மனிதநேயம்!
அனாதரவான இந்துவின் சடலத்தை தகனம் செய்த முஸ்லிம் வாலிபர்கள், பேஸ்புக்கில் குவியும் பாராட்டு
மராட்டிய மாநிலத்தில் ஏழ்மை நிலையில் வாழ்ந்து, அனாதரவான நிலையில் இறந்து கிடந்த இந்து முதியவரின் பிரேதத்தை அவரது மத சடங்குகளின் வழக்கப்படி பாடையை சுமந்தபடி சென்று தகனம் செய்ய உதவிய முஸ்லிம் இளைஞர்களுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டு மழை கொட்டி வருகிறது.
மராட்டிய மாநிலம், தானே மாவட்டத்தில் தனது மனைவியுடன் ஏழ்மை நிலையில் வாழ்ந்துவந்த வாமன் கடம் என்ற 65 வயது முதியவர் உடல்நிலை சார்ந்த பிரச்சனைகளால் நேற்று காலமானார்.
உற்றார், உறவினர் யாருமின்றி அனாதரவான நிலையில் வாழ்ந்துவந்த அவரது மனைவி, கணவரின் பிரேதத்தை அடக்கம் செய்ய பொருளாதார வசதியும் ஆள் உதவியுமின்றி கண்ணீரில் தத்தளித்தார். இந்த தகவல் பலரது காதுகளை சென்றடைந்தாலும், சிலரது இதயத்தைகூட தொடவில்லை.
நேற்று பின்னிரவுவரை வாமன் கடம் அனாதைப்பிணமாக கிடப்பதை கேள்விப்பட்ட மும்ப்ரா பகுதியை சேர்ந்த 8 முஸ்லிம் இளைஞர்கள் அந்த பிரேதத்தை எரிக்கும் பொறுப்பை ஏற்றுகொண்டனர்.
தங்களது கைப்பணத்தை செலவிட்டு கோடித்துணி, ஓலைப்பாய், பாடை கட்டுவதற்கான மூங்கில், பால் கலசம், கொள்ளிச்சட்டி, ஊதுவத்தி ஆகியவற்றை கடைத்தெருவில் இருந்து வாங்கிவந்த அந்த வாலிபர்கள் பிணத்தை குளிப்பாட்டி பாடையில் கிடத்தி தங்களது தோளில் சுமந்தபடி ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
அந்த குழுவில் இருந்த மற்ற முஸ்லிம் இளைஞர்கள் பால் கலசம் மற்றும் கொள்ளிச் சட்டியை ஏந்திவர, இன்று அதிகாலை 3 மணியளவில் அந்த பிரேதத்தை சுடுகாட்டில் வைத்து தகனம் செய்தனர்.
இதுதொடர்பான தகவல் வெளியானதும் மும்ப்ரா-கால்வா பகுதி எம்.எல்.ஏ.வான ஜித்தேந்திரா அவ்ஹாத் என்பவர் இந்த செய்தியை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மதங்களை கடந்து நமது நாட்டில் இன்னும் உயிர்ப்போடு இருக்கும் மனிதநேயத்தை பலர் லைக் போட்டும் ஷேர் செய்தும் பாராட்டி வருகின்றனர்.