ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

யம் சேவக் என்னும் காவி ஹிந்துத்துவா தீவிரவாதிகள் மதவாத அமைப்பின் பயிற்ச்சி முகாம்

இது மிக முக்கியமான பதிவு, வழக்கமாக கடந்து செல்வதை தவிர்க்கவும்..!!
நேற்று #PSN கல்லூரியில் RSS எனப்படும் சுயம் சேவக் என்னும் காவி ஹிந்துத்துவா தீவிரவாதிகள் மதவாத அமைப்பின் பயிற்ச்சி முகாம் நடப்பதாக தகவல் கிடைத்தது .
#DYFIதோழர்களுடன் அங்கு சென்று பார்வையிட்டோம் . போகும் முன் அங்கு போலீஸ் பாதுகாப்பு இருக்கக் கூடும் , அனுமதி மறுக்கப்படும் ,கல்லூரிக்கு விடுப்பு இருக்கும் என்றே நினைத்து சென்றோம் .
ஆனால் கல்லூரி நுழைவில் எவ்வித சலனமும் இல்லை , அந்த கல்லூரி வளாகம் கிட்டத்தட்ட இரண்டு ஊர்களை உள்ளடக்கம் செய்யும் அளவு பெரியது என்பது குறிப்பிடதக்கது .அந்த வளாகத்தில் பொறியில் கல்லூரி , மரைன் கல்லூரி ,பாலிடெக்னிக் கல்லூரி என மூன்று வளாகம் உண்டு. நாங்கள் எதிர்பார்த்த எதுவும் அங்கு இல்லை , கல்லூரி வழக்கம் போல் இயங்கியது , போலீஸ் இல்லை , எந்த ஒரு கொடிகளும் இல்லை .நுழைவு வாயிலில் வாட்ச்மெனிடம் அட்மிஷனுக்காக வந்திருக்கிறோம் என்று கூறி சென்றோம் . கல்லூரி வளாகம் மரங்கள் அதிகம் குழ்த்திருக்கும் , எங்களுக்கு வழி கண்டறிவதே சிரமமாகிப் போனது .
இறுதியில் பாலி டெக்னிக் மாணவர்களுக்கு விடுப்பு இருப்பதால் அங்கு வைத்து பயிற்ச்சி நடப்பதாக அறிந்தோம். அருகில் செல்லும் முன்பே தோரணமும் காவி கொடிகளும் கல்லூரி வளாகத்தினுள் மாணவர்கள் சென்று வரும் இடங்களெங்கும் வைக்கப்பட்டிருந்தது . பாலிடெக்னிக் கட்டிடம் கேன்டீன் அருகிலிருந்ததால் அனைத்து மாணவர்களும் வந்து செல்லும் இடமாக இருந்தது .
அந்த வளாகத்தின் இருபுறமும் காவிக்கொடி நடுவே சாலை வழியாக உள்ளே சென்றோம் , ஒரு பெரிய விளையாட்டு திடல் சுத்தபடுத்தப்பட்டு சில கோடுகள் வரையப்பட்டு மேடை அமைக்கப்பட்டிருந்தது .
புகைபடங்களில் காணும் RSS பயிற்ச்சி கூடத்தின் அச்சு மாதிரியாகவே இருந்தது .அதை புகைப்படம் எடுத்துக் கொண்டோம். பின்பு அந்த கட்டிடம் நோக்கி நகர்ந்தோம் சாலை முடிவில் ஆளுயர கம்புடன் ஒரு சிறுவன் முழு கால் காக்கி டவுசருடன் அமர்ந்திருந்தான் . "யார் நீங்க ? காலேஜ் ஸ்டுடன்ட்டா ? "என வினவினான் , நாங்கள் பேச்சு கொடுக்க ஆரம்பித்தோம் , அவன் 12ம் வகுப்பு படிக்கும் மாணவன் ,600 பேர் வந்திருப்பதாகவும், இரண்டாம் நிலை பயிற்ச்சி வடுப்பென்றும் மூன்றாம் நிலை வகுப்பு பெரிய அளவில் நடக்கும் என்று கூறினான், மேலும் 20 நாள்கள் பயிற்ச்சி , இது 8வது நாள் என்றும் கூறினான்.
பயிற்ச்சியில் என்ன நடக்கும் என கேட்டோம், கராத்தே , சிலம்பம் என எல்லா பயிற்ச்சியும் உண்டு என்றான் அத்துடன் அவைகளுக்கு வேறு பெயர் வைத்து குறிப்பிடுவோம் என்றான் .இவைகளை குறிப்பிட சமஸ்கிருதம் தான் முழுக்க முழுக்க பயன்படுத்துவோம் என்றான் .பின் கேன்டீன் சென்று திரும்பிய போது அந்த வகுப்பிற்க்குள்ளே நுழைய முயன்றோம் அனுமதி மறுத்துவிட்டர்கள். அங்கும் இங்கும் அரை டவுசர்கள் நடமாடிக் கொண்டிருந்தனர் , எல்லா தரப்பு வயதிலும் ஆட்கள் இருந்தனர் .
நாங்கள் வெளியேரும் போது மற்றொரு சிறுவன் காவலுக்கு நின்றிருந்தான் .அவன் 10ம் வகுப்பு முடித்த மாணவன் அவனிடம் எதற்க்கு இந்த அமைப்பில் சேர்ந்தீரகள் என்று கேட்டோம் , எங்கள் ஊர் சிவகங்கை அங்கே அதிகம் மக்கள் கிறிஸ்த்தவ மதத்திற்க்கு மாறுகிறார்கள் எனவே சேர்ந்தேன் என்றான் , மேலும் ஒரு மாவட்டத்தில் குறைந்தது 400 சாகா மையங்கள் இருப்பதாக கூறினான். அதிர்ந்து விட்டோம் அது எந்தளவு உண்மை என தெரியவில்லை.
10ம் வகுப்பு மாணவனை மத வெறியனாகவும் , மற்ற மதங்களை எதிர்ப்பவனாகவும் உருவாக்குவதோடு மட்டுமில்லாமல் , ஆயுத பயிற்ச்சிகளை வழங்கி வன்முறையாளனாக , இந்து மத பாதுகாவலன் என்று மூளைச்சலவை செய்து , வெறியனாக மாற்றும் இத்தகை அமைப்பை கல்லூரி வளாகத்தினுள் அதன் மத அடையாளங்களுடன் அனுமதித்துள்ளனர் .
மேலும் கல்லூரி இயல்பான நாட்களில் வெளிப்படையாக நடத்துகின்றனர் .இத்தகைய கல்லூரி , கல்வி நிறுவனங்களுக்கு எதிராக ஒரு பெரும் போரட்டம் தேவை அதோடு மட்டுமல்லாது , ஒரு மதவாத அமைப்பின் அமைப்பு ரீதியான செயல்பாட்டின் தெளிவு பிரம்பிக்க வைக்கிறது , ஜனநாயக முற்போக்கு அமைப்புகளைக் காட்டிலும் இவர்களின் அமைப்பு ரீதியான கட்டமைப்பு நேர்த்தியாக உள்ளது , இதனை உள்வாங்கி இதை விட பண்மடங்கு அதிக உழைப்பையும் திட்டமிடலையும் ஜனநாயக சக்திகள் மேற்கொள்ள வேண்டிய மிக முக்கியமான காலகட்டத்தில் நாம் உள்ளோம்.
கிட்டத்தட்ட முன்று மடங்கு நான்கு மடங்கு உழைப்பை கொடுக்க வேண்டிய நேரம் .இப்போதய குழலில் உலகின் மிகப் பெரிய பாசிச அமைப்புடனான போராட்ட களத்தில் உள்ளோம் , வரலாற்றின் பக்கங்கள் நிரம்பி கொண்டு வருகின்றன , ஹிட்லராக , முசோலினியாக இப்போது நாம் தனி நபரை மட்டும் எதிர்க்க போவதில்லை, ஒரு மாபெரும் அதிகாரம் பொருத்திய கூட்டத்துடன் போராட போகிறோம் வரலாற்றின் பக்கங்கள் நம்மால் சரியாக நிரப்பப்பட வேண்டும்
Veeranam M.A.Muthalibu
https://www.facebook.com/mptkhanguys.in/photos/a.362789173858706.1073741827.362780747192882/937577389713212/?type=3&theater
Image may contain: text

மின்சாரம் ஒரு யூனிட் ரூ.3 ஆக நிர்ணயம்?

