செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

ஹஜ் முதல் விமானம் மதீனா வந்தடைந்தது


டில்லியிலிருந்து புறப்பட்ட ஹஜ் யாத்ரிகளுக்கான முதல் இந்திய யாத்ரிகளுக்கான விமானம் இன்று காலை 8:45 மணியளவில் மதீனா வந்தடைந்தது. மேலும் கொல்கட்டா, லக்னோ மற்றும் மேங்களூரிலிருந்து ஆறு விமானங்கள் இன்று வந்தடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ஹாஜிகளுக்கு சேவை செய்யும் வகையில் இந்திய தூதரகம் whatsapp வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தகவல்கள் மற்றும் புகார்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.
whatsapp : +966 543 891 481
இலவச அழைப்பு (சவுதியில் உள்ளவர்களுக்கு மட்டும்) : 800 2477 786
Android App - Accommodation Locator :https://play.google.com/store/apps/details…
குறிப்பு: தமிழகத்திலிருந்து ஹஜ் யாத்திரைக்காக வரும் உங்கள் சொந்த பந்தங்களுக்கு இந்த எண்களை பகிருங்கள். கூட்டநெரிசலில் காணாமல் போகும்போதோ, உடல்நிலை பாதிக்கப்பட்டாலோ இது மிகவும் உதவக்கூடும். அதிகம் பகிரவும்.