புதன், 19 ஜூலை, 2023

தமிழ்நாட்டை தாண்டினால் திமுக ஒரு வாக்கை கூட பெற முடியாது! டெல்லி, பஞ்சாப்பை தாண்டினால் கெஜ்ரிவால் ஒரு வாக்கை கூட பெற முடியாது! – பிரதமர் விமர்சனம்

 18 7 23 

தமிழ்நாட்டை தாண்டினால் திமுக ஒரு வாக்கைகூட பெற முடியாது! டெல்லி, பஞ்சாப்பை தாண்டினால் கெஜ்ரிவால் ஒரு வாக்கை கூட பெற முடியாது! என டெல்லியில் பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார்.

மூன்றாவது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பாஜக தீவிரமான முயற்சியில் இறங்கியுள்ளது. அதற்காக கூட்டணியை பலப்படுத்துவதுடன், புதிய  கட்சிகளை இணைத்து கூட்டணியை விரிவாக்கம் செய்யும் நடவடிக்கையிலும்  ஈடுபட்டுள்ளது.
இதற்காக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில்  இன்று மாலை 5 மணிக்கு ஹோட்டல் அசோகாவில் நடைபெற்றது. பிரதமர் மோடி  மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பங்கேற்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட 38 கட்சிகளை சேர்ந்த கட்சித்தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் எதிர்கட்சிகளின் INDIA – கூட்டணி குறித்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. எதிர்க்கட்சிகளின் கூட்டணியை பொறுத்தவரை ஊழல் நிறைந்தவர்கள் என கூட்டத்தில் விமர்சிக்கப்பட்டது.
தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டணி கட்சியினர் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:

அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி, பஞ்சாப்புக்கு வெளியே ஒரு ஓட்டை கூட பெற முடியாது. தமிழ்நாட்டு எல்லையை தாண்டினால் திமுக ஒரு வாக்கைகூட பெற முடியாது. நாடு கடுமையான சூழலில் இருந்த போது அதை மீட்டெடுக்க தேசிய ஜனநாயக கூட்டணி பெரிய அளவில் பாடுபட்டது. மாநிலங்களை வலுப்படுத்துவதன் மூலம் தேசத்தை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் தேசிய ஜனநாயக கூட்டணி செயல்பட்டு வருகிறது.

பிரகாஷ் சிங் பாதல், பால் தாக்கரே ஆகியோரது உண்மையான விசுவாசிகள் தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியுடன் உள்ளனர். கூட்டணிக்கு என்று இந்தியாவில் பாரம்பரியம் உள்ளது ஆனால் எதிர்மறையான சிந்தனையுடன் அமைக்கப்படும் எந்த ஒரு கூட்டணியும் வெற்றி பெறாது. யாரையும் எதிர்ப்பதற்காவோ, பழிவாங்குவதற்காகவோ தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்படவில்லை. மாறாக நாட்டை வளர்ச்சியடைய வைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் தான் கூட்டணி அமைக்கப்பட்டது.

NDA என்பதன் பொருள் N – புதிய இந்தியா, D – வளர்ச்சியடைந்த நாடு, A – மக்கள் மற்றும் பிராந்தியத்தின் விருப்பம். வரும் 25 ஆண்டுகளில் ஒரு பெரிய இலக்கை அடைய நமது நாடு பெரிய நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கும் தருணம் இதுவாகும். அந்த இலக்கு என்பது வளர்ந்த இந்தியா, தன்னிறைவு பெற்ற இந்தியா என்பதாகும்.

தேசமே முதன்மையானது, வளர்ச்சியே பிரதானமானது, மக்களை வலுப்படுத்துவதே முதன்மையானது என்பதே தேசிய ஜனநாயக கூட்டணியின் குறிக்கோள். இந்தியாவின் மீது உலக நாடுகளுக்கு நம்பிக்கை ஏற்பட காரணம் வலுவான மற்றும் திறத்தன்மையுடன் ஆட்சி தான். நாங்கள எதிர்கட்சியாக இருந்தபோது நாட்டின் நலனை கருத்தியே ஆக்கப்பூர்வமான அரசியல் செய்தோம், எதிர்கட்சிகளின் ஊழலை வெளிக்கொணர்ந்தோம்.

மக்களின் முடிவுகளை என்றுமே அவமதித்தது இல்லை. ஆளும் அரசுக்கு எதிராக எந்த அந்நிய நாடுகளிடமும் உதவியை நாடவில்லை. நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு எப்போதும் முட்டுக்கட்டை போடவில்லை. 2014ம் ஆண்டுக்கு முன்பாக பிரதமரை விட அதிகாரம் படைத்தவர் ஆட்சி நிர்வாகம் செய்து சீர்குலைத்தார் என சோனியா காந்தியை மறைமுகமாக பிரதமர் மோடி சாடினார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, நாட்டு மக்கள், குறிப்பாக ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்த வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் கடந்த 9 ஆண்டுகாலம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு செயல்பட்டுள்ளது. வெறும் வாக்கு வங்கிகளாக மட்டுமே இருந்த மக்களை வளர்ச்சி பாதைக்கு மாற்றியதுதான் தேசிய ஜனநாயக கூட்டணியின் சாதனை.

காந்தி வழியிலும் அம்பேத்கர் வழியிலும் ராம்மனோகர் லோகியா வழியிலும் தேசிய ஜனநாயக கூட்டணி செயல்படுகிறது. அரசியலில் யாரையும் போட்டியாக பார்க்கலாம் ஆனால் எதிரியாக பார்க்க கூடாது. ஆனால் தற்போது எதிர்க்கட்சிகள் என்னையும், தேசிய ஜனநாயக கூட்டணியையும் அவதூறாக பேசுவதையே வடிக்கையாக கொண்டுள்ளனர். ஆனால், நாங்கள்தான் பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்

source https://news7tamil.live/dmk-cant-get-even-one-vote-if-tamil-nadu-is-crossed-kejriwal-wont-get-a-single-vote-if-he-crosses-delhi-and-punjab-prime-minister-modi-review.html