ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

நோயாளிக்கு தரையில் உணவு அளித்த அரசு மருத்துவமனை

Food
ஜார்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி அரசு மருத்துவமனையில் மன நோயாளி ஒருவருக்கு தரையில் உணவு அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மன நோயாளியான முன்னி தேவிக்கு அங்குள்ள பணியாளர்கள் தரையில் உணவு பரிமாறியதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தைத் தனது செல்போன் கேமிராவில் புகைப்படமாக மனோஜ் குமார் மிஸ்ரா என்பவர் எடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழுவினை மாநில சுகாதாரத்துறை அமைத்துள்ளது.
ஆனால், இந்த சம்பம் குறித்து தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ள ஜார்க்கண்ட் மாநில உயர்நீதிமன்றம், விளக்கம் கேட்டு மாநில அரசுக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது.
இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்புத் தெரிவித்துள்ள ராஞ்சி மருத்துவமனையின் டீன் ஷெர்வால், நோயாளிக்கு தட்டில் தான் சாப்பாடு பரிமாறப்படுவதாக விளக்கம் அளித்துள்ளார். இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் சம்மந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Posts: