செவ்வாய், 17 மே, 2016

ஆதரவற்ற நிலையில் தவிக்கும் மகாத்மா காந்தியின் பேரன் !

டெல்லியில் ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கியுள்ள மகாத்மா காந்தியின் பேரன் கணுபாய் காந்திக்கு உதவ டெல்லி அரசு முன்வந்துள்ளது. 

மகாத்மா காந்தியின் பேரனான கணுபாய்க்கு தற்போது 87 வயதாகிறது. அமெரிக்காவின் நாசாவில், விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வுபெற்ற இவர், தனது மனைவியுடன் கடந்த 2014ம் ஆண்டு இந்தியா வந்துள்ளார். 

​ஆதரவற்ற நிலையில் தவிக்கும் மகாத்மா காந்தியின் பேரன் !
தனது இறுதிக் காலத்தை உறவினர்களுடன் கழிக்க அவர் விரும்பியதாகவும், ஆனால், அவர்களின் ஆதரவு இல்லாததால், குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் இருந்து இம்மாதம் 8ம் தேதி, டெல்லியில் உள்ள Guru Vishram Vridh Ashram எனும் ஆதரவற்றோர் இல்லத்திற்கு வந்து அவர்கள் தங்கியுள்ளனர். 

இந்நிலையில், கணுபாய் காந்திக்கு உடல்நிலை சரியில்லாததை அடுத்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரை நேரில் சந்தித்த டெல்லி மாநில அமைச்சர் Sandeep Kumar, அவருக்கு தேவைப்படும் உதவியை அளிக்க தங்கள் அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தார். அப்போது, உதவி தேவைப்படுவதாக இருந்தால், தெரிவிப்பதாக, அவரிடம் கணுபாய் காந்தி கூறியுள்ளார்.