புதன், 26 ஆகஸ்ட், 2015

சொட்டுநீர் பாசனம் அமைக்க 100% மான்யம்


“தமிழகத்தில் இரண்டாம் பசுமை புரட்சிக்கு வித்திடும் வகையில் சொட்டு நீர் பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்கு 100 சதவீத மான்யம் வழங்கப்படுகிறது’ என்று கரூர் கலெக்டர் ஷாபனா அறிவித்துள்ளார்.
•நீர் பயன்பாட்டினை நிர்வகிக்கவும், நுண்ணீர் பாசன முறைகளை விவசாயிகளிடையே விரிவாக்கம் செய்யவும், பாசன அளவில் உற்பத்தித் திறனை அதிகரிக்க சொட்டுநீர் பாசனத்தை சிறு, குறு விவசாயிகள் பயன்படுத்தும் வகைளில், மானியத்தை அதிகரிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்
•அதன்படி, கரூர் மாவட்டத்தில் நுண்ணீர் பாசனம் அமைத்து பயிரிடும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சத மானியமும் வழங்க உத்தரவு பெறப்பட்டுள்ளது.
•அந்த திட்டத்தின் படி கரூர் மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் 900 ஏக்கர் நிலப்பரப்பில் நுண்ணீர் பாசனம் அமைக்க 100 சதவீத மானியமும், 225 ஏக்கர் நிலப்பரப்பில் நுண்ணீர் பாசனம் அமைக்க 75 சதவீத மானியமும் வழங்கப்படும்.
•தோப்புகளில் நடப்படும் பழமரங்கள், தென்னை, முருங்கை போன்ற மரவகை பயிர்கள் வரிசைகளில் நடப்படும் காய்கறிப்பயிர்கள் மற்றும் மரவள்ளி, மஞ்சள், வாழை, கரும்பு, பருத்தி போன்ற பயிர்களும் சொட்டு நீர் பாசனம் மூலம் பாசனம் செய்ய ஏற்ற பயிராகும்.
•தற்போது தமிழக முதல்வர் அறிவித்துள்ளபடி சிறு, குறு விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க 100 சதவீதம் மானியமாக ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக மானியத் தொகை 43 ஆயிரத்து 816 ரூபாய் வழங்கப்படுகிறது.
•பெண்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளி விவசாயிகளுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்.
•இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விவசாயிகள் ஒருங்கிணைந்து நுண்ணீர் பாசனம் அமைத்து மானியத்தை பெறலாம்.
•குத்தகைக்கு சாகுபடி செய்யும் விவசாயிகள் 10 ஆண்டுகளுக்கான குத்தகை ஒப்பந்த பத்திர நகலை அளித்து பயன்பெறலாம்.
•சிறு, சிறு விவசாயிகளுக்கான சான்று, நிலத்தின் வரைப்படம், சிட்டா, அடங்கல் ஆகியவைகளை வருவாய் துறையினரிடமிருந்து பெற்று விண்ணப்பத்துடன் கொடுக்க வேண்டும்.
•மேலும், குடும்ப அட்டை ஜெராக்ஸ், சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போட் சைஸ் மூன்று ஃபோட்டோ போன்ற ஆவணங்கள் சொட்டு நீர் பாசனம் அமைக்க விவசாயிகள் துறை அலுவலர்களிடம் வழங்க வேண்டும்.
•இந்த திட்டத்தின் கீழ் பயனடைய விரும்ப துறை அலுவலர்களிடம் வழங்க வேண்டும்.
•இந்த திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பு விவசாயிகள் தோட்டக்கலை உதவி இயக்குனர்கள், வேளாண் உதவி இயக்குனர்கள், வேளாண்மை பொறியியல் துறை அலுவலர்கள் மற்றும் கரும்பு அலுவலர்களை தொடர்பு கொண்டு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் சொட்டு நீர் பாசனம் அமைத்து பயன்பெறலாம்.
மேலும், விபரங்களை தெரிந்து கொள்ள கரூர் தாந்தோணிமலையிலுள்ள தோட்டக்கலை துணை இயக்குனர் அலுவலகத்தை 04324255289 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.