அனைத்து முறைகளில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்துக்கும் ஒரே மாதிரியாக விலை நிர்ணயிக்க பரிசீலிக்கப்படுவதாக மத்திய மின்சாரத் துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் சிஐஐ ஆண்டு மாநாட்டில் பேசிய அவர், குறுகிய கால அடிப்படையில் மின்சாரத்துக்கு ஒரு யூனிட் 3 ரூபாய் என விலை நிர்ணயிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். நீர், அனல், சூரியசக்தி, காற்றாலை என எல்லா மின்சாரத்துக்கும் ஒரே கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். விவசாயிகளுக்கான மின்சார இணைப்புக்கு கட்டணத்தை உயர்த்தும் திட்டம் ஏதுமில்லை என்றும் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் தேர்தலில் நிற்க 5 ஆண்டுகள் தடை! April 30, 2017

வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் வேட்பாளர்கள் 5 ஆண்டுகள் வரை தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவருமாறு  மத்திய அரசுக்கு பரிந்துரைக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. 

பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் மூலம் வாக்காளர்களைக் கவர வேட்பாளர்கள் முயன்றதாகக் கூறி ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் சமீபத்தில் ரத்து செய்தது. இதையடுத்து வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டுக்களைப் பெற முயற்சிக்கும் வேட்பாளர்கள் தேர்தலில் நிற்க தடைவிதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்துள்ளது. 

இந்நிலையில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பான வழக்கில் வேட்பாளர் ஒருவர் சிக்கி அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டால் அவர் அடுத்த 5 ஆண்டுகள் தேர்தலில் நிற்க முடியாதபடி சட்டத்திருத்தம் கொண்டுவர மத்திய சட்ட அமைச்சகத்திற்கு பரித்துரைக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. 

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் இதற்காக கொண்டு வர வேண்டிய திருத்தம் குறித்து சட்ட அமைச்சகத்திற்கு கடிதம் எழுத தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாகக் தகவல்கள் கூறுகின்றன.

மத்திய அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்! April 30, 2017

மத்திய அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்!


இந்தி அல்லாத மொழி திரைப்படங்களுக்கு சப் டைட்டில் போடக்கூறும் நடவடிக்கைக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஸ்டாலின், “ கடந்த 6 வருடமாகவே அரசு நிர்வாக முடங்கிபோய் உள்ளது. குறிப்பாக ஜெயலலிதா இறந்த பிறகு  இந்த அரசு செயலற்று காணப்படுகிறது.இவற்றையெல்லாம் பயன்படுத்திக்கொண்டு மத்திய அரசு தமிழகத்தில் காலூன்ற துடிக்கிறது. எந்த மொழி திரைப்படமாக இருந்தாலும் அதற்கு இந்தி மொழியில் ‘சப்டைட்டல்’ போடவேண்டும் என்று அறிவிப்பு வந்திருக்கிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இவற்றையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டுதான் தொடர்ந்து திமுக மத்திய அரசுக்கு எதிராக குரல்கொடுத்துக் கொண்டிடுக்கிறது" என தெரிவித்தார்
 

யோகி ஆதித்யநாத்துடன் ஒரே மேடையில் அமர்ந்த கொலைக் குற்றவாளி எம்எல்ஏ! April 30, 2017

யோகி ஆதித்யநாத்துடன் ஒரே மேடையில் அமர்ந்த கொலைக் குற்றவாளி எம்எல்ஏ!


உத்தரப்பிரதேசத்தில் கொலை வழக்கில் தொடர்புடைய சுயேட்சை எம்.எல்.ஏ. ஒருவர் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் ஒரே மேடையில் அமர்ந்திருந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 

உத்தரப்பிரதேசத்தில் மனைவியைக் கொன்ற வழக்கில் சிறை சென்ற அமன்மணி திரிபாதி என்பவர் சட்டமன்றத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் தேர்தலில் போட்டியிட்ட சமயத்திலேயே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். இந்நிலையில், கோரக்பூரில் நடைபெற்ற விழா ஒன்றில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டார். 

இந்த விழாவில் எம்.எல்.ஏ. அமன்மணி திரிபாதி கலந்துகொண்டு யோகி ஆதித்யநாத்துடன் மேடையை பகிர்ந்துகொண்ட சம்பவம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. யோகி ஆதித்யநாத் பங்கேற்கும் விழாக்களில் அமன்மணி திரிபாதியும் கலந்துகொள்வது அதிகரித்துள்ளது. எதிர்க்கட்சியினர் மட்டுமில்லாது பாஜகவினரும் இந்த விவகாரத்தில் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது

ஆக்ரா: காவல்நிலையத்தை சூறையாடிய காவி பயங்கரவாதிகள் 30 APRIL 2017

நாடெங்கும் பசுவை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் நரவேட்டையாடி வரும் சங்பரி வார அமைப்புகள் மாட்டு வியாபாரிகளையும், பால் பண்ணை வைத்திருக்கும் விவசாயிகளையும் தாக்குவதையும், கொல்வதையும் வாடிக்கையாக வைத்திருக்கின்றனர்.

நரேந்திர மோடி பதவியேற்றதிலிருந்து இவர்களின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாட்டு வியாபாரிகள், விவசாயிகள் தாக்கப்படும் போதும் அவர்களது வாகனங்கள் சூறையாடப்படும் போதும் வேடிக்கை பார்க்கும் காவல்துறை இப்போது தனது தவறுக்கான பலனை அனுபவித்திருக்கிறது.

உத்திர பிரதேச மாநிலம் ஆக்ராவில் முஸ்லிம் வியாபாரிகளை தாக்கியதாக சங்கபரிவார அமைப்புகளைச் சேர்ந்த ஐந்து பேர் மீது ஆக்ராவின் சதர் பஜார் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஐவரையும் விசாரணைக்காக காவல்துறை அழைத்து சென்றது.

இதையடுத்து பதேபூர் சிக்கி தொகுதியான் ஙியிறி விலிகி உதய்பான் சிங் தலைமையில் பாஜக, இந்து யுவவாஹினி, பஜ்ரங்தள், க்ஷிபிறி அமைப்பை சேர்ந்த 25 பேர் பதேபூர் சிக்கி மற்றும் சதர் பஜார் காவல்நிலையங்களை தாக்கி சூறையாடினர்.

மேலும் காவல்நிலையத்துகள் புகுந்து கைது செய்யப்பட்ட வர்களை விடுவித்ததோடு தடுக்க வந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர், ஆய்வாளர், துணை ஆய்வாளரையும் சரமரியாக தாக்கியுள்ளனர். 
காவல்நிலையத்துக்கு வெளியே நிறுத்தி வைக்க்க்கப்பட்ட வாகனங்கள் எரிக்கப்பட்டன. உதவி ஆய்வாளர் ஒருவரது துப்பாக்கியையும் வன்முறைக் கும்பல் பறிந்து சென்றது. உ.பி மாநிலத்தில் யோகி ஆதியநாத் தலைமையிலான பாஜக அரசு பதவியேற்ற ஒரு மாதத்திற்குள்ளாக நடைபெற்றுள்ள இந்த வன்முறை சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து காவல்துறை 200பேர்கள் மீது வழக்கு பதிவு செய்து15பேரை கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இனியாவது காவல்துறை விழித்துக் கொள்ளுமா?

