புதன், 12 ஆகஸ்ட், 2015

நம் நாட்டு ஊடகங்கள் - பொய்யான ஒரு செய்தியை திரும்ப திரும்ப சொல்லி சொல்லியே அவர்களை நம்பவைத்து, அதில் முழு வெற்றியும் பெற்றுள்ளன.

இங்குள்ள அப்பாவி இந்து மக்களிடம் சென்று சவூதி அரேபியாவை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டால் படக்கென்று சொல்வார்கள் சவூதி அரேபியா
1. தீவிரவாதம்,
2. பெண்ணடிமைத்தனம்,
3.காட்டுமிராண்டி சட்டங்கள் நிறைந்த நாடு என்று.
அவர்கள் அப்படி சொல்வதில் அவர்கள் மீது குற்றமில்லை, நம் நாட்டு ஊடகங்கள் சவூதி அரேபியா என்றாலே இந்த மூன்று விடயங்கள் மட்டும் தான் என்ற பொய்யான ஒரு செய்தியை திரும்ப திரும்ப சொல்லி சொல்லியே அவர்களை நம்பவைத்து, அதில் முழு வெற்றியும் பெற்றுள்ளன.
இதோ விமலா சஞ்சிவகுமார் என்கிற இந்த சகோதரி சவூதி அரேபியாவை பற்றிய தன்னுடைய பார்வையை பகிர்ந்துள்ளார். இவர் இதை இங்கிருந்து கொண்டு எழுதவில்லை. அங்கு இருந்து அனுபவித்து எழுதி இருக்கிறார்.
சவூதி அரேபியா மாத்திரமல்ல, இஸ்லாமும் அப்படி தான். தூரத்தில் இருந்து பார்காதீர்கள் நெருங்கி வந்து பழகி பாருங்கள். முஸ்லிம்கள் உயிரை எடுக்ககூடியவர்கள் அல்ல தங்களின் உதிரத்தை தந்து உங்கள் உயிரை காக்க கூடியவர்கள்.
இங்குள்ள திரைப்படங்களும், தொலைகாட்சிகளும், நாளிதழ்களும், முஸ்லிம்களை எப்போதும் பயங்கரமானவர்களாகவே திரும்ப திரும்ப காட்டி முஸ்லிம்களை பற்றிய ஒரு மாய பிம்பத்தை உங்கள் மனதில் உருவாக்கி வைத்துள்ளன. எங்களோடு பழகி அது உண்மையா பொய்யா என்பதை முடிவு செய்துகொள்ளுங்கள் உறவுகளே.