புதன், 18 நவம்பர், 2015

‪#‎மறைக்கப்பட்ட‬ வரலாறு


கப்பலோட்டிய தமிழனை அனைவருக்கும் நினைவிருக்கும்... அந்த பெயரை வாங்க உதவியவர்களை பற்றி எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும் ???
இந்தியர்களுக்கு என சுதேசி கப்பல் கம்பெனியை வ.உ.சிதம்பரனார் பிள்ளை தொடங்கிய போது, அந்தக் காலத்தில் ரூ.10 லட்சத்தை தந்து உதவியவர் ஹாஜி பக்கீர் முஹம்மது ராவுத்தர் என்பவராவார்.
கப்பல் கம்பெனி நஷ்டத்தில் இயங்கிய போது வ.உ.சி. அவர்களுக்கு யாகூப் சேட், உமர் கத்தாப், இப்ராகிம் செய்யது ராவுத்தர், அஹமது சாஹிப், முகம்மது சுலைமான் ஆகியோர் தொடர்ந்து பல லட்சங்களை வாரி வழங்கினர்.
சுதேசி ஸ்டீம் நேவிகேசன்இந்திய சுதேசி வர்க்ககத்தின் லட்சியக் கனவான ‘சுதேசி ஸ்டீம் நேவிகேசன்’ – என்ற சுதேசிக் கப்பல் கம்பெனியை வ.உ சிதம்பரம் பிள்ளை 16-10-1906 – இல் நிறுவினார். இந்நிறுவனத்திற்கு பங்குதாரர்களைச் சேர்க்கும் முயற்சியில் அவர் இறங்கியபோது அவருக்கு நம்பிக்கைக் கரம் நீட்டியவர் ஹாஜி ஏ.ஆர். பக்கீர் முகம்மது சேட் ஆவார்.
இவரை புகழ்ந்து வ. உ. சி. ஒரு பாடல் பாடியுள்ளார்.
'' பாக்கியமிகுந்த பக்கிரி முஹம்மதை வாக்கின் வலியால் வசப்படச் செய்தியான் வணிகர் பலரையும் வருத்தி அவனிளம் துணிவோடு சுதேசிய நாவாய்ச் சங்க நன்மலர் கண்டேன்''
என்று பாடிவிட்டு கப்பல் கம்பெனிக்குத் துணிவுடன் முதலில் பொருள் தந்தது பிரபல முஸ்லிம் வியாபாரி பக்கீர் முஹம்மது இராவுத்தர் தான் என்று அடிக்குறிப்பாக கூறியுள்ளார். (ஆதாரம் வ. உ. சி. சுயசரிதை பக் :4950)