காவல்நிலைய விசாரணையில் படுகொலை செய்யப்பட்ட மாயாகுளம் இளைஞர்.
மனிதநேய தோழமை கழகம் வண்மையாக கண்டிக்கிறது !
மனிதநேய தோழமை கழகம் வண்மையாக கண்டிக்கிறது !
தமிழகத்தில் தொடர்ந்து காவல் துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுபவர்கள் கடுமையாக தாக்கப்பட்டு அதன் விளைவாக அவர்கள் மரணமடையும் சம்பவம் தற்போது அதிகரித்து வருகின்றன.
இந்த வரிசையில் நேற்று இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகில் உள்ள மாயாகுளம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் கொல்லப்பட்டுள்ளார்.
திருட்டு குற்றச் சம்பவத்திற்காக கடந்த 2.8.2016 அன்று ஏர்வாடி காவல்நிலைய அதிகாரிகளால் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். அவர் காவல்துறையினரிடமிருந்து தப்பி ஓடும் போது திருப்புலானி அருகில் உள்ள பாலத்திலிருந்து தவறி விழுந்து மரணமடைந்ததாக கூறி காவல்துறை இக்கொலையை மறைக்க முயற்சி செய்கிறது. இது வண்மையாகக் கண்டிக்கத்தக்கது.
குற்றவாளியை தாக்கவோ, படுகொலை செய்யவோ காவல்துறைக்கு எவ்வித அதிகாரமும் இல்லாத போது இது போன்ற காவல்துறையினரால் கஸ்டடி சாவுகள் தொடர்வது அதிர்ச்சி அளிக்கிறது.
தேசியக் குற்ற பிரிவு ஆவண காப்பகம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் இந்தியாவிலேயே மராட்டிய மாநிலத்திற்கு அடுத்த படியாக தமிழகத்தில் தான் காவல்துறையின் கஷ்டடி சாவுகள் அதிகஅளவில் நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கொலையில் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மீது இந்தியக் குற்றவியல் சட்டம் பிரிவு 302ன் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும். கொலை செய்யப்பட்ட இளைஞரின் குடும்பத்திருக்கு தமிழக அரசு இழப்பீடாக ரூபாய் 20 லட்சமும்,அவரின் குடும்பத்தாரில் படித்த பட்டதாரிக்கு அரசு வேலை வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் இதுபோன்ற சட்ட விரோத மரணங்களைத் தடுக்க தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று
மனித நேய தோழமை கழகம் சார்பாக கேட்டு கொள்கிறோம்.
மனித நேய தோழமை கழகம் சார்பாக கேட்டு கொள்கிறோம்.
இவண்.
மனித நேய தோழமை கழகம்.
ஊடகப் பிரிவு.
source : https://www.facebook.com/profile.php?id=100012123069019&pnref=story
மனித நேய தோழமை கழகம்.
ஊடகப் பிரிவு.
source : https://www.facebook.com/profile.php?id=100012123069019&pnref=story