புதன், 19 ஜூலை, 2023

அமலாக்கத் துறையால் இன்னும் போகப் போக பல கொடுமைகள் நடக்கும் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

 

அமலாக்கத் துறையால் இன்னும் போகப் போக பல கொடுமைகள் நடக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 

பெங்களூருவில் நடந்த 2 நாட்கள் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு விமானம் மூலம் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

அப்போது பேசிய அவர், உங்கள் வாழ்த்துகள் உடன் கூட்டம் சிறப்பாக அமைந்தது. இந்தியாவின் ஜனநயகம் அரசியல் அமைப்பு சட்டம், மதசார்பின்மை, மாநில சுயாட்சி, ஏழை எளிய மக்களின் நலன் மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கத் தவித்து வருகிறது.

அதனால் மத்தியில் உள்ள பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக வரும் 2024ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலத்தை சேர்ந்த எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளது.

 

பாட்னாவில் நடந்த முதல் கூட்டத்தில் 16 கட்சிகளும், பெங்களூருவில் நடந்த கூட்டத்தில் 26 கட்சிகளும் கலந்து கொண்டுள்ளது. தமிழ்நாட்டை போல் இந்தியா முழுவதும் கூட்டணி அமைந்து வெற்றி பெறுவதற்கான வியூகங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

 

பாட்னாவிலும், பெங்களூவில் நடந்த கூட்டத்தை பொறுத்தவரை எனக்கு மகிழ்ச்சி கிடைத்துள்ளது. இது எனக்கு மட்டுமின்றி இந்தியாவுக்கு மகிழ்ச்சி தரும் என்ற நம்பிக்கையை நாடு எதிர்பார்த்து காத்து இருக்கிறது.

 

இந்த இந்த கூட்டணிக்கு இந்தியா என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. அடுத்த கூட்டத்தை மும்பையில் நடத்த திட்டமிட்டுள்ளோம். 2024 புதிய இந்தியாவுக்கான ஆண்டாக அமையும்.

கேள்வி: அமலாக்கத்துறை சோதனையையால் மிகப்பெரிய நெருக்கடியை திமுக சந்திக்கிறது என்று கருதுகிறீர்களா?

பதில்: அமலாக்கத் துறை சோதனைகள் எல்லாம் எதிர்பார்த்த ஒன்றுதான். இன்னும் போகப் போக பல கொடுமைகள் நடக்கும். அனைத்தையும் சட்டரீதியாக சந்திக்கத் தயாராக இருக்கிறோம்.

கேள்வி: ஊழல் கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்துள்ளதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளாரே?

பதில்: இன்றைக்கு டெல்லியில் நடந்த கூட்டத்தில் அருகில் யார் யாரை உட்கார வைத்திருக்கிறார்கள் என்று பார்த்தீர்களா? அவரால் குற்றம்சாட்டப்பட்டவர்கள், ஊழல்வாதிகள் எனச் சொல்லப்பட்டவர்கள் தே.ஜ. கூட்டணியில் இடம்பெற்றுள்ளனர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தெரிவித்தார்.

 


source https://news7tamil.live/more-and-more-atrocities-will-be-committed-by-the-enforcement-department-chief-minister-m-k-stalin.html