திங்கள், 11 டிசம்பர், 2017

அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் - மீனவ போராட்டக்குழு December 10, 2017

Image

நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

ஓகி புயலில் சிக்கி கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, கடந்த வியாழக்கிழமை குழித்துறை பகுதியில் மீனவர்கள் போராட்டம் நடத்தினர். குறிப்பாக ரயில் மறியல் போராட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டங்களில் மீனவர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டம் நடத்திய சுமார் ஒன்பதாயிரம் பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மீனவர்கள், கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகள் மீதே வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.