புதன், 18 நவம்பர், 2015

நாட்டு பருத்தி மீட்பர் ....

Ramesh Karuppaiya's photo.

''''''''""""""''''"""""""""""""""""""""""""""""""
திருச்சி மாவட்ட வாழையூர் கிராமம்.எளிய உழவுத்தொழில்.வானம் பார்த்த நிலம்தான் அப்பகுதி யாவும்.இயற்கை மீது தீராத ஈர்ப்பு.
பி.டி பருத்திக்கு மாற்றாக நம்ம எதாவது செய்து நம் மக்களுக்கு விளைவித்து காட்ட வேண்டும்.என்ற வேகம்.
சரி முதன் முறையாக இதை முயற்சி செய்யப்போகிறோம்.ஒரு ஐம்பது சென்ட் மட்டும் முதலில் முயற்சி செய்யலாம்.என்ன விளைந்தாலும்,எப்படி விளைந்தாலும் எதுவானாலும் முதலில் பரிசோதனை செய்வோம்.என்று களமிறங்கியுள்ளார்.
பி.டி பருத்தி விதையின் விலை அதிகம்.
உரம்,பூச்சிக்கொல்லி தேவையும் செலவும் அதிகம்.
நாட்டு பருத்திக்கு இதன்தேவைகள் குறைவு.இவற்றை நெருக்கமாக நடவு செய்வதன் மூலம் இணையான விளைச்சலைப்பெறலாம்.
இவர் பெரு விவசாயி அல்ல.சிறு உழவர்.பெற்றோர் ஒத்துழைப்பும் பெரியளவில் கிடையாது.கிராமத்தில் உள்ள அனைவரது மாறுபட்ட பார்வை என்று இவற்றுக்கு இடையில் தொடர்கிறது. இவரின் பயணம்.இவரது பெயர். ரமேஷ்.
தொடர்பு கொள்ளுங்கள் 9047012841.
உங்கள் ஆலோசனை சொல்லுங்கள்.
இவர் வெற்றி பெறட்டும்.

Related Posts: