செவ்வாய், 27 செப்டம்பர், 2016

தஞ்சை தெற்கு மாவட்டம் கண்டியூாில் நடந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டாம் கட்டமாக

அஸ்ஸலாமு அலைக்கும்...
தஞ்சை தெற்கு மாவட்டம் கண்டியூாில் நடந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டாம் கட்டமாக 25.09.2016 ஞாயிறு காலை 10 மணி அளவில் 60 குடும்பங்களுக்கு ரூபாய் 10,000 வீதம் மொத்தம் 6,00,000 (ஆறு லட்சம்) ரூபாய் கொடுக்கப்பட்டது. மேலும் எவர்சில்வர் பாத்திரங்கள், புதிய துணிகளும் வழங்கப்பட்டன.
இதில் சகேதரா் அஷ்ரஃப்தீன் ஃபிா்தவ்ஸி மற்றும் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் பங்குபெற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கினர்.
இதுவரை ரூபாய் 20 லட்சத்திற்கும் அதிகமான நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்.
பொருளாதரத்தை வாரி வழங்கிய அத்தனை நல் உள்ளங்களுக்கும், களப்பணி ஆற்றிய அனைத்து ஜமாஅத் சகோதரர்களுக்கும் படைத்தவன் ஈருலகிலும் சிறந்த வாழ்க்கையை வழங்க பிரார்த்திக்கிறோம்...
கண்டியூா் தீ விபத்திற்கான வரவு செலவு முடிக்கப்பட்டு விட்டது.
இன்ஷாஅல்லாஹ் மிக விரைவில் முழுமையான வரவு செலவு கணக்கு வெளியிடப்படும்.....
இவண்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமையகம்