சனி, 15 ஆகஸ்ட், 2015

காவல் துறையின் சிறுபான்மையினர் விரோத போக்கு தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

கண்னியாகுமரி மாவட்ட காவல் துறையின் சிறுபான்மையினர் விரோத போக்கு தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
முஸ்லீம்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் தொடர்ந்து காவல்துறையினர் அத்துமீறி வருகின்றனர்; அப்பாவி இளைஞர்களை அழைத்து சென்று பொய் வழக்குகளை போட்டு வருகின்றனர்.
நள்ளிரவுகளில் வீடுகளுக்குள் புகுந்து முஸ்லீம் பெண்களிடம் ஆபாசமாக பேசுவது அத்துமீறுவது உட்பட பல மனித உரிமை மீறல்களை குமரி மாவட்ட காவல்துறை செய்து வருகிறது.
இந்நிலையில் கோட்டாறு பகுதியை சேர்ந்த அப்துர்ரஹீம், சமீம், திட்டுவிளையை சேர்ந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நகர தலைவர் ரிஸ்வான், அதே பகுதியை சேர்ந்த அப்சல் ஆகியோரை நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து அத்து மீறி கைது செய்துள்ளனர்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உடனடி போராட்டத்தை தொடர்ந்து ரிஸ்வான் விடுவிக்கப்பட்டார். மீதம் உள்ள மூன்று பேர் மீதும் நிலுவையில் இருந்த வழக்குகளை பொய்யாக இவர்கள் மீது புனைந்து சிறையில் அடைத்துள்ளனர்.
இது மிக பெரிய மனித உரிமை மீறலாகும். அப்பாவி மக்கள் மீது பொய்வழக்குகளை புனையும் காவல் துறையின் இந்த கொடூர போக்கு தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
காவல் துறையின் இந்த சிறுபான்மையினர் விரோத போக்கை காவல்துறை உடனடியாக நிறுத்தி கொள்ளாவிட்டால் தொடர் போராட்டத்தில் அனைத்து ஜனநாயக சக்திகளையும் இணைத்து பாப்புலர் ஃப்ரண்ட் போராடும் என எச்சரிக்கிறோம்.