திங்கள், 31 ஆகஸ்ட், 2015

பிரபல எழுத்தாளர் "கல்பர்கி" சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.....!!

அதிர்ச்சி செய்தி.........!!
கர்நாடகாவில் காவி இந்துத்துவா அமைப்புகளுக்கு எதிராக பேசி, எழுதி வந்த பிரபல எழுத்தாளர் "கல்பர்கி" சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.....!!
‪#‎ஈனப்பிறவிகளான‬
இந்துத்துவா கையில் சிக்கி நாடு நாசமாபோகுது.....

அஹமதியா முஸ்லிம் ஜமாத் என்கிற பெயரில் ஸ்டால் அமைத்துள்ளனர்

அன்பார்ந்த இஸ்லாமிய சொந்தங்களே
ஓர் எச்சரிக்கை பதிவு
மதுரை புத்தக கண்காட்சியில் -அஹமதியாக்கள் அபாயம் ....
முஸ்லிம் உலமாக்கள் அனைவராலும் காபிர்கள் என மார்க்க தீர்ப்பு வழங்கப்பட்ட "அஹமதியாக்கள் "மதுரை புத்தக கண் காட்சியில் அஹமதியா முஸ்லிம் ஜமாத் என்கிற பெயரில் ஸ்டால் அமைத்துள்ளனர்
அதன் உள்ளே அல்லாஹ்வுடைய வசனங்களை தங்களுக்கு சாதகமாக மாற்றி எழுதிய நூலை திருகுர்ஆன் என்கிற பெயரிலும் ,
நம் நாயகம் முஹம்மத் நபி பெயரில் சில புத்தகங்களும் ,அருகாமையில் மிர்சா குலாம் இறைவனின் தூதர் என்கிற புத்தகங்களும் வைத்துள்ளனர் .
இவர்கள் காபிர்கள் என்கிற விழிப்புணர்வு இல்லாத நம் இஸ்லாமிய மக்கள் அவர்களும் எதோ ஓர் முஸ்லிம் ஜமாஅத் என நினைத்து கொண்டு ஸ்டாலில் ஸ்டால் எண் 9⃣8⃣ க்குள் சென்று சமூகத்தில் குழப்பத்தை உண்டாக்கும் .....
ஈமானை நாசம் செய்யும் நச்சு புத்தகங்களையும் ,அவர்கள் வைத்துள்ள பொய்யான குரானையும் வாங்கி செல்லும் கொடுமை நடக்கிறது .
அல்லாஹ் நம்மை காப்பாற்றுவானாக
உள்ளே ஓர் 45 வயது உள்ள படித்த தோரணையில் உள்ள இஸ்லாமிய நபர் சுன்னத் வல் ஜமாத்தோடு contravarsary இல்லாத புத்தகங்களை மட்டும் காட்டுங்க என்று அஹமதியாக்களிடம் அப்பாவியாக கேட்டார்...
இதுதான் நம் சமூகத்தின் அறியாமைக்கு உதாரணம் .
ஸ்டாலிற்குள் நுழையும் முஸ்லீம்கள் அனைவருக்கும் அஹமதியாக்கள் பற்றிய நோட்டீஸ் கள் ,விளக்க புத்தகங்கள் இலவசமாக திணிக்கின்றனர் .
அதை படிக்கும் அரை குறை முஸ்லிம் கட்டாயம் மார்க்கம் பற்றி குழப்பத்தில் மூழ்குவான் .
மேலும் வரும் அணைத்து முஸ்லிம்களின் பெயரையும் பெண்கள் உட்பட செல்போன் நம்பர்களும் வாங்கி லாங் சைஸ் நோட்டில் எழுதி கொள்கிறார்கள்
.(போனில் தொடர்பு கொண்டு அப்பாவிகளை இஸ்லாமிய மார்கத்தில் இருந்து காபிராக மாற்ற ).
2 நாட்களில் சுமார் 25 பக்கங்களுக்கு மேல் நோட் நிரம்பி இருப்பது பகீர் என்கிறது .
அல்லாஹ் அவர்களை காப்பாற்ற வேண்டும்...
.அங்கேயே சிலரை மூளை சலவை செய்து குழப்பும் அயோக்கிய தனமும் நடக்கிறது .
இது பற்றிய ஓர் விழிப்புணர்வை உடனே தொடங்குவதும்,ஜூம்ஆ மேடைகளில் இவர்கள் பற்றி பேசுவதும் முஸ்லிம் ஜமத்தார்களின் ,உலமாக்களின் உடனடி கடமையாகும் .
மதுரையில் உள்ள இஸ்லாமிய இயக்கங்கள் இதற்கு உடனடியாக நடவேடிக்கை எடுக்க வேண்டும்
இதை உடனே share செய்வது மட்டுமே 6.9.2015 வரை நடக்கும் புத்தக கண்காட்சியில் ஊடுருவி உள்ள அஹமதியக்களிடமிருந்து நம் முஸ்லிம் மக்களை காப்பாற்ற முடியும்...
இன்ஷா அல்லாஹ்
சிலரை காபிர்கள் ஆக்காமலும் தடுக்க முடியும் ...
அல்லாஹ் நம்மை காப்பாற்றட்டும் ...

சமூக அந்தஸ்த்து காற்றை சுவாசித்தோம். இஸ்லாமியத்தை நாங்கள் ஏற்றுக் கொண்டதன் விளைவாக, சாதிப்பிரிவுகள் எங்களை விட்டு ஒழிந்து, சகோதரத்துவமும் சமத்துவமும் உண்டாகி

தென்காசி அருகே மீனாட்சிபுரம் என்ற ஓர் சிறு கிராமம் உள்ளது. அக்கிராமத்தில் நடந்த ஓர் விசித்திரமான நிகழ்வை கேள்விப்பட்டு ஆச்சரியமடைந்தேன். 1981-ஆம் ஆண்டு, அங்கு வாழ்ந்த 300 குடும்பங்களில் 210 குடும்பத்தினர் இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு ஒரே நேரத்தில் மதம் மாறினார்களாம்.. ஒட்டுமொத்த இந்தியாவையே அதிர்ச்சியடைய வைத்த நிகழ்வு அது..
ஏன் மாறினார்கள்? ஒருவரிடம் கேட்டேன்.. ''எனக்கு அப்போது வயது 12. இஸ்லாமிய சமயத்திற்கு மாறுவதற்கு 2 நாள் முன்பாக, உயர் சாதியினர் இருவரை தலித் இனத்தைச் சேர்ந்த சிலர் கொலை செய்தார்கள். இந்த இரட்டைக்கொலை எங்கள் வாழ்வில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஏற்கெனவே நாங்கள் உயர் சாதியினரால் கடுமையான அடக்குமுறைக்கு ஆட்பட்டிருந்தோம். இச்சம்பவத்தால் உயர்சாதியினர் எங்கள் மீதான அடக்குமுறையை மேலும் அதிகப்படுத்தக்கூடும் என பயந்தோம். மேலும் இந்த இரட்டைக்கொலையால் மீனாட்சிபுரத்தில் போலீசார் குவிக்கப்பட்டு, விசாரணை என்கிற பெயரில் ஒன்றுமறியாத தலித் மக்களை அடித்து துன்புறுத்தினர்.
ஆதிக்க சக்திகளின் ஒடுக்குதல்களிலிருந்து விடுதலை பெறவும், போலீசாரின் அதிரடி நடவடிக்கைகளிலிருந்து தப்பிக்கவும் எங்களுக்கு ஒரு யோசனை தோன்றியது. உயர் சாதியினர் என்கிற அந்தஸ்தைப் பெற்றாலொழிய நாங்கள் இனி நிம்மதியாக வாழமுடியாது என்று நிலைமைக்கு தள்ளப்பட்டோம். காலம் தாழ்த்தாமல் உடனே கிட்டத்தட்ட 300 குடும்பங்கள் ஒரே நேரத்தில் இஸ்லாமிய சமயத்திற்கு மாறினோம்.
அதற்குப்பின் எங்கள் வாழ்க்கை முறையில் பல திருப்பங்கள் ஏற்பட்டு, விடிவுகாலம் பிறந்தது. ஏளனமாக சாதிப்பெயரை சொல்லி அழைத்தவர்கள் மரியாதையாக 'பாய்' என்றழைக்க தொடங்கினர். ஒரு நேரத்தில் தெருக்களில் நுழைய தடை விதித்தவர்கள், வீடுகளுக்குள் அழைத்து விருந்து கொடுத்தனர். பல சாதீய தீண்டாமைகள் படிப்படியாக குறைந்து, சமூக அந்தஸ்த்து காற்றை சுவாசித்தோம். இஸ்லாமியத்தை நாங்கள் ஏற்றுக் கொண்டதன் விளைவாக, சாதிப்பிரிவுகள் எங்களை விட்டு ஒழிந்து, சகோதரத்துவமும் சமத்துவமும் உண்டாகி, இப்போது மிகவும் கெளரவத்துடன் நடத்தப்பட்டு வருகிறோம்'' என்கிறார்..
படம்: மீனாட்சிபுரம் Masjid

சனி, 29 ஆகஸ்ட், 2015

மொபைல் டேட்டாவை தெரிந்து கொள்வோம் !!!