தாஜ்மஹாலில் காவிகள் அட்டுழியம்.

கடந்த 23ம் தேதியன்று தாஜ்மஹால் வளாக்த்திற்குள் புகுந்த சங்பரிவார அமைப்புகளின் குண்டர்கள் காவிக் கொடிகளை அணிய சுற்றுலா பயணிகளை வற்புறுத்தினர். இதனால் சுற்றுலா பயணிகள் பயந்து அலறியடித்து கொண்டு ஒட்டம் பிடித்தனர். ரவுடிக்கும்பலை அடக்குவதற்கு வழி தெரியாமல் காவலர்கள் திகைத்து நின்றனர்.இது குறித்து பேசிய ஆக்ரா சுற்றுலாத்துறை மேம்பாட்டு சங்கத்தின் செயலாளர் விஷால் ஷர்மா, சங்பரிவார அமைப்புகளை சேர்ந்தவர்கள் பாதுக்காக்கப்பட்ட தேசிய சின்னங்கள் இருக்குமிடத்தில் இவ்வாறு நடந்து கொள்வது கண்டனத்துக்குரியது. இது போன்ற சம்பவங்கள் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பாதகமான விளைவை ஏற்படுத்தும் தங்களின் கீழ்ந்தரமான அரசியலை இது போன்ற மதிப்பு வாய்ந்த இடங்களில் செய்யாமலிருப்பது நல்லது என்று காட்டமாக கூறினார்.
http://makkalurimai.com/index.php/stories/20-india/607-rss-workers-attack-agra-police-station

பொதுமக்களே உஷார்..! நூதன முறையில் பெட்ரோல் திருட்டு..மாதம் ரூ.14 லட்சம் வரை சம்பாதிக்கும் பங்க் உரிமையாளர்கள்.., – பகீர் ரிப்போர்ட் !

உ.பி. மாநிலம் முழுவதும் பரவலாக பெட்ரோல் பங்க்களில் வாடிக்கையாளர்களிடம் பெட்ரோல் திருடப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து சிறப்பு இலக்கு படையினர் லக்னோவில் உள்ள பெட்ரோல் பங்க்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது 8 பங்க்களின் உரிமையாளர்கள் மின்னணு சிப் உதவியுடன் பெட்ரோல் திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிப் பெட்ரோல் போடும் எந்திரத்தில் பொறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்திரத்தில் சரியான அளவு பெட்ரோல் போடப்பட்டதாக காட்டுகிறது.
ஆனால், உண்மையான அளவு குறைவாக இருப்பது கண்டுபிடி க்கப்பட்டது. உதாரணமாக ஒரு வாடிக்கையாளர் 5 லிட்டர் பெட்ரோல் போட்டால் அரை லிட்டர் குறைவாக உள்ளது. ஆனால் எந்திரத்தில் 5 லிட்டர் போடப்பட்டதாக காட்டுகிறது. இது அந்த மின்னணு சிப் மூலம் சாத்தியமாகிறது.
இந்த சிப்பில் ரிமோட் கன்ட்ரோல் மூலம் அளவு நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒரு லிட்டருக்கு 60 மிலி பெட்ரோல் திருடப்படுகிறது. இத்தகைய பெட்ரோல் திருட்டு மூலம் மாதந்தோறும் ரூ. 14 லட்சத்தை உரிமையாளர்கள் சம்பாதிக்கின்றனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
லக்னோவை சேர்ந்த ரவீந்தர் என்ற எலக்ட்ரிஷியன் இந்த சிப்பை 3 ஆயிரம் ரூபாய்க்கு தயாரித்து வழங்குகிறார். இதன் மூலம் 6 சதவீத எரிபொருள் எந்திரத்தில் இருந்து வெளியேறுவது தடுக்கப்படுகிறது. இந்த சிப் ஒயர் மூலம் ரிமோட் கன்ட்ரோலோடு இணைக்கப்பட்டுள்ளது.
இந்த சிப்பை ஆயிரம் பங்க்களுக்கு ரவீந்தர் விற்பனை செய்துள்ளார்.லக்னோ மாநகரில் மட்டும் 8 பங்க்களில் சோதனை நடத்தப்பட்டது. அனைரும் இந்த சிப் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்

குடிநீருக்காக ஆற்றுக் கிணற்றில் ஊறும் தண்ணீருக்காக பொதுமக்கள் காத்திருக்கும் அவலம்! April 30, 2017

குடிநீருக்காக ஆற்றுக் கிணற்றில் ஊறும் தண்ணீருக்காக பொதுமக்கள் காத்திருக்கும் அவலம்!


தூத்துக்குடி அருகே நிலவிவரும் குடிநீர் பற்றாகுறையால் பல தொலைவு நடந்து, ஆற்றுக் கிணற்றில் ஊறும் தண்ணீருக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் அயன்பட்டி ஊராட்சியில் உள்ள வைப்பாற்றில் அரசு அனுமதியின்றி ஆற்று மணல் கொள்ளையடிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து வருவதுடன், சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடிநீர் பற்றாகுறை நிலவி வருவதாக பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

இதன் காரணமாக, வைப்பாற்றில் போடப்பட்டுள்ள கிணற்றில் வாளி மூலம் குடிநீர் எடுத்து தங்களின் தண்ணீரின் தேவையை பூர்த்தி செய்துகொள்ளும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 

தங்களின் குடிநீர் தேவையை போக்க அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இருபிரிவினர் மோதலில் வாழ்விடத்தை இழந்து அகதிகளான 10 குடும்பங்கள்! April 30, 2017

மணப்பாறை அருகே இருபிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலால், 10 குடும்பங்களை சேர்ந்த 30 பேர், ஒவ்வொரு கிராமங்களாக சென்று அகதிகள் போல் வாழ்ந்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர். 
இருபிரிவினர் மோதலில் வாழ்விடத்தை இழந்து அகதிகளான 10 குடும்பங்கள்!

மணப்பாறை அருகே உள்ள சீலநாயக்கன்பட்டி கிராமத்தில், பொது பாதையை ஆக்கிரமித்து ஒருபிரிவினர் கழிவறை கட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. விதிமுறை மீறி கட்டப்பட்டதாக கூறி, இந்த கழிவறை மற்றொரு பிரிவினர் இடித்து தள்ளினர். 

இதனால், இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், அச்சம் அடைந்த 10 குடும்பத்தினர், கிராமத்தை காலி செய்துவிட்டு மற்றொரு கிராமத்தில் தஞ்சம் புகுந்தனர். 

நாடக கலைஞர்களான இவர்கள், மீண்டும் தங்கள் சொந்த கிராமத்தில் வாழ அச்சமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். தங்கள் பிரச்னைகள் குறித்து அறிந்தும், அதிகாரிகள் மற்றும் போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அறிந்து கொள் தோழா : முல்லை பெரியார் அணையை பற்றிய செய்தி.- வீடியோ

அறிந்து கொள் தோழா : முல்லை பெரியார் அணையை பற்றிய செய்தி.- வீடியோ 

உண்மையில் CBSE தானா ???

CBSE என விளம்பர கொடுக்கும் பள்ளிகள் உண்மையில் CBSE தானா என அறிய http://www.cbseaff.nic.in என்ற இணையதளத்தில் கண்டறியுங்கள்..!!
உண்மையில் பல பள்ளிகள் ஏமாற்று வேலையில் ஈடுபட்டு வருகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை, நாம் விழிப்புணர்வாக இருந்துவிட்டு போவோமே..!!

கோவையில் காரில் துப்பாக்கியுடன் சுற்றிய கும்பல்!

