வெள்ளி, 30 செப்டம்பர், 2016

""Surgical Strike"......


நமது மதிப்பு மிக்க இந்திய ராணுவத்தின் உழைப்பிலும் - உயிரிழப்பிலும் கூட அரசியல் ஆதாயம் தேட முயலும் பா.ஜ..க.
*******************************************************
நமது இந்திய ராணுவத்தின் அசாத்திய திறமைகளில் ஒன்று மிக நேர்த்தியாக கையாளப்படும் "Surgical Strike".
"Surgical Strike" என்பது அருகில் இருக்கும் மற்ற எதற்கும் சிறிதும் பாதிப்பு ஏற்படாதவாறு இலக்கை மட்டும் துல்லியமாக தாக்கும் முறை.
இந்த "Surgical Strike" முறை தாக்குதல் என்பது டாக்டர் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் துவங்கப்பட்டது.
2007-ல் ஒரு முறையும் 2014-ல் ஒருமுறையும் இந்த "Surgical Strike" முறையில் நமது நேசத்திற்குரிய இந்திய ராணுவம் பாகிஸ்தானை பலமாக தாக்கியது.
அன்றைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் "இது முழுக்க முழுக்க உயிரைக் கொடுத்து சாதிக்கும் ராணுவத்தின் சாதனை" என்பதனை உணர்ந்து அவர்களை வெகுவாக வாழ்த்தி அவர்களது வெற்றியில் இந்தியன் என்னும் முறையில் தானும் பெருமகிழ்ச்சி கொள்வதாக அறிவித்தார்.
ஆனால் இந்த "Surgical Strike" என்பது மோடி கண்டுபிடித்தது போலவும், மோடி பிரதமரான பின்புதான் முதன்முதலில் நிகழ்த்தப்படுவது போலவும் படோபட விளம்பரங்கள் செய்வதன் மூலம் பா.ஜ.க. போற்றுதலுக்குறிய ராணுவ நடவடிக்கைகளைக் கூட தனது அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துகிறது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.