வியாழன், 19 ஏப்ரல், 2018

எனக்கு கூறிய அறிவுரைகளை மோடி பின்பற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது: மன்மோகன் சிங் April 19, 2018

Image

தான் பிரதமராக இருந்த போது பிரதமர் மோடி தனக்கு கூறிய அறிவுரைகளை தற்போது பின்பற்ற வேண்டிய காலம் வந்து விட்டதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். 

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மோடி வாய் திறக்காமல் மவுனமாக இருப்பது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது.  

இந்தநிலையில், ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இந்தியாவில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறினார். 

இதுபோன்ற சமயங்களில் உயர் பதவியில் இருப்பவர்கள் சரியான நேரத்தில் உண்மைகளை பேசி சமூகத்தை வழிநடத்த வேண்டியது அவசியம் என குறிப்பிட்ட அவர், அமைதியாக இருப்பதன் மூலம் நாட்டில் அதிகமான குழப்பங்களே விளையும் எனவும் எச்சரித்தார்.  

காங்கிரஸ் ஆட்சியில் தான் பிரதமராக இருந்த போது, தனக்கு கூறிய அறிவுரைகளை பிரதமர் மோடி தற்போது பின்பற்ற வேண்டிய காலம் வந்துவிட்டதாக மன்மோகன் சிங் கூறினார். 

Related Posts:

  • முதன்முறையாக போட்டி ‘தடா’ அப்துல் ரஹீம்! சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக போட்டி ‘தடா’ அப்துல் ரஹீம்! இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் தடா ஜெ.அப்துல் ரஹீம் சென்னையில் நிருபர்களு… Read More
  • கற்றாழை கற்றாழை ஜெல்லை மோரில் கலந்து குடிப்பதன் மூலம் மஞ்சள் காமாலை கட்டுப்படும். ரத்த அழுத்தம் சீராகும். பித்தம் தணிந்து உஷ்ணம் குறையும். உடலுக்கு நல்ல எதிர… Read More
  • இரவில் தூக்கம் வரவில்லையா?: உங்களுக்கான டிப்ஸ்.. கடுமையான வேலைப்பளு, மன அழுத்தம், ஓய்வே இல்லாமல் அலைச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், நன்றாக தூங்க வேண்டும் என ஆசைப்படுவர். இதனால் இரவு … Read More
  • வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி! அதிகளவு பயனாளர்களை கொண்ட வாட்ஸ்அப்பினை சில வகையான கைப்பேசிகளில் பயன்படுத்த எதிர்காலத்தில் பயன்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வலைப்பூவின்… Read More
  • அவலம்.. தீவிர மதவாதம் மற்றும் சிறுபான்மை, தலித்ததுகளுக்கு எதிரான வன்முறையோடு தொடர்புடைய இயக்கமாகக் கருதப்படுவதால் இந்து முன்னணி மற்றும் இந்துத்வா சார்புடைய … Read More