நம் மொபைல் டேட்டாவை ஆன் செய்தவுடன் 2G, E , 3G , H ,H+ Symbol வருவதை பார்த்திருக்கிறோம். இவற்றை பற்றிய ஒரு சிறிய கண்ணோட்டம்.
1). "2G"
இது 2G நெட்வெர்க் இன்டர்னெட் GPRS (General Packet Radio service) கனெக்ட் செய்ததற்கான symbol.
இதன் வேகம் மிக மிக குறைவாகவே இருக்கும். இது 2000-2009 ஆண்டுகளுக்கிடையில் அதிகம் பார்த்திருக்கிறோம். இதன் மூலம் நீங்கள் 1GB dataவை டவுன்லோடிங் செய்ய 165மணி நேரமும், 1GB dataவை அனுப்ப அதே 165மணி நேரமும் பிடிக்கும்.
2). "E"
இதுவும் 2G(2.5G) EDGE (Enhanced Data access for GSM Evaluation) மொபைல் இன்டர்நெட் ஆகும். 2008 ஆம் ஆண்டு முதல் இதன் பயன்பாடு அதிகமாக உள்ளது. இதன்மூலம் நாம் 1GB dataவை டவுன்லோடிங் செய்ய 44மணி நேரமும், 1GB dataவை அனுப்ப 89மணி நேரமும் ஆகும். இந்த "E" பயன்பாடு தான் இந்தியாவில் பொரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர்.
3). "3G"
இது 3G மொபைல் இன்டர்நெட் UMTS (Universal Mobile Telecom System) கனெக்ட் செய்வதன் மூலம் தோன்றும் குறி. இதை இயங்க அவசியம் 3G இயங்குதள மொபைல்(SmartPhone) தேவை. இதன் மூலம் நாம் 1GB dataவை 6மணி நேரத்தில் டவுன்லோடும், அதே 1GB dataவை 18மணி நேரத்தில் அனுப்ப இயலும்.
4. Symbol "H"
இது 3G மொபைல் இன்டர்நெட் HSPA (High Speed Packet Aceess) கனெக்ட் செய்வதன் மூலம் தோன்றும் குறி. இதை Smart Phoneகளின் மூலம் மட்டுமே பயன்படுத்த முடியும். இதன் மூலம் நாம் 1GB dataவை 25நிமிட நேரத்தில் டவுன்லோடும்,அதே 1GB dataவை 45நிமிட நேரத்தில் அனுப்ப இயலும்.
5). "H+"
இதுவும் 3G மொபைல் இன்டர்நெட் (Evolved High Speed Packet Access) கனெக்ட் செய்வதன் மூலம் வரும் குறியீடு. இதை இயங்க அவசியம் 3G இயங்குதள மொபைல்(SmartPhone) தேவை. இதன் மூலம் நாம் 1GB dataவை 5-20நிமிடங்களில் டவுன்லோடும், 1GB dataவை 15-39 நிமிட நேரத்தில் அனுப்ப இயலும்.
6). "4G"
இச்சேவை 3G network internet - LTE (Long Term Evolution) இந்தியாவில் ஒரு சில நகரங்களில் மட்டுமே கிடைக்கின்றது. இதன் வேகம் மிகவும் அதிகம். இதை இயங்க அவசியம் 3G இயங்குதள மொபைல்(SmartPhone) தேவை. இதன் மூலம் நாம் 1GB dataவை 3நிமிடத்தில் டவுன்லோடிங் செய்திடலாம். அதே 1GB dataவை அனுப்ப 5நிமிடம் மட்டுமே போதும்.

கலப்படத்தைக் கண்டறிய... தெரிந்துகொள்வோம் !!



