பூமிக்கு மேலே சுற்றும் எண்ணற்ற விண்கற்கள் சுற்றுவது குறித்து அமெரிக்க விண்வெளி மையமான நாசா புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
பூமிக்கு மேலே சுற்றித் திரியும் எண்ணற்ற விண்கற்கள், அவ்வபோது பூமியின் சுற்றுப்பாதையிலும் நுழைகின்றன. புவியின் சுற்றுவட்டப் பாதையில் நுழையும் சிறிய அளவிலான விண்கற்கள், வளிமண்டலத்துக்குள் நுழையும்போது ஏற்படும் உராய்வினால் தீப்பற்றி எரிந்து சாம்பலாகி விடுகிறது. இதுபோன்ற விண்கற்களால் பூமிக்கு பெரிய பாதிப்பு ஏற்படுவதில்லை. புவியின் ஒவ்வொரு மணி நேரத்திலும், 200 விண்கற்கள் இவ்வாறு பூமியை நோக்கி வருகின்றன.
இரவு நேரத்தில் திடீரென பூமிக்கு மேலே ஒரு பொருள் அதிக வெளிச்சத்துடன் பாய்ந்து செல்லும் காட்சி மூலம் நாம் உறுதி செய்து கொள்ள முடியும். ஆனால், வழக்கத்துக்கு மாறாக வரும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் 2 மடங்கு அதிக விண்கற்கள் பூமியை நோக்கி வர இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதனால் எந்தமாதிரியான ஆபத்துகள் ஏற்படும் என்பது குறித்து அவர்கள் தெரிவிக்கவில்லை.
பதிவு செய்த நாள் : August 09, 2016 - 05:15 PM
Source: http://tv.puthiyathalaimurai.com/detailpage/news/world/8/46729/earth#earth#nasa#tv.puthiyatalaimurai.com