சவூதி'யில் தமிழக பெண் கை துண்டிக்கப்பட்ட விவகாரம்:
'சுஷ்மா சுவராஜ்' ஓலம்..!
'கஸ்தூரி' விஷயத்தில் நடந்தது என்ன?
'மாட்டுக்கறி' வதந்தி பரப்பி அப்பாவி முஸ்லிமை வீடுபுகுந்து கொலை செய்த கும்பலை கண்டிக்க வக்கில்லாதவர்கள், வேலூரைச் சேர்ந்த 'கஸ்தூரி' என்ற பணிப்பெண்ணின் கையை அவருடைய முதலாளி வெட்டிவிட்டதாக வந்த 'வதந்தி'யை ஆதாரமாக கொண்டு, ஒட்டுமொத்த இந்திய அரசின் இயந்திரங்களும் செயல்படத் துவங்கி விட்டன.
வெளியுறவு அமைச்சர் 'சுஷ்மா சுவராஜ்' உள்ளிட்ட பலரும் தங்களது கண்டனக் குரல்களை பதிவு செய்து வருகின்றனர்.
நடந்தது என்ன?
சவூதி அரேபியாவில் வீட்டு வேலை பார்த்த இந்தியாவை சேர்ந்த பெண் கஸ்தூரி, கை துண்டிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
முதலாளியின் சித்ரவதை தாங்காமல் வீட்டின் ஜன்னல் வழியே சேலையை கட்டி தப்ப முயன்றபோது முதலாளி பார்த்து விட்டு அந்த பெண்ணின் கையை வெட்டியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்தன.
இதன் உண்மை தகவல் என்ன என்பதை சவூதி அரேபிய ஊடகங்கள் இன்று வெளியிட்டுள்ளன.
சம்பவம் நடந்த அன்று, அந்த வீட்டில் 70 வயதான மூதாட்டி ஒருவர் மட்டுமே இருந்துள்ளார்.
உள்புறம் பூட்டப்பட்ட அவ்வீட்டு சாவி, கதவின் உள்புறம் தொங்கவிடப்பட்டிருக்கும். உள்ளே இருக்கும் சாவியை பயன்படுத்தி யார் வேண்டுமானாலும் வீட்டை விட்டு செல்ல முடியும்.
இந்நிலையில் சவூதி மூதாட்டிக்கு தெரியாமல் சேலையை கயிறாக கட்டி அதைப்பிடித்து தொங்கியவாறு இரண்டாம் மாடியிலிருந்து ஜன்னல் வழியே இறங்கியுள்ளார், கஸ்தூரி.
அப்போது திடீரென பிடி நழுவி நிலைத்தடுமாறி கீழே உள்ள 'ட்ரான்ஸ்ஃபர்மர்'க்கு இடையே விழுந்ததில் கை கட்டாகியுள்ளது.
அப்போது, அங்கே சாலை துப்புரவு பணியில் இருந்த பணியாளர்கள் ஓடிவந்து அவரின் வீட்டுக்கு சென்று தகவல் சொல்ல, அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சவூதி மூதாட்டி, தன் மகனுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
அண்டைவீட்டார்களும் உதவிக்கு வர... உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் அனுப்ப, மகனும் வந்து சேர, 'ஆக்சிடென்ட் கேஸ்' என்பதால் போலிசுக்கும் தகவல் சொல்லிவிட்டு ஹாஸ்பிடலில் சேர்த்திருக்கிறார்கள்.
மாட்டிறைச்சி வதந்தி பரப்பி. வீடு புகுந்து 'அக்லாக்' கொல்லப்பட்ட போது வேடிக்கை பார்த்தவர்களை போன்று, சவூதி அரேபியாவில் எந்த முஸ்லிமும் வேடிக்கை பார்க்கவில்லை.
சவூதி அரேபியாவிலுள்ள தமிழக இஸ்லாமிய அமைப்புகள் தீவிரமாக களம் இறங்கி இந்திய தூதரக அதிகாரிகளை சந்தித்து நம் இந்திய சகோதரிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர்.
மேலும் குறிப்பிட்ட அந்த வீட்டின் முதலாளி தான் இன்றும் கஸ்தூரியின் மருத்துவ செலவு உள்ளிட்ட அனைத்தையும் பொறுப்பேற்று செய்து வருகிறார்.
ஆகையால், உண்மை நிலை தெரியாமல் தேவையற்ற வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம்.
