வாழைப்பழத் தோலின் பலன்களை நீங்கள் தெரிந்து கொண்டால், இனி அதனை வீசி எறிய கொஞ்சம் யோசிப்பீர்கள்.அதன் நன்மைகள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
முள் குத்திய இடத்தில் வாழைப்பழத் தோலினை மெல்ல தடவுங்கள். பின்னர் அந்த இடத்தை சுற்றி அழுத்தம் கொடுத்தால் எளிதில் முள் வெளியே வந்துவிடும்.
இனி சருமம் பாதித்த இடங்களில் வாழைப்பழத் தோலினை தேயுங்கள். எரிச்சல் நின்று, சருமம் இயல்பு நிலைக்கு வரும். சருமத்தில் ஈரப்பதம் அளித்து, அரிப்பினை தடுக்க சிறந்த வழி இது
வாழைப்பழத் தோலினை மருக்கள் மீது வைத்து ஒரு துணியினால் கட்டி ஒரு இரவு முழுவதும் வைத்திருங்கள். நாளடைவில் மருக்கள் மாயமாய் மறைந்துவிடும்
முகப்பருவை எளிதில் போக்க வாழைப்பழம் இருந்தால் போதும். வாழைப் பழத் தோலில் இருக்கும் ஒரு என்சைம் சருமத்தின் துவாரங்களில் சென்று பாதிக்கப்பட்ட இடத்தில் செயல் புரிகிறது. இதனால் முகப்பருக்கள் குறைந்து, அதனால் ஏற்படும் தழும்புகளும் மறையும்.
பல் விளக்கிய பின், காலையிலும் இரவிலும், வாழைப் பழத் தோலினைக் கொண்டு உங்கள் பற்களை தேயுங்கள். அப்புறம் பாருங்க. பற்கள் மின்னும்.
பதிவு செய்த நாள் : September 09, 2016 - 02:03