கோவை மாவட்டம் சூலூர் அருகே காரில் துப்பாக்கியுடன் வந்த கும்பலை பிடித்து புலனாய்வுபிரிவு போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே நேற்று மாலை ஆறு பேர் கொண்ட  கும்பல் ஒன்று தனி வாகனத்தில் சென்றுகொண்டிருந்தது.  அந்தக் கும்பலை தஞ்சாவூரில் இருந்து பின் தொடர்ந்து வந்த புலனாய்வு பிரிவு போலீசார் ஆறு பேரையும் சுற்றி வளைத்து பிடித்துள்ளனர்.

பின்னர் அவர்களிடம் இருந்து இரண்டு துப்பாக்கிகள் மற்றும் 15  துப்பாக்கி குண்டுகளைக் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக சூலூர் காவல்நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு பின்னர் புலனாய்வு பிரிவு போலீசார் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

அவர்கள் அனைவரும் பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடையவர்கள் எனவும், துப்பாக்கி விற்கும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்த போலீசார், அவர்கள் துப்பாக்கியுடன் கோவைக்கு வந்தது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.
http://kaalaimalar.net/mob-surrounded-car-gun-coimbatore/

மண்ணின்றி, மிக குறைந்த அளவு தண்ணீரை கொண்டு நவீன விவசாயம்! April 30, 2017



மண்ணின்றி, மிக குறைந்த அளவு தண்ணீரை கொண்டு நவீன விவசாயம்!
மண்ணின்றி, மிக குறைந்த அளவு தண்ணீரை கொண்டு நவீன விவசாய பண்ணைகள் அமைக்கும் சோதனை முயற்சி அமெரிக்காவில் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

நியூஜெர்ஸி மாகாணத்தில் இத்தகைய நவீன விவசாய முறையில் பயிர் வளர்ப்புக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய அளவிலான விவசாய நிலத்தேவையை குறைத்திடுவதால், இம்முறை அந்நாட்டில் பிரபலமடைந்து வருகிறது. 

இந்த பயிர் வளர்ப்புக் கூடங்களில் 250 வகை கீரைகள் உள்ளிட்ட சிறுபயிர்கள் விவசாயத்தை அந்நாட்டினர் மேற்கொண்டுள்ளனர். இதற்கான உள் அரங்குகளில் சிறிய சிறிய அடுக்கை அமைத்து, அதில் கீரை மற்றும் சிறு பயிர்களை வெற்றிகரமாக பயிரிட்டு வருகின்றனர். 

மேலும் சூரிய ஒளிக்கு பதிலாக மின்விளக்குகளையும் அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த அசத்தல் முறை தான் வருங்காலத்தின் விவசாயம் என்றும் அமெரிக்க வேளாண் விஞ்ஞானிகளும் தெரிவித்துள்ளனர்.

தலித் மக்கள் பயன்படுத்தும் கிணற்றில் மண்ணெண்ணெய் ஊற்றி ஆதிக்க சாதியினர் அராஜகம்! April 30, 2017

தலித் மக்கள் பயன்படுத்தும் கிணற்றில் மண்ணெண்ணெய் ஊற்றி ஆதிக்க சாதியினர் அராஜகம்!


மத்திய பிரதேசத்தில், தலித் மக்கள் பயன்படுத்தும் கிணற்றில் மண்ணெண்ணெய் ஊற்றி உயர் சாதியினர் அராஜகம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மனா கிராமம். இங்கு வசிக்கும் சந்தர் மேக்வால் என்ற தலித் சமூகத்தை சேர்ந்தவர், தனது மகளுக்கு திருமண ஏற்பாடு செய்துள்ளார். 

மணமகனை வரவேற்பதாக பேண்டு வாத்தியங்களை அவர் பயன்படுத்தியதை அறிந்த ஆதிக்க சாதியினர், கிராமப் பகுதி வழக்கப்படி தலித்துகள் மேளம் மட்டுமே பயன்படுத்த அனுமதி உண்டு என்றும், பேண்டு வாத்தியங்கள் ஆதிக்க சாதியினருக்கானது என்றும் தெரிவித்தனர்.

கடும் எதிர்ப்பையும் மீறி, சந்தர் மேக்வால், மணமகனை வரவேற்க பேண்டு வாத்தியங்களை ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த ஆதிக்க சாதியினர், தலித் மக்கள் குடிநீருக்காக பயன்படுத்தும் கிணற்றில் பல லிட்டர் மண்ணெண்ணெய் கொட்டியுள்ளனர். இதனால் அந்தக் கிணற்றின் நீரை பயன்படுத்தாத நிலை தலித் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. 

இதையறிந்த மாவட்ட ஆட்சியர் சிங், சம்பந்தப்பட்ட கிணற்றை ஆய்வு செய்து,  ஆதிக்க சாதி ஆட்களை எச்சரித்ததுடன், புதிதாக இரண்டு போர்வெல் போடவும் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் இன்று இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம்! April 30, 2017




தமிழகம் முழுவதும் இன்று இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. 

இளம்பிள்ளை வாதம் எனும் போலியோவை ஒழிக்க, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் 2 தவணைகளாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. 

இந்த ஆண்டு முதற்கட்ட முகாம் கடந்த 2ம் தேதி நடத்தப்பட்ட நிலையில், 2-ம் கட்டமாக தமிழகம் முழுவதும் இன்று சொட்டு மருந்து முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என 43 ஆயிரத்து 51 மையங்களில்  போலியோ சொட்டு மருந்து வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. 

மக்கள் அதிகம் கூடும் பேருந்து, ரயில் நிலையங்களிலும் சொட்டு மருந்து முகாம்கள் செயல்படும். சுமார்  2 லட்சம் பேர் சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபடுகின்றனர். 

5 வயதுக்கு உட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து தவறாமல் கொடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

தேனி அருகே திறந்த வெளியில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்! April 30, 2017


தேனி அருகே திறந்த வெளியில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்!

தேனி அரசு மருத்துவமனையின் மருத்துவ கழிவுகளை முறையாக அழிக்காமல் திறந்த வெளியில் கொட்டுவதால், பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. 

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கண்டமனூர் விலக்கு பகுதியில் அமைந்துள்ளது அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை. கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த  அரசு மருத்துவமனைக்கு தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவிலிருந்தும் இருந்தும் நாள் ஒன்றுக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று பலனடைந்து வருகின்றனர். 

இந்த மருத்துவமனையில் சேரக்கூடிய மருத்துவ கழிவுகள்,  திருமலாபுரம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட சுப்புலாபுரம் விலக்கு பகுதியில் கொட்டப்பட்டு வருகிறது. முறையாக பள்ளம் தோண்டி மருத்துவ கழிவுகளை கொட்டாமல் ஆங்காங்கே கொட்டுவதால்  மருத்துவ கழிவுகள் அனைத்தும் மலை போல் குவிந்துள்ளது. 

மருத்துவ கழிவுகளை ஏற்றி வரும் வாகனம் சாலை முழுவதும் கழிவுகளை இறைத்தவாறே செல்வதால், சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட ஊசி, மருந்து பாட்டில்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவ கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். 

