ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

தீண்டத்தகாதவர்களிடம் தீண்டிக் கொண்டே இருக்கும்


‪#‎அரசுதுறை‬ யில் ‪#‎துப்புரவுத்_தொழிலாளி‬ யாக பணி புரியும் திரு.பழனி தான் பணிபுரியும் கிராமத்தில் ‪#‎தெருவிளக்கு‬ போடுவதற்காக உயர் சாதிக்காரர் தோட்டத்தின் வழியாக சென்ற காரணத்தால் சாதி வெறியர்களால் கட்டி வைத்து கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்
‪#‎அரசுத்துறை_பணியாளர்‬ என்பதைவிட, பழனி தாழ்த்தப்பட்டவர், தீண்டத்தகாதவர், பொது இடங்களில் தங்களுக்கு நிகராக வரத் தகுதியற்றவர் என்கிற இந்துவின் ‪#‎உயர்_சாதி‬ மனநிலை குறித்து‪#‎அம்பேத்கர்‬ கூறுகிறார்:
"‪#‎தீண்டாமை‬ என்பது ஒரு குறிப்பிட்ட நபரின்பால் ஒரு இந்துவுக்கு உள்ளத்தில் உள்ள வெறுப்பின் வெளிப்புற வடிவம் இடத்துக்கு இடம் காலத்திற்குக் காலம் வேறுபடலாம். சுருக்கமாக சொன்னால் இந்த வடிவம் வெறுப்பின் அளவையே குறிக்கிறது. எங்கெல்லாம் இந்த‪#‎வெறுப்பு‬ நிலவுகிறதோ அங்கெல்லாம் #தீண்டாமை நிலவுகிறது."
உயர் சாதி இந்துக்களின் தீண்டாமை எண்ணத்தை எப்படி ஒழிப்பது சாத்தியமா? அது சாத்தியமற்றது என்கிறார் அம்பேத்கர்:
"இந்துக்கள் தங்கள் மனநிலையை மாற்றிக் கொள்ளும் போதுதான் தீண்டாமை மறையும். இந்துக்கள் தமது ‪#‎வாழ்க்கை‬ முறையை மறக்கும்படிச் செய்வது எப்படி என்பதுதான் சிக்கல். ஒரு ‪#‎தேசம்‬முழுவதும் தனக்குப் பழகிப்போன வாழ்க்கை முறையைக் கைவிடும்படிச் செய்வது எளிதன்று. இது இந்துக்களுக்குப் பழகிப்போன வாழ்க்கை முறையாக மட்டுமல்லாமல், அவர்களது சமயத்தின் புனித இசைவு பெற்றதாகவும் உள்ளது. அவர்கள் அப்படித்தான் நம்புகிறார்கள். அவர்களது வாழ்க்கை முறையை மாற்றுவது என்பது அவர்களின் சமயத்தை மாற்றுவது போன்றதாகும்."
எனவே, "தீண்டாதவர்களின் பரிதாப நிலையைக் கண்டு மனம் வருந்துவோர் தங்களுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் போது 'தீண்டாதவர்களுக்காக நாம் ஏதேனும் செய்தாக வேண்டும்' என்று ஓலமிடுவதை நிறுத்திவிட்டு, "தீண்டத்தக்க இந்துவை மாற்றுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்" என்று விவாதிப்போம். அதுவரையில் பழனி போன்ற அரசுப் பணியாளர்கள் கூட தீண்டாமை காரணமாக தீண்டத்தக்க இந்துக்களால் தாக்கப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்.
ஏனெனில், இதுதான் இந்தியாவின் ‪#‎இந்து_தேசம்‬. இந்து மிருகங்களின் ஆக்ரோஷம் தீண்டத்தகாதவர்களிடம் தீண்டிக் கொண்டே இருக்கும்.