புதன், 12 ஆகஸ்ட், 2015

டெல்டா பகுதியில் ஷேல் வாயு எடுக்க திட்டம்


 

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஷேல் எரிவாயு மற்றும் எண்ணெய் எடுக்கும் திட்டத்தைத் செயல்படுத்த ஓ.என்.ஜி.சி நிறுவனம் மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடித நகல், புதிய தலைமுறைக்கு கிடைத்துள்ளது.
 
கச்சா எண்ணெய் உற்பத்தி செய்வதற்காக சுற்றுச்சூழல் அமைப்பின் அனுமதி பெறப்பட்ட இடங்களில் ஷேல் எரிவாயு திட்ட ஆய்வைத் தொடங்குவதற்கு அனுமதி கேட்டு மத்திய வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு கடந்த ஜூன் மாத இறுதியில் ஓ.என்.ஜி.சி கடிதம் எழுதியுள்ளது.
 
இதில், குஜராத்தில் உள்ள கேம்பே, ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா கோதாவரி படுகை மற்றும் தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதிகளில் ஆய்வு நடத்த அனுமதி கோரப்பட்டுள்ளது. அவற்றில் காவிரி டெல்டா பகுதியில் ஆய்வு நடத்த 35 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
 
கச்சா எண்ணெய் ஆய்வுக்காக அனுமதி கேட்டு மறுக்கப்பட்ட இடங்களையும் தற்போது ஷேல் எரிவாயு ஆய்வுக்காகக் குறிப்பிட்டு ஓ.என்.ஜி.சி நிறுவனம் அனுமதி கேட்டுள்ளது
.