4 வயது சிறுமியை கடத்தி கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து திருவண்ணாமலை மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அடுத்த மேல்பாலானந்தல்
கிராமத்தை சேர்ந்த பரமசிவம் இவரது மகள் பச்சையம்மாள் 4 வயது இவர்
மங்கலத்தில் உள்ள தனியார் மழலையர் பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில்
கடந்த 10.6.2013 அன்று சிறுமி பச்சையம்மாள் மாயமானார். பின்னர் தன்மகளை காணவில்லை என சிறுமியின் தந்தை பரமசிவம் மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்தனர்.
இந்நிலையில் ஆர்பாக்கம் கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் சிறுமி பச்சையம்மாள் சடலமாக மீட்கப்பட்டர். சிறுமியின் மரணம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் சிறுமியின் மரணத்துடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதனால் மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு குறித்து திருவண்ணாமலை மகிளா நீதிமன்றத்தில் விசாரனை நடைபெற்று வந்த நிலையில் இன்று நடந்த இறுதி கட்ட விசாரனையில் சிறுமி பச்சையம்மாள் கடத்தி கொலை செய்யப்பட்டது உறுதியானதாக நீதிபதி கூறினார். இதனால் இந்த வழக்கில் குற்றவாளியான பாலானந்தல் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (28) என்பவருக்கு ஒரு ஆயுள் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் சாகும் வரை தூக்கு தண்டனையும் விதித்து மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார்.