ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

அக்னியாய் முழங்கிய பி.ஜைனுல் ஆபிதீன்....!!


தமிழகத்தின் தலைநகர் சென்னையின் முக்கிய பகுதியான தி நகரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இன்று பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பொதுக்கூட்டம் என்று தலைப்பிட்டிருந்தாலும் அது பொதுக்கூட்டமா அல்லது மாநாடா என்று வியக்கும் வகையில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அமைப்பாளர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களும் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்களும் எழுச்சியுரை நிகழ்த்தினார்கள்.
பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் சமீபத்திய கூட்டங்களில் இஸ்லாமிய மார்க்க விசயங்களை பற்றியே பேசி வரும் வேளையில்....
இந்த பொதுக்கூட்டம் பாபர் மஸ்ஜித், குஜராத் இனப்படுகொலை, மும்பை இனப்படுகொலை, யாகூப் மேமன், அப்ஸல் குரு என்று அனைத்து அநியாயத்தையும் கண்டித்து அக்னி முழக்கமிட்டார்....
இந்தியாவிலுள்ள ஆட்சி அதிகார வர்க்கங்களில் புகுந்துள்ள காவி மயத்தை பற்றி தோலுரித்து காட்டியிருந்தார்.
அவர் பேசிய அக்னி முழக்கத்தின் முக்கிய சாராம்சமாக...
1. மதச்சார்பற்ற நாடா ?
மதச்சார்பற்ற நாடு இந்தியா என்று சொல்லிவிட்டு தமிழகத்தின் அரசு முத்திரையில் ஒரு குறிப்பிட்ட மத அடையாளத்தை பயன்படுத்துவது எப்படி மதச்சார்பற்ற நாடாகும் ?
2. முஸ்லிம்களின் வரிப்பணம் :
இந்தியாவிலுள்ள அனைத்து அரசு அதிகாரிகள் வாங்கும் சம்பளத்திலும், உண்ணும் உணவிலும் 20 சதவீத முஸ்லிம்களின் வரிப்பணம் இருக்கிறது.
அந்த நன்றி உணர்வு எந்த அதிகாரிக்காவது இருக்கிறதா ?
தீபாவளி, பொங்கலுக்கு வழங்கும் சலுகைகளில் முஸ்லிம்களின் வரிப்பணம் உள்ளது ஆனால் இஸ்லாமியர்களின் பண்டிகைகளுக்கு எவ்வித சலுகையும் இல்லை,
மாறாக இஸ்லாமியர்களின் பண்டிகையின் போது மின்சாரத்தை தடை செய்து மதவெறியோடு நடப்பது ஏன் ?
3. குண்டுவெடிப்பு :
இந்தியாவில் மும்பை குண்டுவெடிப்பு மற்றும் கோவை குண்டுவெடிப்பை தவிர மீதமுள்ள அனைத்து குண்டுவெடிப்பிலும் இந்துத்துவாவினரே ஈடுபட்டுள்ளார்கள்
4. தூக்கு தண்டனை :
பாபர் மஸ்ஜித் இடிப்பு, குஜராத் இனப்படுகொலை, மும்பை படுகொலை, கோவை கலவரம் உள்ளிட்ட முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட எந்த குற்றங்களிலும் இதுவரை யாரையும் தூக்கிலேற்றவில்லை, அப்பாவி முஸ்லிம்களை மட்டும் தூக்கிலிற்றுவது ஏன் ?
5. தாடி :
முஸ்லிம் மாணவனும், முஸ்லிம் ராணுவ வீரனும் தாடி வைப்பதற்கு தடை விதிக்கப்பட்ட போது அது தொடர்பாக நீதிமன்றத்தை அணுகிய வேளையில்...
பாகிஸ்தானிஸத்தையும், தாலிபானிஸத்தையும் அனுமதிக்க முடியாது என்று நீதிபதிகள் தீர்ப்பு கூறினர்.
இஸ்லாமியர்களின் மத அடையாளமான தாடி வைப்பது பாகிஸ்தானிஸம், தாலிபானிஸம் என்றால் மோடிக்கு சிரைத்து விடு...
6. கேடுகெட்ட நீதித்துறை :
எனது மகள் பாத்திமா திருடினாலும் கையை வெட்டுவேன் என்று நபிகள் நாயகம் சொன்னார்கள்.
உளவுத்துறை, ராணுவத்துறை, காவல்துறையை விட இந்தியாவிலேயே மிக கேடுகெட்ட ஒரே துறை நீதித்துறை.
7. நீதியை நிலைநாட்டாத நீதித்துறையை மக்கள் செருப்புக்கு சமமாக நினைப்பார்கள்.
8. இறைவனிடம் கையேந்துவோம் :
நமக்கு எதிராக நடந்த ஒவ்வொரு அநீதிக்காகவும் நம்மை படைத்த இறைவனிடம் கையேந்துங்கள்.
மறுமையில் நம் இறைவன் தரப்போகும் கடுமையான வேதனையிலிருத்து ஒரு அநீதியாளனும் தப்பிக்கவே முடியாது.