சனி, 6 ஆகஸ்ட், 2016

மலைவாழ் பெண்களிடம் அத்துமீறல் : வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க திருமாவளவன் வலியுறுத்தல்



Vlcsnap-2016-08-06-15h14m35s232

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பகுதியில் மலைவாழ் பெண்களிடம் அத்துமீறியதாக கூறப்படும் வனத்துறை மற்றும் காவல்துறை மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் தேனியில் நடைபெற்ற அந்த ஆர்ப்பாட்டத்தின் போது, வனத்துறைக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 6 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Source; http://tv.puthiyathalaimurai.com/detailpage/ImportantNews/theni/114/45898/thirumavalavan-proteast-against-theni-forest-officers