வெள்ளி, 7 ஆகஸ்ட், 2015

நாட்டை வளப்படுத்தியவர்களை படையெடுத்தவர்கள் என்றும், சுரண்டியவர்களை வருகை தந்தவர்கள் என்றும் எப்படி சொல்லாம்

கமல் ஹாசன் கூறுகிறார்.
நம்மவர் என்ற படத்தில் நான் வரலாற்று ஆசிரியராக நடித்தேன். வரலாற்றுக் குளறுபடிகளைப் பற்றி நான் செய்த விமர்சனத்தை என்ன காரணத்திற்காகவோ சென்சாரில் வெட்டிவிட்டார்கள். அதைச் சேர்க்க வேண்டும் என்று நான் வாதாடிய போதும் அவர்கள் ஏற்கவில்லை! அந்தப் பகுதி இதுதான்.
முகலாயர் படையெடுப்பு என்றும் வெள்ளையர் வருகை என்றும் நாம் பாடம் சொல்லித் தருகிறோம். முகலாயர்கள் இங்கு வந்து, இங்குள்ள பெண்களையே திருமணம் செய்து கொண்டு இங்கேயே அரண்மனைகளைக் கட்டி ஆட்சி செய்தார்கள். இந்த நாட்டை அவர்கள் வளப்படுத்தினார்களே தவிர, இங்கு சுரண்டி ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு போய் சேர்க்கவில்லை.
ஆனால் ஆங்கிலேயேர்கள் இங்கு வளங்களைச் சுரண்டி பிரிட்டனில் சேர்த்து வைத்தார்கள். அவர்கள் இந்த நாட்டைத் தம் நாடாக ஒரு போதும் கருதியதே இல்லை. ஆனால் முகலாய மன்னர் பஹதூர் 'இந்த நாட்டில் தன் உடலைப் புதைக்க ஆறுகெஜ நிலம் கிடைக்க வில்லையே என்று கண்ணீர்க் கவிதையை பர்மா சிறையிலிருந்து எழுதினார். (அந்த உருது கவிதையை கமல் மனப்பாடமாகவும் சொன்னார்.
இந்த நாட்டை வளப்படுத்தியவர்களை படையெடுத்தவர்கள் என்றும், சுரண்டியவர்களை வருகை தந்தவர்கள் என்றும் எப்படி சொல்லாம் என்பது தான் நான் வைத்த விவாதம்.
Editör Alaudeen's photo.