நிச்சயமாக இப்றாஹீம் அல்லாஹ்வுக்கு மிக்க பயந்து நடக்கும் நேரானதொரு வழிகாட்டியாக இருந்தாரேயன்றி (இறைவனுக்கு) இணை வைத்து வணங்குபவர்களில் அவரும் (ஒருவராக) இருக்கவில்லை.
அன்றி, இறைவனின் அருட்கொடைகளுக்கு (எந்நேரமும்) நன்றி செலுத்துபவராகவும் இருந்தார். ஆகவே, (இறைவனும்) அவரைத் தேர்ந்தெடுத்து நேரான வழியில் செலுத்தினான்.
(ஆகவே, அவருடைய இறைவனாகிய) நாம் இம்மையிலும் நன்மையையே அவருக்குக் கொடுத்தோம். மறுமையிலும் நிச்சயமாக அவர் நல்லடியார்களில் (ஒருவராக) இருக்கச் செய்வோம்.
ஆகவே, (நபியே!) நீங்கள் மிக்க மேன்மையான (அந்த) இப்றாஹீமுடைய மார்க்கத்தைப் பின்பற்றும்படி உங்களுக்கு வஹ்யி அறிவித்தோம். அவர் இணைவைத்து வணங்குபவர்களில் (ஒருவராக) இருக்கவேயில்லை.
(அல்குர்ஆன்: 16:120-123)
(அல்குர்ஆன்: 16:120-123)