“நான் சூப்பர் மார்க்கெட்டில்தான் பொருட்களை வாங்குகிறேன். கலப்படம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை” என்று சிலர் கூலாகச் சொல்வார்கள். அதிக விலைகொடுத்து வாங்கினால் கலப்படம் இருக்காது என்பதும் பலரின் நம்பிக்கை. உண்மையில் பாலில் தொடங்கி பனீர் வரை எங்கும் எதிலும் எப்போதும் கலப்படம்தான். மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் பிராண்டுகளில் சர்வசாதாரணமாகக் கலப்படங்களைச் செய்கிறார்கள் கலப்பட மன்னர்கள். தரம் குறைந்த பொருட்களை வாங்கிவந்து, செயற்கை நிறம் கலந்தும் பாலீஷ் செய்தும் தரமான பொருட்களைப் போல விற்கிறார்கள்.
குறைவான விலை என்பதாலும், நம்மை எல்லாம் ஒன்றும் செய்யாது எனும் அசட்டு நம்பிக்கை காரணமாகவும் கலப்படப் பொருட்கள் விற்பனை எந்தத் தடையும் இன்றி நடந்துகொண்டே இருக்கிறது.
கலப்படம் என்பது, ஆரோக்கியத்தை அசைத்துப்பார்த்து, உயிருக்கே உலைவைத்துவிடும் மரண வியாபாரம். அது ஒரு சமூக அநீதி எனும் புரிதலும் விழிப்புஉணர்வும் விற்பவர்களுக்கும் தேவை. நுகர்வோருக்கும் தேவை
கலப்படத்தைக் கண்டறிய...
டீ - கடைகளில் பயன்படுத்திய டீ தூள் கசடை (Tea dust) குறைவான விலைக்கு வாங்கி, அதை வெயிலில் உலர்த்தி, சிவப்பு நிறம் சேர்த்து விற்கின்றனர். குறைவான விலையில் கிடைக்கும் டீ தூள்களில், இந்த சிவப்பு நிறம் கலக்கப்படுகிறது. சாதாரண ஃபில்டர் பேப்பரில் டீ தூளைக் கொட்டி, நான்கு துளிகள் நீர் விட்டால், சிவப்பு நிறம் தனியே பிரிவது தெரியும். குறிப்பாக, ஊர்களை மையப்படுத்தி விற்கும் ஸ்பெஷல் டீ தூள்கள் பெரும்பாலும் கலப்படங்களே.
கடுகு - தரமான கடுகை, கைகளில் வைத்து அழுத்திப்பார்த்தால் அதன் உட்புறம் மஞ்சளாக இருக்கும். கசகசா வகையைச் சார்ந்த அர்ஜிமோன் விதைகள் கலக்கப்பட்டிருந்தால், கைகளில் நசுங்கும்போது, அதன் உட்புறம் வெள்ளையாக இருக்கும்.
மஞ்சள் தூள் - மஞ்சள் தூளில், ஸ்டார்ச் பவுடர் மற்றும் மெட்டானில் எல்லோ எனும் ரசாயனம் கலக்கப்படுகின்றன. அரை ஸ்பூன் மஞ்சள்தூளை, 20 மி.லி இளஞ்சூடான நீரில் கலந்து, அதில் இரண்டு துளிகள் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தைச் சேர்க்க வேண்டும். இளம் சிவப்பு, ஊதா நிறத்தில் நீர் மாறினால், அதில் மெட்டானில் எல்லோ கலந்திருப்பதை உறுதி செய்யலாம்.
பச்சைமிளகாய், பச்சைப் பட்டாணி - பச்சைமிளகாய், குடமிளகாய் போன்றவை அதிகப் பச்சையாகத் தெரிவதற்காக, மாலசைட் கிரீன் (Malachite green) எனும் ரசாயனத்தில் முக்கி விற்கப்படுகின்றன. இதேபோல, உலர் பட்டாணி ஊறவைக்கப்பட்டு, மாலசைட் கிரீன் கலந்து ஃப்ரெஷ்ஷாக இருப்பதுபோல் விற்கப்படுகிறது. இவற்றை வெந்நீரில் போட்டதும் பச்சை நிறம் வெளியேறினால், அதில் மாலசைட் கிரீன் கலந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
பட்டை - பட்டையில், கேசியா (Casia), சுருள் பட்டை (Cinnamon) எனும் இரு வகைகள் உள்ளன. இதில், சுருள் பட்டையில்தான் சத்துக்கள் உள்ளன. கேசியா பட்டையில் சாதாரண மரப்பட்டைகள் நிறம் சேர்த்துக் கலக்கப்
படுகின்றன. ஓரிரண்டு பட்டையைக் கசக்கிப் பார்த்தால், கைகளில் எந்த நிறமும் ஒட்டக் கூடாது.
மிளகு - பப்பாளி விதைகளைக் காயவைத்தால், மிளகு போலத் தெரியும். அதை, மிளகில் சேர்த்து விற்கின்றனர். அதேபோல, பழைய மிளகில் மினரல் ஆயில் எனப்படும் பெட்ரோலியப் பொருள் கலக்கப்பட்டு, மெருகேற்றப்படுகிறது. மிளகு பார்ப்பதற்குப் பளபளப்புடன் மின்னக் கூடாது. முகர்ந்துபார்த்தால் கெரசின் வாடை அடிக்கக் கூடாது. கண்ணாடி டம்ளரில் 50 மி.லி தண்ணீரை ஊற்றி, அதில் மிளகைப் போட வேண்டும். மூழ்கினால் அது உண்மையான மிளகு, மிதந்தால் அது பப்பாளி விதை.
சீரகம் - சீரகத்தில், குதிரைச் சாணம் சேர்க்கப்படுகிறது. தவிர, அடுப்புக் கரியும் சேர்க்கின்றனர். சீரகத்தைத் தண்ணீரில் போட்டால், சாணம் கரைந்துவிடும். சீரகத்தைக் கையில் வைத்துத் தேய்க்கும்போது, கறுப்பாக மாறினால், அதில் அடுப்புக் கரி சேர்க்கப்பட்டிருக்கிறது. அதேபோல, சீரகம் போன்ற தோற்றம்கொண்ட ‘சதகுப்ப’ எனும் பொருளையும் சேர்த்து விற்பனை செய்கின்றனர். இதைப் பரிசோதனைக்கூடத்தில் மட்டுமே கண்டறிய முடியும்.
டீலக்ஸ் தனியா - தனியா அடர்பழுப்பாக இருக்கும். ஆனால், டீலக்ஸ் தனியா என்பதை வெள்ளையாக மாற்ற, சல்பர் டை ஆக்சைட் சேர்க்கப்படுகிறது. வெள்ளையாக்கப்பட்ட தனியாவைத் தவிர்த்துவிடலாம். அதுபோல, ஒரு ஸ்பூன் தனியா தூளில் தண்ணீர் விடும்போது, மேலாக தூசு போல படிந்தால் அதில் மரத் தூள் கலந்திருக்கலாம்.
ஜவ்வரிசி - மஞ்சள் நிறமாக இருக்கும் ஜவ்வரிசி டினோபால் போன்ற, பளீர் வெள்ளை நிறத்தைத் தரும் ரசாயனங்களால் தீட்டப்
படுகிறது. சிறிது மஞ்சளாக இருக்கும் ஜவ்வரிசியைப் பயன்படுத்துங்கள்.
பால் - அதிகாலை கறக்கும் பால் சில்லிங் சென்டருக்கு போகும் வரையில் கெட்டுப்போகாமல் இருக்க, யூரியா, காஸ்டிக் சோடா, டிடர்ஜென்ட் போன்றவையும் சேர்க்கப்படுகின்றன. பாலையும் தண்ணீரையும் 10 மி.லி அளவில் சமமாகக் கலக்கும்போது, நுரை வந்தால் அதில் டிடர்ஜென்ட் கலந்திருக்கலாம். மேலும், அருகில் விற்கும் பால்காரரிடம் பால் வாங்குவதே கலப்படங்களிலிருந்து தப்பிக்க எளிய வழி.
மிளகாய்த் தூள் - இதில், புற்றுநோயை உண்டாக்கும் சூடான் டை கலக்கப்படுகிறது. ஒரு கிளாஸ் தண்ணீரில், ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூளைக் கலக்குங்கள். அதில் பளீர் சிவப்பு வண்ணம் வெளிவந்தால், அதில் சிவப்பு வண்ணம் கலந்திருக்கலாம்.
தேங்காய் எண்ணெய் - தேங்காய் எண்ணெயைக் கண்ணாடி பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வையுங்கள். தடிமனான திக்கான படிமம் எண்ணெயின் மேல் படிந்தால், அது சுத்தமான தேங்காய் எண்ணெய். நீர்த்த நிலையில் அப்படியே இருந்தால், அதில் மலிவான எண்ணெய்கள் கலக்கப்பட்டிருக்கின்றன.
தேன் - பஞ்சைத் தேனில் நனைத்து, நெருப்பில் காட்டும்போது, பஞ்சு எரிந்தால் நல்ல தேன். எரியும்போது சடசடவென சத்தம் வந்தால், அது கலப்படத் தேன். தேனைத் தண்ணீரில் விட்டால், கரையாமல் அடி வரை சென்று தங்கும். கரைந்தால், அது வெல்லப்பாகு.
காபி பொடி - ஒரு கிளாஸ் தண்ணீரில் காபி பொடியைப் போட்டதும், காபி பொடி மேலே மிதக்கும். சிக்கரி கலந்திருந்தால், நீரில் மூழ்கும்.
எண்ணெய் - எண்ணெயை ரீஃபைண்ட் செய்ய, பல ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. இந்த எண்ணெயைப் பயன்படுத்துவது உடல்நலத்துக்கு ஆபத்தை விளைவிக்கும். செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெய் வாங்கிப் பயன்படுத்தலாம். எண்ணெயில், 20 சதவிகிதம் அளவுக்கு வேறு ஒரு எண்ணெயைக் கலக்கலாம். அரசின் இந்த அனுமதி, பல கலப்படங்களுக்குக் காரணமாக இருக்கிறது.
தோசை மாவு - மாவு புளிக்காமல் இருக்க, கால்சியம் சிலிகேட் சேர்க்கப்படுகிறது. இதில் சுகாதாரமற்ற தண்ணீர் சேர்ப்பதால் இ-கோலை பாக்டீரியா (மலக்கழிவில் இருக்கும் கிருமி) இருக்கும். பல நோய்களை உருவாக்கும் கிருமி இது. எனவே, வீட்டில் மாவு அரைத்துச் சாப்பிடுவதே நல்லது.
பனீர் - ஒரு கப் தண்ணீரில் ஒரு பனீர் துண்டைப் போட்டுக் கொதிக்கவிடுங்கள். ஆறியதும், சில துளிகள் அயோடின் சொல்யூஷன் கலக்கவும். பனீர் நீல நிறமாக மாறினால், அது கலப்படம். பனீர் தயாரிக்கப்பட்ட பாலில் கஞ்சி, மாவுப் பொருட்கள் (Starch) கலந்திருக்கலாம்.
நெய் - வனஸ்பதி அல்லது வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு கலந்திருக்கும். இதைப் பரிசோதனை மையங்களில் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். வெண்ணெயை வாங்கிக் காய்ச்சுவது நல்லது.
யாரிடம் புகார் செய்யலாம்?
தமிழகத்தில் சென்னை, தஞ்சாவூர், சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் பரிசோதனை மையங்கள் உள்ளன. வாங்கும் பொருட்களால், ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால், அந்த ஊரில் உள்ள உணவுப் பாதுகாப்பு அலுவலரிடம் புகார் கொடுக்கலாம். எந்தப் பொருளால் உடல்நலக் கேடு ஏற்பட்டதோ, அந்த இடத்துக்குச் சென்று, அந்த உணவின் சாம்பிளைப் பரிசோதனை செய்வர். ரிப்போர்ட்டில் கலப்படம் எனத் தெரிந்தால், விற்றவர் மற்றும் தயாரித்தவர் மேல் வழக்குப் போடப்படும். பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணமும் பரிசோதனைக்குச் செலவான பணமும் திரும்ப வழங்கப்படும். நுகர்வோருக்கு உண்டான அலைச்சல், மன உளைச்சலுக்குத் தகுந்த தொகை தரப்படும்.
பாதிப்புகள்
உணவுப் பொருட்களில் சேர்க்கப்படும் அனுமதிக்கப்படாத வண்ணங்கள் புற்றுநோய்க்குக் காரணமாகலாம். அர்ஜிமோன் விதைகள், பெட்ரோலிய பொருளான மினரல் ஆயில் போன்றவையும் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியதே. ஆப்பிள் மேல் பூசப்படும் மெழுகில் ‘லெட்’ இருக்கிறது. இது வாந்தி, வயிற்றுப்போக்கில் தொடங்கி நரம்பு மண்டலத்தையே பாதிக்கலாம். உணவால் ஏற்படும் கழிவுகளைச் சிறுநீரகமும் கல்லீரலும் சுத்தம் செய்கின்றன. வீரியமுள்ள ரசாயனங்களால் இந்த இரண்டு உறுப்புகளும் பாதித்து, செயலிழந்து போக நேரிடும். எப்போதோ ஓரிரு முறை கலப்பட உணவுகளைச் சாப்பிட்டால் பிரச்னை இல்லை. மாதங்கள், ஆண்டுகள் எனத் தொடர்ந்து சாப்பிடும்போது, உடல்நலம் கெடுவது உறுதி. உடலை உருக்குலைக்கும் நோய்களுக்கான வாசலும் இதுவே.