பல மாதங்களாக கிடக்கும் மருத்துவ கழிவுகளால் அப்பகுதி முழுவதுமே துர்நாற்றம் வீசுவதாகவும், இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

சனி, 29 ஏப்ரல், 2017

நீட் பற்றி தெளிவான விளக்கம்


தமிழர் நாகரிகத்தை இந்துத்துவ நாகரிகமாக மாற்ற முயற்சியா? கீழடி அகழ்வாராய்ச்சி பகுதியை அழிக்க மத்திய அரசு முயற்சி

தமிழ்நாட்டில் உள்ள சிவகங்கை மாவட்டத்தில் கீழடி என்ற கிராமத்தில் நடைபெறும் அகழ்வாராய்ச்சி தமிழர்களின் புராதன நாகரிகம் வெளிச்சத்துக்கு வரும் நிலையில் அந்த ஆராய்ச்சியை திசைதிருப்ப மத்திய அரசு முயற்சி செய்கிறது.
கிமு 2ம் நூற்றாண்டு முதல் கிபி 10ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட தமிழர்களின் தொன்மையான நாகரிகத்துக்கு சான்றாக கீழடி ஆய்வு இருக்கிறது.
சங்ககாலத்தில் கட்டிடங்கள் இருந்திருக்க வாய்ப்பே இல்லை என்று கூறப்படும் கூற்றை இந்த ஆய்வுகள் பொய்யாக்கி உள்ளன. செங்கல் கட்டிடங்கள், குழாய்கள் பதித்த கழிவுநீர் தொட்டிகள், சுடு உறை கிணறுகள் என்று வியப்பை ஏற்படுத்தும் நாகரித்துக்கு சொந்தக்காரர்கள் கீழடியில் வாழ்ந்திருப்பது தெரியவருகிறது.
ரோமானியர்களுடன் வர்த்தகம் செய்ததற்கான சான்றுகளும் வெளிப்படுகின்றன. எனவே, கீழடியை பாதுகாக்கப்பட்ட அருங்காட்சியகமாக மாற்றவேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது.
பாதுகாப்பு இல்லாததால் பல அறிய பொருட்கள் சேதப்படுகின்றன என்று ஆய்வு குழுவினர் கூறினார்கள். ஆனால், அரசு இந்த கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது.
இந்நிலையில் அகழ்வாராய்ச்சி பணிக்குழு தலைவராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணாவை மத்திய அரசு பணியிடமாற்றம் செய்தது. இதை தமிழ் அமைப்புகள் வன்மையாக கண்டித்தன. அரசியல் கட்சிகளும் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பின.
போதுமான நிதியும் பாதுகாப்பும் வழங்க மத்திய அரசு மறுப்பதற்கு இந்துத்துவ போக்குதான் காரணம் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் சில நாட்களுக்குமுன் கீழடிக்கு வந்த மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் சர்மாவையும் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனையும் தமிழ் அமைப்புகள் கருப்புகொடி காட்டி கண்டனத்தை தெரிவித்தன.
அப்போது அந்த அமைப்பினர் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தினர். பாதுகாக்கப்பட்ட தொல்லியல் ஆய்வுப்பகுதியில் பாஜகவினர் நடத்திய இந்த தாக்குதலை போலீஸார் தடுக்க ஏற்பாடு செய்யவில்லை.
இந்நிலையில் அகழ்வாராய்ச்சி பணிக்கு 40 லட்சம் ரூபாய் ஒதுக்கியிருப்பதாக அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்தார். இந்த 40 லட்ச ரூபாய் 4 மாதங்களுக்குகூட போதாது என்று ஆய்வுக்குழுவினர் தெரிவித்தனர்.

http://kaalaimalar.net/why-the-excavation-of-an-ancient-2500-year-old-tamil-city-keeladi-has-not-reached-main-stream-media/

மோடிக்கு வளையல் வாங்கி கொடுக்க..ஸ்மிருதி இரானிக்கு பணம் அனுப்பிய விளையாட்டு வீரர்

























http://kaalaimalar.net/former-international-athlete-send-rs-1000-cheque-to-buy-bangles-for-pm-modi/

இந்தியாவில் லஞ்சம் பற்றிய தகவல் தொகுப்பு! April 29, 2017

இந்தியாவில் லஞ்சம் பற்றிய தகவல் தொகுப்பு!


இந்தியாவில் அரசு சேவைகளை பெறுவதற்கு லஞ்சம் கொடுக்கப்படுவது குறித்த ஆய்வில், அதிக லஞ்சம் வாங்கும் மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது தெரியவந்துள்ளது.  இது குறித்த கூடுதல் தகவல்களை இனி பார்ப்போம்.

இந்தியாவில் லஞ்சம் - ஒரு பார்வை

2017 : இந்தியாவில் அரசு சேவைகளை பெறுவதற்கு ரூ 6,350 கோடி லஞ்சம் 

இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கு குடும்பங்கள் லஞ்சத்தால் பாதிப்பு 

2017 : அரசு சேவைகளுக்கு லஞ்சம் அதிகரித்துள்ளதாக 43 சதவிகிதம் பேர் கருத்து

காவல், பொது விநியோகம், மின்சாரம், நீதித் துறைகளில் லஞ்சம் அதிகரிப்பு 

10 ரூபாயில் தொடங்கும் லஞ்சம், ரூ.50 ஆயிரம் வரை பெறுவதாக தகவல்

பெரும்பாலும் ரூ.100  முதல் ரூ.500 வரை அரசு சேவைக்காக லஞ்சம் 

இந்தியாவில் அதிகம் லஞ்சம் வாங்கும் மாநிலம் கர்நாடகா 

லஞ்சம் வாங்குவதில் தமிழகம் மூன்றாவது இடம் 

கேரளா, இமாச்சல பிரதேச மாநிலங்கள் லஞ்சம் வாங்குவதில் கடைசி இடத்தில் உள்ளன.

தமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்! April 29, 2017



தமிழகம் முழுவதும் இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை நடைபெறுகிறது. 

இளம்பிள்ளை வாதம் எனும் போலியோவை ஒழிக்க, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் 2 தவணைகளாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு முதற்கட்ட முகாம் கடந்த 2ம் தேதி நடத்தப்பட்ட நிலையில், 2-ம் கட்டமாக தமிழகம் முழுவதும் நாளை சொட்டு மருந்து முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என 43 ஆயிரத்து 51 மையங்களில்  போலியோ சொட்டு மருந்து வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. மக்கள் அதிகம் கூடும் பேருந்து, ரயில் நிலையங்களிலும் சொட்டு மருந்து முகாம்கள் செயல்படும். 

சுமார்  2 லட்சம் பேர் சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபடுகின்றனர். 5 வயதுக்கு உட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து தவறாமல் கொடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்

ரிக்ஷா ஓட்டும் தொழிலாளியை இரக்கமற்ற முறையில் அடித்து இழுத்துச் சென்ற போலீஸ் அதிகாரி! April 29, 2017


ரிக்ஷா ஓட்டும் தொழிலாளியை இரக்கமற்ற முறையில் அடித்து இழுத்துச் சென்ற போலீஸ் அதிகாரி!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், ரிக்ஷா ஓட்டும் தொழிலாளி ஒருவரை, காவல்துறை அதிகாரி ஒருவர் அடித்து இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 லக்னோவின் சார்பாக் ரயில்நிலையம் பகுதியில் சவாரிக்காக காத்திருந்த வயதான ரிக்ஷா தொழிலாளியை, அங்கிருந்து வெளியேறுமாறு அப்பகுதி காவல்துறை அதிகாரி ஒருவர் மிரட்டியுள்ளார். 

அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, அந்த தொழிலாளியை அடித்து, தர தர வென்று போலீஸ் அதிகாரி இழுத்துச் சென்றார். 

வழியில், அந்த ரிக்ஷா தொழிலாளி கீழே விழுந்தபோதும், அதைப் பொருட்படுத்தாமல், அந்த முதியவரை காவல்துறை அதிகாரி இழுத்துச் சென்ற காட்சி, அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியது.

ஒரு மாதத்திற்கு 100 கோடி ரூபாய் சம்பளம் பெறும் தமிழர்! April 29, 2017

ஒரு மாதத்திற்கு 100 கோடி ரூபாய் சம்பளம் பெறும் தமிழர்!


கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை, கடந்த 2016ம் ஆண்டு 1,285 கோடியே 50 லட்சத்தை சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அமெரிக்காவில் செயல்பட்டு வரும் கூகுள் நிறுவனத்தின், தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த சுந்தர் பிச்சை பணியாற்றி வருகிறார். இவரது செயல்பாட்டின் கீழ் செயல்படும் கூகுள் நிறுவனம் கடந்த 2016ம் ஆண்டு புதிய ஸ்மார்ட் போன்கள், ஹெட்செட்கள், ஸ்மார்ட் ஸ்பீக்கர்களை அறிமுகப்படுத்தின. 

இந்நிலையில், சுந்தர் பிச்சைக்கு கடந்த ஆண்டு கூகுள் நிறுவனம் 6 லட்சம் டாலர்களை சம்பளமாக வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய ரூபாய் மதிப்பின் படி, இந்த தொகை சுமார் ஆயிரத்து 285 கோடியே 50 லட்சம் என கூறப்படுகிறது. கடந்த 2015ம் ஆண்டு சுந்தர் பிச்சை 6 லட்சத்து 2,500 டாலர்களை சம்பளமாக பெற்றது குறிப்பிடத்தக்கது. 

வேதிப்பொருட்கள் நிறைந்த நீரை பூமிக்கு அடியில் செலுத்தும் ONGC! April 29, 2017


வேதிப்பொருட்கள் நிறைந்த நீரை பூமிக்கு அடியில் செலுத்தும் ONGC!

நாகை அருகே பூமிக்கு அடியில் வேதிப்பொருட்கள் நிறைந்த நீரைச் செலுத்துவதை ONGC நிறுவனம் நிறுத்தவேண்டும் என வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

நாகை மாவட்டம் எரவாஞ்சேரி ஊராட்சியில் ONGC நிறுவனத்தின்  கச்சா எண்ணெய் எடுக்கும் தொழிற்சாலை இயங்கிவருகிறது. இந்த கிராமத்தில் கச்சா எண்ணெய் எடுப்பதனாலும், பின்னர் சுத்திகரிக்கபடாத, வேதிப்பொருள் நிறைந்த நீரை பூமிக்கு அடியில் செலுத்துவதாலும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சுமத்துகின்றனர்.

எனவே இந்நிறுவனத்தின் செயல்பாடுகளை எதிர்த்து எரவாஞ்சேரியை சுற்றியுள்ள வடகுத்தாலம், மத்தியகுடி உள்ளிட்ட கிராமமக்கள் பெண்கள் காலிக்குடங்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பூமிக்கு அடியில் இருந்து கச்சா எண்ணெய் எடுக்கும் கிணறுகளை மூடவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சாதிய கட்டமைப்பை தூக்கிப்பிடிக்கிறதா பாகுபலி ? April 29, 2017




இந்தியாவின் சாதிய அமைப்பைப்பற்றி சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவித்த இயக்குனர் ராஜமவுலியை கடுமையாக விமர்சனம் செய்துவருகின்றனர் இனையவாசிகள்.

கடந்த 2012-ம் ஆண்டு இயக்குனர் ராஜமவுலி தன்னுடைய டிவிட்டர் மற்றும் முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “ இந்தியாவின் சாதிய கட்டமைப்பை நாம் மனுஸ்மிருதி நூலில் இருந்துதான் கற்றுக்கொண்டோம். மனுஸ்மிருதி நூலானது நம்முடைய பிறப்பின் அடிப்படையில் எழுதப்பட்டதல்ல மாறாக நம் வாழ்க்கை முறையை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட ஒரு நூலாகும். என்னுடைய நண்பர் பிரசாத் என்பவர் மனுஸ்மிரிதியை பற்றி பல சிறப்பான விளக்கங்களை எனக்கு கொடுத்துள்ளார்.


பஞ்சம சாதியை சேர்ந்தவரக்ள்  தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக பிறரை மட்டுமே நம்பி இருப்பவர்கள் ( அடைப்பு குறிக்குள் அவரக்ளை தீண்டத்தகாதவர்கள் என்று ராஜமவுலி குறிப்பிடுகிறார்).

சூத்திரர்கள் எனப்படுபவர்கள் தனக்காகவும் தன் குடும்பத்துக்காகவும் மட்டுமே வாழ்பவர்கள்.

வைசியர்கள் வனிகம் செய்வது மூலமாக தானும், தன்னுடன் வியாபாரம் செய்யும் நபர்களுக்கும் சேர்த்து பொருளை சேர்க்கும் குணங்களை உடையவர்கள்.

சத்திரியர்கள் எனப்படுபவர்கள் தன் ஆளுகைக்கு கீழுள்ள அனைவரும் உணவு உண்ட பிறகே தாங்கள் உண்ணும் குணம் படைத்தவர்கள்.

பிராமணர்கள் கல்வியை முதலில் தாங்கள் கற்றுக்கொண்டு பிறகு மற்றவர்களுக்கு கற்பிப்பவர்கள்” என்று தன்னுடைய பதிவில் ராஜமவுலி குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து பல ‘பேண்டசி’ திரைப்படங்களின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான இயக்குனர் ராஜமவலி, வெளிப்படையாகவே சாதிய அமைப்பை நியாயப்படுத்தி விளக்கங்களை கொடுத்திருப்பது முற்போக்காளர்களை மட்டுமில்லாது வெகுஜன மக்களையும் கோபத்திற்குள்ளாக வைத்துள்ளது. எனவே அவரது பழைய பதிவை 'screen shot' எடுத்த நெட்டிசன்கள், அதை  தங்களுடைய இனைய பக்கங்களில் பகிர்ந்து ராஜமவுலியை கடுமையாக விமர்சனம் செய்துவருகின்றனர்.

Tamilisai Soundararajan ஓட ஓட விரட்டி அடித்த ஊர் போது மக்கள்

சிவகங்கை கீழடி அகழ்வாராய்ச்சியை பார்வையிட வந்த மத்திய அமைச்சர் மற்றும் பாஜக தலைவருக்கு எதிர்ப்பு,
போராட்டக்காரர்களுக்கும் பாஜகவினருக்கும் இடையே மோதல்!
கீழடியில் தமிழர்களின் தொன்மையை எடுத்துக்காட்டும் வண்ணம் பல்வேறு பொருட்கள் அகழ்வாராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது, இந்த ஆராய்ச்சியை தலைமை தாங்கி நடத்திய அதிகாரி அமர்நாத் திடீர் என அஸ்ஸாம் மாநிலத்திற்கு மாற்றப்பட்டார்.
இதை தொடர்ந்து மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக அமைப்புகள் எதிர்ப்பு தெரித்து வந்த நிலையில். இன்று அந்த இடத்தை மத்திய அமைச்ச நிர்மலா சீதாராமன், பாஜக தலைவர் தமிழிசை உள்ளிட்டவர்கள் பார்வையிட்டனர்.


பாதுகாப்பு படையினர் மீதான தாக்குதலை தடுக்க காஷ்மீர் முழுவதும் குண்டு வீச வேண்டும்: தீவிரவாதி தொகாடியா பகீர் பேச்சு !!

விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவரான பிரவின் தொகாடியா, காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்படும் தாக்குதலை தடுக்க காஷ்மீர் முழுவதும் குண்டு வீச வேண்டும் என்று கடந்த வெள்ளிக்கிழமை கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், “உரி மற்றும் குப்வாரா பகுதியில் இராணுவத்தினர் மீது நடத்தப்பட்டதை போன்ற தாக்குதல்களை தடுக்க காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் குண்டுகளை வீச வேண்டும். இராணுவ முகாம்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் கல் எறிதல் ஆகியவற்றை போர் செயலாக கருதி, அப்பகுதிகளில் அரசு குண்டு வீச வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.
விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச தலைவராக கருதப்படும் தொகாடியா, இராணுவத்தின் மீது போர் தொடுப்பவர்களை அரசு ஒடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் கஷ்மீர் மக்கள் மற்றும் இராணுவத்தினர் இடையேயான மோதல் கஷ்மீரில் அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“அவர்கள் மீது எந்தவித கருணையும் காட்டாமல் குண்டு வீச வேண்டும். இல்லையென்றால் அவர்கள் பிற மாநிலங்களுக்குப் பரவி நாட்டை பிளவுபடுத்திவிடுவார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.
ஜம்மு கஷ்மீர் முன்னேற்றத்திற்கு என்று 2015 ஆம் ஆண்டு மோடியால் அறிவிக்கப்பட்ட சிறப்பு நிதியான ரூபாய் 80000 கோடி குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். அதற்கு பதிலாக இந்த நிதியை விவசாயிகளுக்கு தர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
http://kaalaimalar.net/togodia-hate-speech-in-kashmir/

சீமை கருவை மரங்களை வெட்ட இடைக்காலத் தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு

சீமைக்கருவை மரங்களை வெட்ட இடைக்காலத்தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுற்றுச்சூழலை பாதிக்கும் சீமைக்கருவேல மரங்களை ‌அகற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. இதுதொடர்பாக இருவாரங்களுக்கு ஓருமுறை உயர்நீதிமன்ற கிளையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுவருகிறது ‌ இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேகநாதன் என்பவர் தொடர்ந்த வழக்கில், சீமை கருவேல மரங்களால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
சீமை கருவை மரங்களால் ஏற்படும் நன்மைகளை பட்டியலிட்டுள்ள அவர், உரிய வழிமுறைகளை ஏற்படுத்தாமல் அவற்றை அகற்றுவது சரியாக இருக்காது என்று மனுதாரர் தெரிவித்துள்ளார். சீமை கருவேல மரங்களை வெட்டுவதை காடு அழிப்பு நடவடிக்கையாக கருதவேண்டும் என்றும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.
ஐஐடி நிபுணர் குழு கொண்டு ஆய்வு செய்து கொள்கை முடிவெடுக்க வேண்டும் என்றும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம். சுந்தர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், சீமை கருவேல மரங்களை வெட்ட வரும் மே 11-ஆம் தேதி வரை இடைக்காலத்தடை விதித்தும், வழக்கில், ஐஐடி இயக்குநர் பதிலளிக்கவும் உத்தரவிட்டனர். மேலும், மே 11-ஆம் தேதி விசாரணைக்கு வரும் போது, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்றும் தெரிவித்தனர்.‌

குட்டி குட்டி லஞ்சம்: தமிழகத்திற்கு மூன்றாவது இடம்

பெரும் நிறுவனங்களின் ஊழல் அரசியல் கட்சிகளின் லஞ்சம் எனக் கோடிகளில் குற்றச்சாட்டுகள் ஒருபுறம் இருந்தாலும், அன்றாட வாழ்க்கையில் குட்டிக் குட்டி லஞ்சத்துக்கும் குறைவில்லை.
அரசு அலுவலகங்களில் சான்றிதழ்கள் வாங்குவது, ஓட்டுநர் உரிமம் வாங்குவது போன்ற பல்வேறு பொது சேவைகளில் பெறப்படும் சின்னச் சின்ன லஞ்சம் பற்றி ஆய்வு ஒன்றை சமர்ப்பித்துள்ளது இந்திய ஊழல் ஆய்வு மையம்.
இந்தியாவில் பொது சேவைகளுக்காக சின்ன சின்னதாக லஞ்சம் பெறும் மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது இடம் வகிப்பதாக இந்திய ஊழல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய ஊழல் ஆய்வு மையத்தின் அறிக்கையில், “இந்தியாவில், 10 பொதுத்துறை ஊழியர்களுக்கு அளிக்கப்படும் சின்ன சின்ன லஞ்சத்தில், 20 மாநிலங்களில் அளிக்கப்பட்ட லஞ்சத் தொகையின் மதிப்பு 6,350 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது. இது 2005-இல் 20,500 கோடியாக இருந்தது. அந்தக் கணக்கை வைத்துப் பார்க்கும் போது இப்போது குறைந்துள்ளது என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும், 20 மாநிலங்களில் 3000 குடியிருப்பு பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வில், 2005க்கும், 2017-க்கும் லஞ்சம் குறைந்துள்ளது என அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
10, 20 ரூபாய் முதல் 500, 1000 வரை அளிக்கப்படும் லஞ்சத்தைக் கணக்கிட்டால் கர்நாடகாவுக்குத்தான் முதலிடம். இரண்டாவது இடத்தில் ஆந்திராவும் மூன்றாவது இடத்தில் தமிழ்நாடும் இருக்கின்றன. மிகக்குறைந்த அளவில் லஞ்சம் பெறப்படும் மாநிலங்களாக சத்தீஸ்கர், கேரளா, மற்றும் ஹிமாசல பிரதேசம் மாநிலங்கள் இருக்கின்றன எனவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 28 ஏப்ரல், 2017

ஊட்டியில் அணை கட்டும் இளைஞர்கள் முயற்சி…குவியும் ஆதரவு.. நடக்குமா

தமிழகத்தில் தன்னெழுற்சியாய் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டதிற்கு பிறகு இளைஞர்கள் தமிழ் சினிமா நடிகர்களை ரொம்பவே வெறுத்து விட்டார்கள். காரணம் அத்தனை பேருமே பீட்டாவிற்கு ஆதரவாளர்கள் என்கிற அவப்பெயர்.
இதனையடுத்து வெளிவந்த படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. காரணம் முன்போல் இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு பாலாபிஷேகம்..! கட்டவுட்டுக்கு பீர் அபிஷேகம் செய்ய இன்று யாரும் முன் வரவில்லை.
ஒரு படம் வெற்றியடைவதற்கும்,பிளாப் ஆவதற்கும் இளைஞர்கள் தான் மாபெரும் மந்திரசக்திகள்.இந்த இளைஞர்கள்தான் தற்போது தமிழக மக்களுக்கு உண்மையான ஹீரோக்கள்.காரணம் இளைஞர்களின் தன்னலமற்ற சமூக அக்கறை.
இளைஞர்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வையடுத்து இந்த விஷயம் சில பெரிய நடிகர்கள் மத்தியில் அலசப்பட்டது என்கிறார்கள் கோடம்பாக்கத்தில் சில பத்திரிக்கையாளர்கள். சரிந்த இமேஜை தூக்கி நிறுத்த என்ன செய்யலாம்..?
தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே நீண்ட நாட்கள் தீர்க்கப்படாமல் உள்ள ஒரு விஷயம் என்றால் அது காவிரி நதிநீர் பிரச்சனைதான்.இந்த காவிரி விஷயத்தை வைத்துதான் இரு மாநில அரசியல்வாதிகளுமே அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
நாம் இன்று வரை கர்நாடகா,ஆந்திரா,கேரளா என அண்டை மாநிலத்தாரிடம் தண்ணீருக்காக கையேந்திக் கொண்டிருக்கிறோம். அவர்களும் கெத்தாக முடியவே முடியாது என்று மார்தட்டி கொண்டிருக்கிறார்கள். ஆனால் கர்நாடகாவுக்கே நாம்தான் தண்ணீர் தந்து கொண்டிருக்கிறோம் தெரியுமா?
ஆம் ஊட்டியில் உள்ள மோயர் ஆற்றின் ஒரு பகுதி பவானிசாகர் அணைக்கும், மற்றொரு பகுதி கர்நாடகாவிலும் பாய்கிறது.கர்நாடகாவில் பாயும் தண்ணீர் கபினி அணையிலும், நூகு அணையிலும் கலக்கிறது.
பின்னர் இரண்டும் இணைந்து டி.நரசிபுரா என்ற இடத்தில் காவிரியில் கலக்கிறது. அதன்பிறகு ஒகேனக்கல் வழியாக தமிழகத்திற்குள் பாய்கிறது. ஆனால், நாம் கொடுக்கும் தண்ணீரை நமக்கே கொடுக்காமல் கர்நாடகம் நம்மை வஞ்சித்து கொண்டுள்ளது.
ஊட்டியில் அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை தமிழர்களிடையே பரவி வரும் தகவல் கர்நாடகாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
இதுதான் சரியான தருணம் என்கிறார்கள் நடிகர்கள். ஊட்டியில் அணைகட்ட இளைஞர்கள் களம் இறங்கி விட்டார்கள்.
நதிகள் இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டால் ரூ.1 கோடி தருவதாக நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே அறிவித்திருந்தார். ஒரு பெரிய கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்து எவ்வளவு வருகிறதோ, அந்த தொகையை அப்படியே ஊட்டியில் அணைகட்ட கொடுத்து விடலாமா என்று ஆலோசனைகள் நடந்துள்ளதாம்.
இந்த விஷயத்தை நடிகர்கள் இன்னும் அதிகார பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், இது பற்றி தீவிர பரிசீலனைகளுக்கு பிறகே வெளியிடுவார்கள் என்று தெரிகிறது.

