புதன், 31 ஜனவரி, 2018

​55 கோடி இந்தியர்கள் மிகமோசமான காற்றை சுவாசித்து வாழ்கின்றனர் - அதிர்ச்சிகர ஆய்வு! January 30, 2018

Image

இந்தியாவில் உள்ள பெருநகரங்களில் வசிக்கும் மக்களில் பலகோடி பேர் சுவாசிக்கவே தகுதியற்ற காற்றை சுவாசித்து வாழ்வதாக ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. ’க்ரீன்பீஸ் இந்தியா’ அமைப்பின் சார்பாக செய்யப்பட்டுள்ள இந்த ஆய்வில் இந்தியா முழுவதும் உள்ள 282 முக்கிய நகரங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், டெல்லி இந்தியாவிலேயே மிக மோசமான சுவாசக்காற்று உள்ள நகரமாக இருப்பது தெரியவந்துள்ளது.

டெல்லியைப் போலவே, தேசியத் தலைநகர் வட்டத்தில் இருக்கும் பரியாபாத், காசிதாபாத் ஆகிய நகரங்களும் இதேபோல் மிகமோசமான சுவாசக்காற்று உள்ள இடங்களாக உள்ளன. இவை பட்டியலில் இரண்டாவது, மூன்றாவது இடங்களைப் பெற்றுள்ளன.

ஆய்வுக்கு எடுத்துகொள்ளப்பட்ட 282 நகரங்களில் சுமார் 63 கோடி வசிக்கிறார்கள். இவர்களில் 58 கோடி பேர் மோசமான காற்றை சுவாசித்து வாழ்வதாகவும் அதிலும் குறிப்பாக 55 கோடிபேர் மிகமோசமான சுவாசக்காற்று அபாயகரமான பகுதியில் இருப்பதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்பகுதியில் சுமார் 4.7 கோடி குழந்தைகள் உள்ளனர். இதில், 1.7 கோடி குழந்தைகள் வசிக்கும் பகுதியில் இரண்டு மடங்கு மோசமான சுவாசக்காற்று இருக்கிறது என்றும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி மிகமோசமான காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் டெல்லி, உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், பீகார் ஆகிய மாநிலங்களில் வசிப்பதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப்பகுதிகளில் மாசுபாட்டை அளவிடும் PM அளவீடு 10 ஆக உள்ளது. இந்த PM அளவு 2.5-ஐ தாண்டிவிட்டால் அது மோசமான காற்றாகும். கடந்த 10 ஆண்டுகளில் இந்த அளவு மெல்ல அதிகரித்து தற்போது 10-ஐ எட்டியுள்ளது. ஐரோப்பா, அமெரிக்க நாடுகளில் இந்த PM அளவு பல்வேறு முயற்சிகளினால் கடந்த சில ஆண்டுகளில் 15%, 20% குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதேநேரம் இந்தியாவில் இந்த அளவு 13% உயர்ந்துள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவில் மாசுகட்டுப்பாட்டு அமைப்புகள் தோற்றுப்போய்விட்டன என்றும், விரைவில் சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவில் சுமார் 58 கோடி பேர் காற்று சுகாதாரம் பற்றிய தகவல்களே இல்லாத இடங்களில் வசிப்பதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.