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

இஸ்லாமிய திருமணங்களை பதிவு செய்வது எப்படி?


'தகவல் அறியும் உரிமை' சட்டத்தில் பெறப்பட்ட பதில்..!
கட்டாய திருமண பதிவு சட்டம்-2005, அமலுக்கு வந்துவிட்டதால், பள்ளிவாசல்களில் நடத்தப்படும் திருமணங்கள் அனைத்தையும் அரசாங்க கெஜட்டில் பதிவு செய்வது அவசியமாகிவிட்டது.
எளிதான முறையில் செய்ய முடிந்த இந்த திருமணப்பதிவு காரியம், மிகவும் கடினமான ஒரு வேலையாக மாற்றப்பட்டுவிட்டது.
சென்னை போன்ற இடங்களில் 'தலைமை காஜி' கடிதம் வேண்டும் என்று அதிகாரிகள் வற்புறுத்தியதையடுத்து, காஜியின் கடிதம் பெறுவதில் தேவையற்ற அலைச்சல்களுக்கும், மன உளைச்சல்களுக்கும் ஆளாக வேண்டியதாகிவிட்டது.
இது சம்மந்தமான புகார்கள் 'தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்' தலைமைக்கு வந்தவண்ணம் இருந்தது.
இதையடுத்து, 'தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்' திருமணப்பதிவு சம்மந்தமாக, பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கான பதில் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதன்படி தேவையான ஆவணங்கள் :
1)மாப்பிள்ளை மற்றும் பெண்ணின் புகைப்படம்
2)புகைப்படத்துடன் கூடிய அடையாள ஆவணம் (ID Proof)
3)திருமணம் எங்கு நடத்தப்பட்டதோ அந்தப் பள்ளிவாசலின் பதிவேட்டு நகல்.
4)திருமணத்தை நடத்தி வைத்த ஜமாஅத் அல்லது முஹல்லாவின் கடிதம்
ஆகிய நான்கு ஆவணங்கள் மட்டும் கொடுத்தால் போதுமானது.
இவை 4 ஆவணங்களையும் கொடுத்தால், 22 நாட்களுக்குள் பதிவு செய்து கொடுக்க வேண்டியது பத்திரப்பதிவு அலுவலகத்தின் வேலையாகும்.
திருமணம் முடிந்து 90 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும், தவறும் பட்சத்தில், 50 ரூபாய் அபராதம் செலுத்தி, மேலும் 60 நாட்களுக்குள் பதிவு செய்து கொள்ளலாம்.
திருமணத்தை பதிவு செய்ய யார்? யாரெல்லாம் அலுவலகத்திற்க்கு வரவேண்டும்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு:
மாப்பிள்ளை, அல்லது மாப்பிள்ளையின் தந்தை, அல்லது உறவினர் யாராவது ஒருவர் ஆவணங்களை கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம் என்று பதில் வந்து உள்ளது
ஆன்லைனில் பதிவு செய்யலாம் என்ற தகவலும் கிடைத்துள்ளது.
முஹல்லா தலைவர் வரவேண்டும்,
சாட்சி வரவேண்டும்,
ஹஜ்ரத் வரவேண்டும், என்றெல்லாம் இழுத்தடித்தது, சட்டத்துக்கு புறம்பானது என்பது ஆவணங்களின் அடிப்படையில் உறுதியாகி இருக்கிறது.
தகவல் உதவி : சேப்பாக்கம் அப்துல்லாஹ், TNTJ

வியாழன், 27 ஆகஸ்ட், 2015

எச்சரிக்கை எச்சரிக்கை...! +375


எச்சரிக்கை எச்சரிக்கை...!
+375 என்று ஆரம்பிக்கும் எண்களில் இருந்து உங்களுக்கு அழைப்பு வந்தால் அதை தயவு செய்து அட்டெண்ட் செய்யாதிர்கள்,
அல்லது
அந்த எண்ணுக்கு நீங்களே தொடர்ப்பு கொள்ளாதிர்கள். அந்த எண்களில் வரும் அழைப்புக்கு 15.30 ருபாய் உங்கள் balanceஎடுக்க படும், அது மட்டும் அல்லது உங்கள் தொலைபேசில் உள்ள மற்ற மொபைல் எண்களையும் அவர்களால் பதிவு செய்ய முடியும்.
உங்கள் வங்கி கணக்கு போன்ற முக்கியமான தகவலை சேர்த்து வைத்து இருந்தால் அதை அவர்கள் இதன் மூலம் பயன் படுத்தி கொள்ளமுடியும். ஆகையால் +375 என்று ஆரம்பிக்கும் எண்களில் இருந்து உங்களுக்கு அழைப்பு வந்தால் அதை தயவு செய்து அட்டெண்ட் செய்யாதிர்கள்,
அல்லது
அந்த எண்ணுக்கு நீங்களே தொடர்ப்பு கொள்ளாதிர்கள்.

பீ கேர்புல் மக்க.....

எதை மறைக்க இந்த போலியான கணக்கெடுப்பு..
யாரை ஏமாற்ற...
10 ஆண்டுகளுக்கு ஒர் முறையே மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படும்.....
2010 ல் எடுத்து கணக்கெடுப்புக்கு பிறகு இனி 2020 ல்தான் எடுக்கப்படும்...
மீடியா இதை தூக்கிபிடிக்க காரணம் என்ன?????
வியாபம் மற்றும் கடலை மிட்டாய் ஊழலை மறைக்க
மேமன் தூக்கு...... கலாமின் இறுதி ஊர்வலத்தில் ஓவர் பில்டப்.....
வெங்காய விலை ஏற்றத்தை மறைக்க முஸ்லிம் மக்கள் தொகை ஏறிவிட்டது என்கிற கணக்கெடுப்பா?
பாசிச அரசும் ஊடகமும் வலுவாக கைகோர்த்து களத்தில்
இறங்கி நிற்கிறது.
பெருச செய்ய என்னமோ பிளான் பன்ரானுங்க....
பீ கேர்புல் மக்க.....

