செவ்வாய், 27 செப்டம்பர், 2016

கோவை களத்தில் மஜக தலைவர்கள் நேரடி சந்திப்புகள்!

கோவை களத்தில் மஜக தலைவர்கள்
நேரடி சந்திப்புகள்!
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
இன்று கலவரம் நடைபெற்ற கோவைக்கு மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வருகை தந்தார்கள்.
அவருடன் அவைத் தலைவர் நாசர் உமரி, துணைப் பொதுச்செயலாளர் ஈரோடு பாரூக், மாநிலச் செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் ஆகியோரும் வருகை தந்தனர்.
ஏற்கனவே களத்தில் இருக்கும் மாநிலச் செயலாளர்கள் சுல்தான் அமீர், சாதிக் பாஷா, மாநில துணைச் செயலாளர் அப்துல் பஷீர், மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் கடந்த 4 நாட்களில் நிலவரங்கள் குறித்து கேட்டறிந்தனர்.
அதன் பிறகு தாக்கப்பட்ட 3 பள்ளி வாசல்களுக்கும் சென்று பார்வையிட்டு ஜமாத்தார்களின் கருத்துகளை கேட்டறிந்தனர்.
பிறகு இந்து முன்னணி மற்றும் இந்து மக்கள் கட்சியினரால் தாக்குதலுக்குள்ளான அணைத்து சமூக வணிகர்களின் கடைகளுக்கு சென்றனர்
இந்து, முஸ்லீம் வியாபாரிகள் எல்லோரும் ஒருசேர மதவெறியர்களின் செயலை கண்டித்தனர். பல இடங்களில் இந்து முன்னணியினர் முஸ்லிம்களின் கடைகள் தாக்கப்படும் போது, இந்துக்கள் தடுத்த சம்பவங்களை முஸ்லிம்கள் விவரித்தனர்.
அதேபோல முஸ்லிம்கள் தரப்பு மிகுந்த பொறுமையாடு ஒத்துழைப்பு தந்ததை இந்துக்கள் சிலாகித்து கூறினர்.
பல்வேறு தரப்பு மக்கள், வியாபாரிகள், சமூக ஆர்வலர்களின் கருத்துக்களை கேட்டபிறகு, இறுதியாக பொதுச்செயலாளர் தலைமையில் மஜக நிர்வாகிகள் ADGP-திரிபாதி அவர்களையும், மேற்கு மண்டல IG பாரி அவர்களையும் சந்தித்து பேசினர். இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர்.
இதுவரை 400 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், வீடியோ பதிவின் அடிப்படையில் வழக்கு பதிவுகள் நடந்து வருவதாக திரிபாதி அவர்கள் கூறினார்கள்.
மேலும் இழப்பீடுகள் குறித்தும், நஷ்டங்கள் குறித்தும் ஆய்வு செய்தபோது 100 கோடி வரை
நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறியதை பொதுச் செயலாளர் திரிபாதி அவர்களிடம் கூறினார்.
சட்டம் தன் கடமையை உறுதியாக செய்யும் என அவர் பதிலளித்தார். அடுத்து எடுக்கப்படவேண்டிய நியாயமான நடவடிக்கைகள் குறித்து கூறிவிட்டு மஜக தலைவர்கள் விடைபெற்றனர்.
நடந்த கலவர வீடியோ தொகுப்புகளும், சமூக இணைய தளப் பதிவுகளும் ஆவணப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.
தகவல்;
மஜக ஊடகப் பிரிவு(கோவை)