திங்கள், 11 டிசம்பர், 2017

கடலில் மிதக்கும் சடலங்களின் வீடியோவை வெளியிட்ட மீனவர்கள்..! December 10, 2017

Image

ஓகி புயலில் சிக்கி படகு மூழ்கியதால், தரங்கம்பாடியை சேர்ந்த மீனவர் உட்பட 13 பேர் பலியானது தெரியவந்துள்ளது. கடலில் மிதக்கும் சடலங்களின் வீடியோவை மீனவர்கள் வெளியிட்டுள்ளனர்.

நாகை மாவட்டம் தரங்கம்பாடி அடுத்த குட்டியாண்டியூர் பகுதியை சேர்ந்த சஞ்சிகண்ணு, கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் துறைமுகத்தில் இருந்து, கடந்த 27ம் தேதி 13 பேருடன் படகில் மீன்பிடிக்க சென்றார். ஓகி புயலால் குமரி மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஏராளமான மீனவர்கள் கரை திரும்பவில்லை. இதைத் தொடர்ந்து, சஞ்சிக்கண்ணை தேடி அவரது உறவினர்கள் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு சென்றனர். 

அப்போது, சஞ்சிகண்ணு உட்பட அவரது படகில் சென்ற 13 பேரும் இறந்ததாக, படகின் உரிமையாளர் தெரிவித்தார். மேலும், கடலில் பலரது சடலங்கள் மிதப்பதாகவும், அவை மீட்க முடியாத நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ள மீனவர்கள், அதுகுறித்த வீடியோவையும் வெளியிட்டுள்ளனர்.