டூப்ளீகேட்ல வருமோ!


இன்னும் எண்ணலாம் இப்படி
டூப்ளீகேட்ல வருமோ!
சீனர்களின் அடுத்த டூப்ளீகேட் ( போலி_ கோழி _ முட்டை)
விழிப்புணர்வு கொடுக்க உதவுங்கள் அதிகம் பகிருங்கள்!!!!!!!!
நாம் உண்ணும் அரிசியை பிளாஸ்டிக்கில் தயாரித்த சீனா இப்போது கோழி முட்டையையும் போலியாக தயாரிக்கத்தொடங்கிவிட்டது
எலக்ட்ரானிக்ஸ் பொருட்களில் தன்னுடைய ‘கைத்திறமை’ யைக் காட்டி வந்த சீனா, தற்போது கோழி முட்டை தயாரிப்பிலும் கைத்திறமையைக் காட்டி வருகிறது. கோழி முட்டையை கோழி மட்டும் தான் போட வேண்டும் என்பது இயற்கையின் நியதி. ஆனால் சீனாவில் போலி கோழி முட்டைகளை உற்பத்தி செய்யத் தொடங்கி விட்டனர். அதுகுறித்த விவரம் தான் இது.
7 வித ‪#‎ரசாயணங்களுடன்_தயாராகிறது_கோழிமுட்டை‬
போலி முட்டை தயாரிக்க 7 வித ரசாயணங்களை பயன்படுத்துகிறார்கள் சீனர்கள். அதில் கால்சியம் கார்பனேட், ஸ்டார்ச், ரெசின், ஜெலட்டின், அலும் மற்றும் சில ரசாயணங்கள்அடக்கம்.
இந்தப் படத்தில் போலி முட்டை தயாரிக்க உதவும் கால்சியம் கார்பனேட் ஒரு பாத்திரத்திலும், மஞ்சள் கருவுக்கு நிறம் சேர்க்க மஞ்சள் வண்ணக்கலவையும், மஞ்சள் கரு மற்றும் வெள்ளை ப் பகுதி உருவாக்கும் மோல்டுகள் அருகருகே வைக்கப்பட்டுள்ளன.
ரசாயணங்களைக் கலந்து போலியாகத் தயாரிக்கப்பட்ட மஞ்சய் கரு மோல்டில் ஊற்றப்படுகிறது.
மஞ்சய் கருவின் மேலே கால்சியம் கார்பனேட் மற்றும் சில ரசாயணங்கள் உதவியால் வெள்ளைக்கரு உருவாக்கப்படுகிறது. சற்று நேரத்தில் மஞ்சள் கருவைச் சுற்றி வெள்ளைப்பகுதி தயார். பின்னர் இது ஒரு மணி நேரம் காய வைக்கப்படுகிறது.
பாரபின் மெழுகில் தோய்த்தெடுக்கப்படும் போலி முட்டை.
பிறகு, அதன்மேல் செயற்கை ஓடு பொருத்தப்படுகிறது.
‪#‎நிஜமுட்டையும்_போலி_முட்டையும்‬
நிஜ கோழி முட்டையின் ஓட்டைவிட எளிதாக உடையக் கூடியது இந்த போலி முட்டை ஓடு. ஆனால் அதைப் பற்றிய கவலை சீன வாடிக்கையாளர்களுக்கு இல்லை. நிஜ முட்டைக்கும் போலி முட்டைக்கும் சுவையில் பெரிய வித்தியாசமில்லை என்று சொல்வதை விட போலி முட்டையின் சுவை அதிகமாக இருப்பதாகப் பேச்சு. ஆப் பாயில் போடும் போலி முட்டையின் அழகு தெரிய வருகிறது. மஞ்சள் கரு கொஞ்சம்கூட சிதறாமல் பந்துபோல் முழுதாக நிமிர்ந்து நிற்கிறதாம். மேலும், வெள்ளைக்கரு பரவும்போது நுரையும் அதிகமாக எழுகிறது.
போலி முட்டையை உண்பதால் உடலில் மெது மெதுவாக விஷம் ஏறுகிறது என்றும் இதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கிறார்கள் உணவுத்துறை அறிஞர்கள்.
ஆனாலும் சீன போலி முட்டைத் தயாரிப்பாளர்கள் அடங்குவதாகத் தெரியவில்லை. காரணம் காசு! ஒரு கிலோ கோழி முட்டை 60 ரூபாய் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதுவே போலி முட்டை ஒரு கிலோ தயாரிக்க 6 ரூபாய் தான் செலவாகிறது. ஏன் தயாரிக்க மாட்டார்கள்.
உணவு கலப்படம் மற்றும் போலி உணவுகளால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சீனாவில் இறப்பவர்கள் எண்ணிக்கை சமீப காலத்தில் அதிகரித்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன
உங்களில் ஒருவன் உங்களுக்காக ஒருவன்
சரவணக்குமார் வே(கிராமத்து இளைஞன்)
உங்களின் கால்களில் விழுந்து கேட்கிறேன் சீனர்களே
எதை வேண்டுமானாலும் தயார் செய்யுங்கள் அதை எங்கள் நாட்டில் மட்டும் விற்பனைக்கு விட்டுவிடாதீர்கள்.ஏற்கனவே எங்கள் நாட்டு மக்கள் உணவு கிடைக்காமல் பசியால் இறக்கின்றனர்.இதில் இந்த விஷத்தையும் கலந்துவிடாதீர்கள்

மக்கள் தொகை கணக்கெடுப்பு


2011- ஆம் ஆண்டில் மத ரீதியிலான எடுக்கப்பட்ட‪#‎மக்கள்_தொகை_கணக்கெடுப்பு‬ 2015-இல் இந்துமதவாத ‪#‎பாஜக‬ என்கிற‪#‎மத்திய_அரசு‬ வெளியிட்டிருக்கிறது. இதை இந்து ஊடகங்கள் "இந்துக்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது" என்று தலைப்புச் செய்தியாக வெளியிடுகின்றன.
‪#‎அம்பேதக்கர்‬ கூறுகிறார்:
"மக்கள் தொகை எண்ணிக்கையைக் கொண்டு ‪#‎அரசியல்_ஆதாயங்கள்‬பெறும் பொருட்டு, இந்தியாவில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சூழ்ச்சியும், ஏமாற்று வித்தையும், பொய்யும், புனை சுருட்டும் ஆட்டம் போடத் தொடங்கியுள்ளன." - [தொகுதி:17]
‪#‎மோடி‬ அரசும் இன்று இதைத்தான் செய்கிறது. நேற்று மங்களூரில் இந்து பெண்ணுடன் இஸ்லாமிய இளைஞர் பேசினார் என்பதற்காக பா.ஜ.க. வினரால் கடுமையாக தாக்கப்பட்ட ‪#‎செய்தி‬ ஊடகங்களில் வெளிவந்தன.
இதே பா.ஜ.க வினர் ‪#‎ஆகஸ்ட்_15‬ சுதந்திர தினத்தில் தமிழ்நாட்டிலுள்ள‪#‎ஷேசாலம்‬ ‪#‎அகரம்‬ கிராமத்தில் தீண்டப்படாத மக்கள் என்று ‪#‎இந்து‬ஆதிக்க சாதியினரால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்தும் இந்து சின்னங்கள் எரியுட்டப்பட்ட போதும் பா.ஜ.க வினரும் இந்து ஊடகங்களும் எங்கே ஒளிந்திருந்தார்கள்? சுயமதப் பாசம் அப்போது எங்கே இருந்தது?
இன்று மத கணக்கீட்டில் பெரும்பான்மை மதத்திற்கு ஆபத்து என்று மதவாத தீவிரவாத அரசு அறிக்கை வெளியீட்டதும் அதை நாட்டின் பூதாகரமான பிரச்சனையாக பேசும் ஊடக விபச்சாரர்களின் மதப் பற்று பீறிட்டெழுகிறது. இதுவா ‪#‎பத்திரிக்கை_தர்மம்‬?
இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை குறைகிறது என்று இஸ்லாமியர்களை தாக்கும் போது இந்துக்கள் அல்லாத தீண்டப்படாதவர்களை இந்துக்களின் எண்ணிக்கைக்குள் திணித்து இந்தியாவின் இந்துப் பெரும்பான்மை குறித்து பீற்றிக் கொள்ளும் இந்திய அரசும் / இந்தியாவும் தான் ‪#‎மதச்சார்பற்ற_நாடு‬ என்றால், அதை நம்புகிறவர்களுக்கு சுயசோதனை செய்துக் கொள்ளும் சந்தர்ப்பத்தைதான் பா.ஜ.க.வினர் கொடுத்திருக்கிறார்கள். இந்திய மக்களே இந்துக்களாக சித்திக்காதீர்கள் இந்தியர்களாக / மனிதர்களாக சிந்தித்துப் பாருங்கள். பயங்கரவாத அரசின் இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படுவது விளங்கும்.
------------
அம்பேதக்கரின் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த சிந்தனை:
"ஆங்கிலேயர் ஆட்சியில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் குடிமதிப்பு புள்ளிவிவரக் கணக்கெடுப்பு ஒரு சமயம் மிகவும் எளிதானதாகவும் சுவாராசியமற்றதாவுமே இருந்தது. இது விஷயத்தில் யாரும் அவ்வளவாக அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இன்று நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. குடிமதிப்புக் கணக்கு அதாவது சென்சஸ் என்பது எல்லோருக்குமே முதல் தர அக்கறைக்குரிய விஷயமாகி விட்டது.
இந்துக்கள் தங்கள் எண்ணிக்கையை பெருக்குவதற்கு தீண்டப்படாதவர்களையும் இந்துக்கள் என்று கூறும்படி மிரட்டப்பட்டன ர். குடிமதிப்புக் கணக்கெடுப்பின் போது யாரும் சாதியை வெளியிடக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டனர்.
இந்தியாவில் அரசியல்வாதிகள் மட்டுமன்றி பொதுமக்களும் குடிமதிப்புக் கணக்கெடுப்பை மிக முக்கியப் பிரச்சினையாகக் கருதத் தொடங்கியுள்ளனர். ஏனென்றால் தற்சமயம் இந்தியாவில்அரசியல் என்பது எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டதாகி விட்டது. மக்கட் தொகை எண்ணிக்கை பலம்தான் ஒரு சமூகத்தினர் இன்னொரு சமூகத்தினர் மீது ‪#‎அரசியல்‬ ஆதாயங்கள் பெறத் துணை புரிகிறது. இது உலகில் வேறெங்கும் நடைப்பெறாத ஒன்றாகும்."

________
மக்கள் தொகை விவகாரத்தில் பாசிச பயங்கரவாதிகள் விரித்து வைத்துள்ள வலையில் தானாகவே சிக்கும் முஸ்லிம்கள்.....!
*************************************************************************************************
கடந்த 10 ஆண்டுகளில் """""முஸ்லிம் மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தின் வீழ்ச்சி"""" இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக இருக்கிறது.
# மத்திய சென்செக்ஸ் புள்ளி விபரத்தின் அடிப்படையில் THE HINDU.
உண்மை இவ்வாறிருக்க "இந்துக்கள் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைவு; முஸ்லிம்கள் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் அதிகம்" என்னும் 'பாசிச பிரச்சாரம்' தெளிவாக 2 விஷயங்களை குறிவைத்து பரப்ப படுகிறது.
1) "இந்துக்கள் மக்கள் தொகை குறைந்து கொண்டே வருகின்றது; இப்படியே குறைந்து கொண்டே போனால் நமது இந்து சமுதாயமே இல்லாமல் போய் விடும்;
இந்துக்களை அழிப்பதற்கே முஸ்லிம்கள் இப்படி அதிகமாக குழந்தைகள் பெற்று கொள்கிறார்கள்; அவர்களிடமிருந்து உங்களை காப்பாற்ற எங்களை விட்டால் வேறு யாருமில்லை என்று அறிவிற்கும் - நடைமுறைக்கும் பொருந்தாத நஞ்சு சிந்தனைகளை இந்துக்களின் மனதில் விதைத்து, "இந்து - முஸ்லிம் நிரந்தர வெறுப்பு - பகை - பிரிவு" ஆகியவற்றை ஏற்படுத்திவிடுவது.
பின்பு இந்த பிரிவினைகளையும் - குழப்பங்களையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, அவைகளை அப்படியே ஓட்டுகளாக அறுவடை செய்து கொள்வது.
2) "முஸ்லிம்கள் அதிகமாக குழைந்தைகள் பெற்று கொள்கிறார்கள்; எனவேதான் அவர்கள் கல்வியிலும் - பொருளாதாரத்திலும் பின் தங்கி இருக்கிறார்கள்; அவர்கள் மீது அரசு மிகவும் பரிவு காட்ட விரும்புகிறது" என்று R.S.S.-ன் வெறிபிடித்த உறுப்பினராக இருக்கும் ஒரு மத்திய அமைச்சரை "முதலை கண்ணீர்" வடிக்க செய்து -
முஸ்லிம்களின் நலனுக்காக மட்டுமே நாங்கள் இத்தைகைய அற்புதமான சட்டங்களை கொண்டு வந்திருக்கின்றோம் என்று நயவஞ்சக விளக்கம் கொடுத்து -
முஸ்லிம்களை அடிமட்டத்திலிருந்து அறுத்தெடுக்கும் "அபாயகரமான சட்டங்களை" இயற்றி -
என்ன நடக்கிறது என நாம் புரிந்து கொள்வதற்குள் "சட்டப்படியே" நமக்கு பெரும் இழப்புகளை தருவது.

புதன், 26 ஆகஸ்ட், 2015

சொட்டுநீர் பாசனம் அமைக்க 100% மான்யம்


“தமிழகத்தில் இரண்டாம் பசுமை புரட்சிக்கு வித்திடும் வகையில் சொட்டு நீர் பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்கு 100 சதவீத மான்யம் வழங்கப்படுகிறது’ என்று கரூர் கலெக்டர் ஷாபனா அறிவித்துள்ளார்.
•நீர் பயன்பாட்டினை நிர்வகிக்கவும், நுண்ணீர் பாசன முறைகளை விவசாயிகளிடையே விரிவாக்கம் செய்யவும், பாசன அளவில் உற்பத்தித் திறனை அதிகரிக்க சொட்டுநீர் பாசனத்தை சிறு, குறு விவசாயிகள் பயன்படுத்தும் வகைளில், மானியத்தை அதிகரிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்
•அதன்படி, கரூர் மாவட்டத்தில் நுண்ணீர் பாசனம் அமைத்து பயிரிடும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சத மானியமும் வழங்க உத்தரவு பெறப்பட்டுள்ளது.
•அந்த திட்டத்தின் படி கரூர் மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் 900 ஏக்கர் நிலப்பரப்பில் நுண்ணீர் பாசனம் அமைக்க 100 சதவீத மானியமும், 225 ஏக்கர் நிலப்பரப்பில் நுண்ணீர் பாசனம் அமைக்க 75 சதவீத மானியமும் வழங்கப்படும்.
•தோப்புகளில் நடப்படும் பழமரங்கள், தென்னை, முருங்கை போன்ற மரவகை பயிர்கள் வரிசைகளில் நடப்படும் காய்கறிப்பயிர்கள் மற்றும் மரவள்ளி, மஞ்சள், வாழை, கரும்பு, பருத்தி போன்ற பயிர்களும் சொட்டு நீர் பாசனம் மூலம் பாசனம் செய்ய ஏற்ற பயிராகும்.
•தற்போது தமிழக முதல்வர் அறிவித்துள்ளபடி சிறு, குறு விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க 100 சதவீதம் மானியமாக ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக மானியத் தொகை 43 ஆயிரத்து 816 ரூபாய் வழங்கப்படுகிறது.
•பெண்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளி விவசாயிகளுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்.
•இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விவசாயிகள் ஒருங்கிணைந்து நுண்ணீர் பாசனம் அமைத்து மானியத்தை பெறலாம்.
•குத்தகைக்கு சாகுபடி செய்யும் விவசாயிகள் 10 ஆண்டுகளுக்கான குத்தகை ஒப்பந்த பத்திர நகலை அளித்து பயன்பெறலாம்.
•சிறு, சிறு விவசாயிகளுக்கான சான்று, நிலத்தின் வரைப்படம், சிட்டா, அடங்கல் ஆகியவைகளை வருவாய் துறையினரிடமிருந்து பெற்று விண்ணப்பத்துடன் கொடுக்க வேண்டும்.
•மேலும், குடும்ப அட்டை ஜெராக்ஸ், சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போட் சைஸ் மூன்று ஃபோட்டோ போன்ற ஆவணங்கள் சொட்டு நீர் பாசனம் அமைக்க விவசாயிகள் துறை அலுவலர்களிடம் வழங்க வேண்டும்.
•இந்த திட்டத்தின் கீழ் பயனடைய விரும்ப துறை அலுவலர்களிடம் வழங்க வேண்டும்.
•இந்த திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பு விவசாயிகள் தோட்டக்கலை உதவி இயக்குனர்கள், வேளாண் உதவி இயக்குனர்கள், வேளாண்மை பொறியியல் துறை அலுவலர்கள் மற்றும் கரும்பு அலுவலர்களை தொடர்பு கொண்டு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் சொட்டு நீர் பாசனம் அமைத்து பயன்பெறலாம்.
மேலும், விபரங்களை தெரிந்து கொள்ள கரூர் தாந்தோணிமலையிலுள்ள தோட்டக்கலை துணை இயக்குனர் அலுவலகத்தை 04324255289 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

