நெல்லை மாவட்டம் கூத்தன்குழி பகுதியில் மீனவர்கள் 12வது நாளாக இன்றும் கடலுக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஓகி புயலில் காணாமல் போன மீனவர்களை மீட்க வலியுறுத்தி நெல்லை மாவட்டம் கூத்தன்குழி பகுதியை சேர்ந்த மீனவர்கள் 12-வது நாளாக கடலுக்கு செல்லாமல் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று மாலை மீன்வளத்துறை சார்பில் நெல்லை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லலாம் என அறிவிப்பு கொடுக்கப்பட்டது.
ஆனால் அதனை ஏற்க மறுத்த கூத்தன்குழி நாட்டுப்படகு மீனவர்கள் காணாமல் போன மீனவர்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இறந்த மீனவர் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.