோர்’ கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
அவருடன் சங்கேத் (27) மற்றும் அவரது மனைவி வைஷ்ணவி மற்றொரு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தனர்.
சங்கேத் போலீசில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: “நாங்கள் பிரபாத் சவுக்கிலிருந்து சென்று கொண்டிருந்தோம், எங்கள் ஸ்கூட்டர் மகிளா கல்லூரி புதிய உயர்நிலைப் பள்ளியின் வாயிலை அடைந்தது. அப்போது எனது தந்தையின் ஸ்கூட்டருக்கு முன்னால் திடீரென இருவர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் என் தந்தையின் பைக்கை நிறுத்தினர், அவர்களில் ஒருவர் அவரது கழுத்தின் இடது பக்கத்தில் கத்தியால் குத்தினார்.
இதில் என் தந்தை கீழே விழுந்து ரத்தம் வழிந்தோடியது. நான் என் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு உதவிக்காக கத்த ஆரம்பித்தேன். மற்றொரு நபர் வந்து, மூவரும் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
சுற்றியுள்ளவர்களின் உதவியுடன், கோல்ஹே அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் சிகிச்சையின் போது இறந்தார்.
அமராவதி நகர காவல்துறையின் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், இதுவரை கைது செய்யப்பட்ட ஐந்து குற்றவாளிகளும், மற்றொரு குற்றவாளியின் உதவியை நாடினர், அவர் தப்பிச் செல்ல ஒரு காரும் 10,000 ரூபாயும் வழங்கியதாக எங்களிடம் கூறியுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் தலைமறைவான ஒருவர், கொலைக்கான வேலைகளை செய்வதற்காக, மற்ற 5 பேரை ஒதுக்கினார்.
அவர்களில் இருவரை கோல்ஹேவைக் கண்காணிக்கும்படியும், மற்ற மூவருக்கும் மெடிக்கல் ஸ்டோரை விட்டு வெளியே வரும்போது எச்சரிக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டார். அவர்கள் கோல்ஹேவைத் தடுத்து அவரைத் தாக்கினர். சங்கேத்தின் புகாரின் பேரில், சிட்டி கோட்வாலி காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.
“நுபுர் ஷர்மாவை ஆதரித்து கோல்ஹே ஒரு சமூக ஊடகப் பதிவை வாட்ஸ்அப்பில் பரப்பியதை விசாரணையின் போது அறிந்தோம். தவறுதலாக, அவர் தனது வாடிக்கையாளர்கள் இருந்த முஸ்லிம் உறுப்பினர்களைக் கொண்ட குழுவில் செய்தியை வெளியிட்டார்.
கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் ஒருவர், இது நபிகளாரை அவமதிப்பதாகவும் அதனால் அவர் இறக்க வேண்டும் என்றும் கூறினார்.
கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தி, தொலைபேசிகள், வாகனம் மற்றும் குற்றத்திற்கு பயன்படுத்திய துணிகள் ஆகியவற்றை போலிஸார் கைப்பற்றியதோடு, சம்பவம் நடந்த இடத்திலிருந்து சிசிடிவி காட்சிகளையும் பெற்றுக்கொண்டனர்.
கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்களை மாவட்ட தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளோம், மேலும் தொழில்நுட்ப ஆதாரங்களை ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது.
கொலைக்கு அவரது தந்தையின் கொலைக்கு சமூக ஊடக இடுகை காரணமா என்று கேட்டபோது, சங்கேத் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறியது; “எனது தந்தை மிகவும் மகிழ்ச்சியான நபர். அவர் யாரையும் பற்றி தவறாக பேசியதில்லை, எந்த அரசியல் கட்சியிலும் தொடர்பு கொண்டவர் இல்லை. அவரது சமூக ஊடகப் பதிவின் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டார் என்று கேள்விப்பட்டேன், ஆனால் நான் அவரது பேஸ்புக்கை சோதித்தபோது அதில், ஆட்சேபனைக்குரிய எதுவும் இல்லை.
என்ன உள்நோக்கம் என்பதை காவல்துறையால் மட்டுமே சொல்ல முடியும். எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் அவர் கொள்ளைக்காக கொல்லப்படவில்லை என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்” என்றார்.
அமராவதி நகர போலீஸ் கமிஷனர் ஆர்த்தி சிங் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தொடர்பு கொண்டபோது, “இந்த வழக்கில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், மீதமுள்ளவர்களை நாங்கள் தேடி வருகிறோம், யாருடைய கைது’ கொலையின் பின்னணியில் உள்ளது என்பது விசாரணையில் தெரியும்” என்றார்.
source https://tamil.indianexpress.com/india/shop-owner-in-amravati-likely-killed-in-retaliation-for-post-supporting-nupur-sharma-473786/