தென் கோடியில் நடைபெறுகின்ற ஒரு சாலை மேம்பாலம் கட்ட பல்லாயிரக்கணக்கான தூரத்தில் இருந்து, அதுவும் அண்டைநாடான பாகிஸ்தான் இல் இருந்து சிமெண்டை இறக்குமதி செய்து உபயோகிப்பதன் மர்மம் என்ன?
யாரை திருப்தி படுத்த இந்த ஒப்பந்தக்காரர் கட்டுமான பணிகளுக்கு, தமிழகத்தில் இருக்கக்கூடிய சிமெண்ட் நிறுவனங்களை புறம்தள்ளி விட்டு இறக்குமதி செய்து இந்த பணிகளை மேற்கொள்கின்றார்கள் என்று தெரியவில்லை.
ஒருபுறம் மேக் இன் இந்தியா என்று மேடை தோறும் முழங்கும் மோடியும் , அவரின் அமைச்சரவை சகாவான பொன்னர் துவக்கி வைத்த இந்த கட்டுமானத்தில் அந்நிய தேச சிமெண்ட் உபயோகிப்பதன் நோக்கம் என்ன என்பதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆம் ஆத்மி கட்சி களஆய்வு செய்து , புகைப்படங்கள் உடன் மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் கேட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகத்தின் பதில் என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
ஆம் ஆத்மி கட்சி - தமிழ்நாடு
www.aapvolunteers.in
www.aapvolunteers.in