வீட்டிலேயே மண்புழு உரம் தயாரிப்பு




மண்புழுக்கள் உழவனின் நண்பன் என்ற போதீலும் சமீபகாலாமாக மண்ணில் இதன் எண்ணிக்கை குறைந்ததினால் மண்வளம் குன்றிவிட்டது எனலாம்.
இத்தகைய சூழலில் மண்புழு உர தயாரிப்பினை பெரிய அளவில் செய்து வருவது வியாபார நோக்கமாகும்.
இதனால் விவசாயிகள் விலை கொடுத்து வாங்குவதற்கு தயக்கம் காண்பித்து வருகின்றனர்.
இதனை தவிர்க்கும் வகையில் அவரவர் இல்லங்களிலேயே சிறிய முதலீட்டில் தங்கள் வயலுக்கு தேவையான மண்புழு உரத்தினை தயாரிக்க சுலபமான முறைதான் சில்பாலின் தொழில் நுட்பம்
•இந்த உரத்தை நிழலான எந்த இடத்திலும் தயாரிக்கலாம்.
•விளை நிலங்கள்,தோட்டம் ஆகிய பகுதிகளில் சிறிய இடம் இருந்தால் போதும்.
•பாலிதீன் வகையில் சில்பாலின் என்ற பிளாஸ்டிக் பை ஒன்றை 12 அடி நீளம்,4 அடி அகலம், 3 அடி உயரம் என்ற அளவில் தயார் செய்து கொள்ள வேண்டும்.
•நிழலான இடத்தில் 15 அடி நீளமுள்ள மூங்கில் கம்பு நான்கை நட்டு,பாலிதீன் பையை சுற்றி தொட்டி போன்ற அமைப்பில் உருவாக்க வேண்டும்.
•பின் இதில் ஒரு டன் அளவுள்ள மாடு, பன்றி, ஆடு, வாத்து கழிவுகளும், பருத்தி, வைக்கோல், சோளம், கருப்பு தோகை, இலை தழைகள், சமையலறை கழிவுகள் ஆகியவற்றையும், சாணம் மற்றும் கழிவுகள் தலா ஒரு அடுக்கு என்ற முறையில் 6 அடுக்குகளாக போட வேண்டும்.
•காலை, மாலைகளில் ஈரப்பதம் வரும் அளவிற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்.
•தொட்டியின் மேல் பகுதியை கோழி மற்றும் பறவைகள் கிளறா வண்ணம் சாக்கு அல்லது நைலான் வலை கொண்டு மூட வேண்டும்.
•டன் ஒன்றுக்கு 1 கிலோ மண்புழு தேவைப்படும்.
•இவ்வாறு செய்த பின் 45 நாட்களில் உரம் உருவாகும்.
•டன் ஒன்றுக்கு 600 கிலோ மண்புழு உரம் தயாரிக்கலாம்.
•இதற்கு ஆகும் மொத்த செலவு 800 ரூபாய்.

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

இஸ்லாமிய மதத்தோடு தீவிரவாதிகளை இனைக்காதீர்கள்.


-பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன்
இஸ்லாமிய மதம் என்றுகூட எங்கள் முன்னோர்கள் சொல்லிக் கொடுக்கவில்லை மார்க்கம் (வழிமுறை) என்றே சொல்லிக் கொடுத்தார்கள்.இந்த அழகிய வழிமுறையை பிடிட்டிஷ் பிரதமரும் புரிந்து கொண்டார் இதுபோல் ஒவ்வொரு எதிர்ப்பாளர்களும் விரைவில் புரிந்து கொண்டு நல்வழி பெறும் காலம் வரும். இன்ஷா அல்லாஹ்.

பங்கு சந்தை

 முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரே நாளில் பங்கு சந்தை 1600 புள்ளிகள் சரிந்து, முதலீட்டாளர்களுக்கு 7 லட்சம் கோடி ஒரே நாளில் நஷ்டம்.....

இஸ்லாமிய வாலிபரை நிர்வாணபடுத்தி கடுமையாக தாக்கிய‪#‎பஜ்ரங்தள_தீவிரவாதிகள்‬

பெங்களூரில் இந்து பெண்ணுடன் பேசி கொண்டிருந்த இஸ்லாமிய வாலிபரை நிர்வாணபடுத்தி கடுமையாக தாக்கிய‪#‎பஜ்ரங்தள_தீவிரவாதிகள்‬
30 பேரை கைது செயதது போலிஸ்
இந்திய நாட்டின் தீவிரவாதிகள் இந்துத்த்வா அமைப்புக்கள்
ஆனால் ஊடகம் இஸ்லாமியரை நோக்கியே இருக்கிறது
பின் குறிப்பு :: தாக்கப்பட்டவர் அந்த கடையின் மேனேஜர்
அந்த பெண் அந்த கடையின் ஊழியர்

PuthiyaThalaimurai TV's photo.

அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்

புதுக்கோட்டையில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் - முதல்வர் ஜெயலலிதா...
இன்று சட்டப் பேரவையில் அறிவிப்பு...
மிகவும் பின்தங்கிய வறண்ட மாவட்டமான எங்களின் புதுக்கோட்டை யின் வளர்ச்சிக்கு இது கொஞ்சம் உதவக் கூடும்...
இனி எங்கள் ஊர் தெருக்களில் டாக்டர்களும் , நர்ஸுகளும் உலாவுவார்கள் ....

திங்கள், 24 ஆகஸ்ட், 2015

முக்கண்ணாமலைப்பட்டி  இன்று முதல் மூன்று நாளைக்கு நமது ஊர் ரேசன் கடையில் ரேசன்கார்டு பதிவு செய்யப்பட உள்ளது எனவே அவசரம் இல்லாமல் கார்டு என் 1 முதல் 400 வரை என்ற அடிப்படையில் ஒரு நாளைக்கு 400 கார்டு வீதம் 3 - நாட்களில் பதிவு செய்து கொள்ளவும் மூன்று நாட்களில் பதிய முடியாதவர்கள் 4 மற்றும் 5 வது நாட்களில் பதியலாம். போகும் போது ரேசன் கார்டு செல் நெம்பர் கொண்டு போகவும். அதாவது ரேசன் கார்டில் நெம்பர் தெறிந்து கொள்வது எப்படி உங்கள் ரேசன் கார்டில் 2015 ம் ஆண்டிற்கு ஒரு உள் தாள் இணைக்கப்பட்டிருக்கும் அதற்கு மேல் பகுதியில் ஒரு நெம்பர் இருக்கும் அதுதான் உங்கள் ரேசன்கார்டு நெம்பர் ரேசன் கார்டு ஜெராக்ஸ் கொண்டு செல்லவும்

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

பாக்கு மட்டை தட்டு தொழில்

Pakku Mattai Plate Making Machine Price Tholil - 


பாக்கு மட்டை தட்டு இயந்திரம் தயாரிப்பு 



   



து பாஸ்ட் புட் காலம். நின்று கொண்டே சாப்பிட்டுவிட்டு, சாப்பிட்ட தட்டையும் கழுவுவதற்கு நேரமில்லாமல் தட்டின் மீது பிளாஸ்டிக் தாளை வைத்துச் சாப்பிட்டுவிட்டு ஓடிக்கொண்டிருக்கும் யுகம். சாப்பிட தட்டும் வேண்டும்; அது ஒருமுறை பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறிந்து விடுமாறும் இருக்க வேண்டும்; அது சுற்றுச் சூழலுக்கு கேடுவிளைவிக்காததாகவும் இருக்க வேண்டும். இந்த மூன்று தேவைகளையும் நிறைவேற்றுவதாக இருக்கிறது பாக்கு மட்டை தட்டுகள்.

