வியாழன், 6 ஆகஸ்ட், 2015

தீவிரவாதம்

'பாபர் மசூதி'யை இடித்தது முதலே 'ஹிந்து(த்துவ) தீவிரவாதம்' என்ற சொல்லாடல் புழக்கத்துக்கு வந்துவிட்டது :
நீதியரசர் லிப்ரஹான் பேட்டி..!
1992-ம் ஆண்டில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு, அன்றைய பஞ்சாப் மாநில நீதிபதியாக இருந்த 'மன்மோஹன் லிபரஹான்' அவர்களின் தலைமையில் விசாரனை கமிஷன் அமைக்கப்பட்டது.
1000 பக்கங்கள் கொண்ட லிபரஹான் ஆனைய அறிக்கையில் பல இடங்களில் 'ஹிந்து(த்துவ) தீவிரவாதம்'என்ற சொல் இடம் பெற்றுள்ளது.
ஹிந்துத்துவ தீவிரவாத செயல்களில் ஈடுபட்டவர்கள் குறித்த தனது நிலைப்பாட்டில், தற்போதும் தான் உறுதியாக இருப்பதாக நீதியரசர் லிப்ரஹான் தெரிவித்துள்ளார்.