திங்கள், 26 செப்டம்பர், 2016

கோவை வன்முறை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்..


இந்து முன்னணியின் கோவை மாவட்ட செய்தித் தொடர்பாளர் சசிக்குமார் என்பவர் கடந்த வியாழக்கிழமை சிலரால் வெட்டிக் கொல்லப்பட்டார். அனைத்து படுகொலைகளும் கண்டிக்கத்தக்கவையே என்பதில் சந்தேகமில்லை. குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய போராட்டம் நடத்தும் உரிமை உண்டு என்பதிலும் சந்தேகமில்லை.
அதே நேரத்தில், இதைக் காரணம் காட்டி, கொலைச் செயலில் ஈடுபட்டவர்கள் முஸ்லிம்கள்தான் என்று அவதூறு பரப்பி, அதை சாக்காக வைத்து சில பயங்கரவாதிகள் நேற்று (23.09.16)கோவை வீதிகளில் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டனர். போலிஸ் கண் முன்னே நடந்த இந்த வன்முறைகளால் முஸ்லிம்களுக்குச் சொந்தமான ஏராளமான வணிக நிறுவனங்களும், வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. தீ வைத்தும் கொளுத்தப்பட்டன. இலட்சணக்கான மதிப்புள்ள பொருட்கள் கலவரகாரர்களால் கொள்ளை அடிக்கப்பட்டன.
இந்த வன்முறையை செய்தவர்கள் தண்டிக்கப்படுவதோடு இது போன்ற செயல்களைத் தூண்டிவிட்டவர்களும் தண்டிக்கப்படவேண்டும் என்பதை இந்த நேரத்தில் கூறிக் கொள்கிறோம். இதற்கு முன் நடந்த எத்தனையோ இந்துக்களின் படுகொலைகளுக்குப் பின்னால் கட்டப்பஞ்சாயத்து. தனிப்பட்ட விரோதம், பாலியல் விவகாரம், தொழில் போட்டி, சாதிய ஏற்ற தாழ்வுகள் ஆகியன இருந்துள்ளதை நாட்டு மக்கள் அறிவர்.
ஒவ்வொரு முறையும் இதுபோன்று இந்துத்துவவாதிகள் கொல்லப்படும்போதெல்லாம் முஸ்லிம்களைக் குறிவைத்து வன்முறைச் செயல்களைக் கட்டவிழ்த்துவிடும் மத பயங்கவாதிகளை கட்டுப்படுத்த மாநில அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கோவையில் கடும் வன்முறை நிகழ்ந்தபோதும், முஸ்லிம்கள் பொறுமையுடன் அமைதி காத்தது இச்சமுதாயத்தின் சமூகப் பொறுப்பைக் காட்டுகிறது. இந்தப் பொறுமை எல்லை மீறாத அளவுக்கு மாநிலத்தில் அமைதியை நிலை நாட்டுவது ஆளும் அதிமுக அரசின் கடமையாகும்.
நாட்டில் வன்முறைகள் குறைந்து, அமைதி நிலவத் தேவையான அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தனது ஆதரவை அளிக்கும்.
இப்படிக்கு.
மு.முஹம்மது யூசூப்
மாநில பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்..
தொடர்புக்கு..9789030302

Soruce: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்..