வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

காவல்துறையின் மனித உரிமை மீறல் :


முகவை மாவட்டம் வாலிநோக்கம் கிராமத்தை சேர்ந்த மீரா என்பவரை கடந்த 16.08.2015 அன்று விசாரணை செய்ய காவல்துறையினர் அழைத்துச் சென்று ஏர்வாடியில் உள்ள லாட்ஜில் நான்கு நாட்களாக ரகசியமாக சிறை வைத்து சித்திரவதை செய்து கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பின்பு மீரா கடும் காயங்களுடன் நான்கு நாட்களுக்குப் பிறகு காவல் துறையினரால் விடுவிக்கப்பட்டார்.
மேலும் தனது காயங்களோடு எஸ்.டி.பி.ஐ கட்சியின் நிர்வாகிகளிடம் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விளக்கி,சட்ட உதவியும்,மருத்துவ உதவியும் கோரினார்.
பாதிக்கப்பட்ட மீராவுக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தோம்.
தவறு செய்தவர்களை தண்டிக்க நீதிமன்றம் இருக்கையில்,காவல்துறை சட்டத்தை கையில் எடுத்து தனது ரவுடீயிசத்தை நிலை நாட்டியுள்ளது.
மக்கள் அனைவரும் மனித உரிமை மீறல் நடக்கும் போது ஒன்றினைந்து செயல்பட அன்போடு அழைக்கிறோம்