http://kaalaimalar.net/tn-youths-to-built-dam-in-ooty/

பிஜேபி மத வெறியர்களுக்கு இவ்வீடியோ சமர்ப்பணம்!! நக்சலைட் தாக்கியதில் குண்டடி பட்டு உயிருக்கு போராடிய சக ராணுவ வீரர்களின் உயிரை காக்க போராடிய முகம்மது !!-

இவரை போன்ற மாவீரர்களைத்தான் உலக மீடியாக்களும் இஸ்லாமிய விரோதிகளும் தீவிரவாதிகளாக சித்தரிக்கின்றனர்…!!
நக்சலைட் தீவிரவாதிகள் தாக்கியதில் குண்டடி பட்டு உயிருக்கு போராடிய நிலையிலும் சக ராணுவ வீரர்களின் உயிரை காக்க போராடிய முகம்மது …!!
அரசியலில் அதிகாரத்தை கைப்பற்ற இஸ்லாமியர்களை இந்துக்களின் விரோதியாக பொய் பிரசங்கம் செய்யும் பிஜேபி மத வெறியர்களுக்கு சமர்ப்பணம்…!!

http://kaalaimalar.net/militar-muhammed/

காட்டுதர்பாருடன் மிரட்டும் காவி..! போலீஸ் அதிகாரியின் தோலை உரிப்பேன் என மிரட்டிய பாஜக பெண் எம்.பி – நேரடி வீடியோ !! க்களாட்சி இந்தியா மன்னராட்சியாகிறதா..?

உத்தரப்பிரதேச மாநிலம் பாஜக எம்.எல்.ஏ. கேசர் சிங், வங்கி அதிகாரி ஒருவரை தாக்கிய புகாரில் அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இது குறித்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பாஜக எம்.பி. பிரியங்கா சிங் ராவத், போலீஸ் அதிகாரியை கடுமையாக மிரட்டியுள்ளார்.
இந்த தகவல் அறிந்து செய்தியாளர்கள் அவரை அணுகி பேட்டி கண்டபோது, காவல்துறை அதிகாரியை உயிருடன் வைத்து தோலை உரிப்பேன் என்று மிரட்டல் விடுத்தார்.
காவல்துறை அதிகாரிகள் தன்னிடம் கன்னியக்குறைவாக நடந்து கொண்டதாக குற்றஞ்சாட்டிய அவர், போலீஸ் அதிகாரி இந்த மாவட்டத்திலேயே இருக்க முடியாது என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
பாஜக பெண் எம்.பி. பிரியங்கா சிங் ராவத், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியிலேயே காவல்துறை அதிகாரியை உயிருடன் வைத்து தோலை உரிப்பேன் என்று  மிரட்டிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.காட்டுதர்பாருடன் மிரட்டும் காவி..! போலீஸ் அதிகாரியின் தோலை உரிப்பேன் என மிரட்டிய பாஜக பெண் எம்.பி – நேரடி வீடியோ !! க்களாட்சி இந்தியா மன்னராட்சியாகிறதா..?

http://kaalaimalar.net/barabanki-mp-priyanka-singh-rawat-threatens-asp-says-will-skin-you-alive/

இந்தியாவை ஆட்சி செய்ய அயோக்கிய மோடிக்கு தகுதி இல்லை, H.ராஜா தமிழ்நாட்டில் நடமாடுவது கஷ்டம்! அடித்து விடுவார்களோ என்ற பயம் !! – EVKS இளங்கோவன் பேட்டி…..!!

இந்தியாவை ஆட்சி செய்ய அயோக்கிய  மோடிக்கு தகுதி இல்லை,
H.ராஜா தமிழ்நாட்டில் நடமாடுவது கஷ்டம்!
அடித்து விடுவார்களோ என்ற பயம் !! – EVKS இளங்கோவன் பேட்டி…..!! – வீடியோ 
source: kaalaimalar 

40 ஆண்டுகளுக்கு முன்னால் தோண்டப்பட்ட மீத்தேன் கிணறை இன்றும் அணைக்க முடியாமல் தவிக்கும் அரசு !! தமிழ்நாட்டுக்கும் இதே நிலை தான் – பாஜகவின் சதியால் தமிழகம் அழியபோகிறது

40 ஆண்டுகளுக்கு முன்னால் தோண்டப்பட்ட மீத்தேன் கிணறை இன்றும் அணைக்க முடியாமல் தவிக்கும் அரசு !! தமிழ்நாட்டுக்கும் இதே நிலை தான் – பாஜகவின் சதியால் தமிழகம் அழியபோகிறது – அதிர்ச்சி வீடியோ  

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மீது தாக்குதலா..? வடகொரியா வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு.

அமெரிக்காவின் போர் கப்பல்கள் மற்றும் வெள்ளை மாளிகையை தாக்குவது போன்ற மாதிரி வீடியோவை வடகொரியா வெளியிட்டுள்ளது.
வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன், அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி அணு குண்டு சோதனை மற்றும் ஏவுகனை சோதனைகளை நடத்தி வருகிறார்.
இதனால் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி, யூஎஸ்எஸ்.கார்ல் வில்சன் என்ற விமானம் தாங்கி போர் கப்பலையும், அதனுடன் போர்படை அணியையும் மற்றும் யூஎஸ்எஸ்.மிச்சிகன் என்ற நீர்மூழ்கி போர் கப்பலையும் கொரிய பிராந்தியத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.
இதற்கு கொஞ்சமும் அஞ்சாத வடகொரியா, அமெரிக்க படைகளில் ஒருவர் கூட மிஞ்சமாட்டார்கள் என்று எச்சரித்தது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து போருக்கு நாங்கள் வழிவகுக்கவில்லை என்றும், வடகொரியா அணு ஆயுத சோதனைகள் நடத்துவதை நிறுத்துவதற்காகவே முயற்சிப்பதாக அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில் அமெரிக்க போர்கப்பல்களை தாக்குவது போன்றும், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை தாக்குவது போன்றும், மாதிரி வீடியோவை வடகொரியா இன்று வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில், வடகொரியா நடத்திய ஏவுகனை சோதனை தொடர்பான காட்சிகளும் இணைக்குப்பட்டுள்ளது. மேலும் வடகொரியாவை தாக்க முயற்சித்தால், அவர்கள் அழிவை சந்திப்பார்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.