வீணாகக் Pakku Mattai Plate Machine Price Chennai Coimbatore Salem குப்பையில் போடப்பட்டு வந்த பாக்குமட்டையிலிருந்து, சுற்றுச்சுழலைப் பாதிக்காத இத் தட்டுகள் கோயில்களில் பிரசாதம் வழங்க, விசேஷங்களில் சிற்றுண்டிகள் வழங்க எனப் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. விளைவு? வீணான பொருள் விலைமதிப்புக்குரிய பொருளாக மாறிவிட்டது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பா.பிருந்தாதேவி  பாக்குமட்டையிலிருந்து தட்டுகள் தயாரிக்கும் தொழில் குறித்து நம்மிடம் பேசினார்.



Pakku Mattai Plate Machine Price Chennai Coimbatore Salem


இந்தத் தொழிலை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்?
நான் பிளஸ் 2 வரை படித்துள்ளேன். எனது கணவர் ஜி. பாண்டியராஜன் மினி லாரி வைத்து தொழில் செய்துவருகிறார். நானும் ஏதாவது தொழில் செய்யவேண்டும் என்ற ஆர்வம் இருந்துவந்தது. என்ன தொழில் செய்யலாம் என தினசரி யோசித்துக் கொண்டிருந்தேன்.

எனக்கு நூலகத்துக்கு சென்று புத்தகங்கள் படிக்கும் பழக்கம் உண்டு. ஒருநாள் நூலகத்தில் தொழில் தொடர்பான புத்தகம் ஒன்றினை படித்தபோது, அதில் பாக்குமட்டை தட்டு தயாரிப்பு குறித்து விளம்பரம் வந்திருந்தது. அதை படித்ததும் எனக்குள் ஓர் ஆர்வம் பிறந்தது. இந்தத் தொழில் நமக்கு சரியாக இருக்கும் என எனக்குத் தோன்றியது. விளம்பரம் கொடுத்திருந்த நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு பேசினேன். திருச்சியில் சென்று பயிற்சி பெற்று, சிவகாசியில்  காலினால் இயக்கும் நான்கு இயந்திரங்களை வாங்கி, 3 ஆண்டுகளுக்கு முன்னர் இத் தட்டுகளைத் தயாரிக்கத் தொடங்கினேன்.

எவ்வளவு முதலீடு செய்தீர்கள்?

4 இயந்திரங்களின் விலை ரூ. 80 ஆயிரமாகும். சொந்த இடத்திலேயே இரு அறைகள் கட்டி இயந்திரத்தை அமைத்தேன். மாவட்டத் தொழில் மையத்தில் பதிவு செய்தேன். அதன்மூலம், சிறுதொழில் எனச் சான்று பெற்று, மின் கட்டணச் சலுகை பெற்றேன். இந்த இயந்திரம் வாங்குவதற்கும், மூலதனப் பொருள்கள் வாங்குவதற்கும் காதி போர்டு மூலம் கடன் பெற்றதால், 35 சதம் மானியம் கிடைத்தது. இந்த மானியம் கிடைத்ததால் நான் உற்சாகம் அடைந்தேன். இந்தத் தொழிலில் எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டும் என என்னுள் ஒரு தாக்கம் ஏற்பட்டது. மூன்று பெண் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொண்டு, அவர்களுடன் நானும் இரவு பகல் பாராது
கடுமையாக உழைத்தேன்.

பாக்குமட்டை தட்டில் நீங்கள் எத்தனை ரகங்கள் தயாரிக்கிறீர்கள்?

இதில் பல ரகங்கள் உள்ளன. நான் நான்கு அளவுகளில் தயாரிக்கிறேன். 10, 8, 6 மற்றும் 4 அங்குலங்களில் தட்டுகள் தயாரித்து வருகிறேன்.

இதற்கான மூலப்பொருள்களை எங்கிருந்து வாங்குகிறீர்கள்?

சேலம் மற்றும் தென்காசியிலிருந்து வாங்குகிறேன். அரசு இதற்கு வரிவிலக்கு அளித்துள்ளது வரவேற்
கத்தக்கது.





தட்டுகளை எப்படி சந்தைப்படுத்துகிறீர்கள்?

சேலத்தில் உள்ள கிரீன் இண்டியா என்ற நிறுவனம்தான் இந்தத் தொழில் குறித்து எனக்குப் பயிற்சி அளித்தது. இந்த நிறுவனத்தார் மூலப்பொருள்களையும் கொடுத்து, தயாரிக்கப்பட்ட தட்டுகளையும் வாங்கிக் கொள்கின்றனர். இவர்கள் மூலமாக, பல கண்காட்சிகளில் பங்குபெற்று சந்தைப்படுத்தி வருகிறோம்.

மேலும், தற்போது கோயில்கள், கல்லூரிகள், தொண்டு நிறுவனங்கள் என நேரடியாக ஆர்டர்களைப் பெற்று விநியோகம் செய்து வருகிறோம். நாளுக்கு நாள் இதன்தேவை கூடிக்கொண்டே போகிறது. சுயதொழில் செய்ய விரும்பும் பெண்கள் பலர் இதனைச் செய்ய முன்வரவேண்டும். ஆண்கள் துணையின்றி வீட்டுப் பெண்களே செய்யக் கூடிய தொழில் இது.

இந்தத் தொழில் குறித்து உங்கள் கருத்து என்ன ?

வருமானம் பெருக வாய்ப்புள்ள தொழில். நான் தற்போது மாதம் ரூ. 10 ஆயிரம் வருமானம் பெற்று வருகிறேன். பெண்களுக்கு ஏற்ற தொழில். இந்தத் தொழிலில் ஈடுபட்டால், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் நாமும் பங்குகொள்கிறோம் என்ற உணர்வு ஏற்படும். என்னிடம் பயிற்சி பெற்று பலர், திண்டுக்கல், நாகர்கோவில், தேவகோட்டை உள்ளிட்ட பல ஊர்களில் இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இது எனக்கு மன நிறைவைத் தருகிறது.

உங்கள் எதிர்காலத்திட்டம் என்ன?

பாக்குமட்டையிலிருந்து தட்டுகள் தயாரிக்க தானியங்கி இயந்திரத்துக்கு ஆர்டர் கொடுத்துள்ளேன். இதன்மூலம் மேலும் வேகமாகவும் அதிக அளவிலும் தட்டுகளைத் தயாரிக்க முடியும். தற்போது, நான் மும்பை வரை தட்டுகளை அனுப்பிவருகிறேன். எதிர்காலத்தில் ஏற்றுமதியிலும் ஈடுபட வேண்டும் என்பதே எனது லட்சியமாக உள்ளது.

Our esteemed clients can purchase from us premium quality Pakku Mattai Machine. In order to manufacture this machine, our team of seasoned professionals makes use of excellent grade components with the help of latest technology in adherence to the defined industrial standards of quality. Used in the manufacturing of pakku mattai plate, the offered Pakku Mattai Machine is available with us in different specifications as per the demands laid down by our customers at a market leading price.
Features:

  • Maintenance free
  • Excellent functionality
  • Longer service life
  • High production capacity