புதன், 12 ஏப்ரல், 2017

“மம்தா பேனர்ஜி தலையை வெட்டி கொண்டு வந்தால் ரூ.11 லட்சம் பரிசு” – பயங்கரவாதி பாஜக இளைஞர் தலைவர் அறிவிப்பு!!

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தலைமை வெட்டி கொண்டு வருபவர்களுக்கு ரூ.11 லட்சம் பரிசு வழங்கப்படும் என பாஜகவின் இளைஞர் அணியான பாஜ யுவ மோட்சா தலைவர் அறிவித்துள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேற்குவங்கம் பிர்பம் மாவட்டம் சூரி பகுதியில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஊர்வலம் நடத்த முடிவு செய்தனர். இதற்காக காவல்துறை அதிகாரிகளிடம் அனுமதி கேட்கப்பட்டது. அதற்கு போலீசார் அனுமதிக்கவில்லை.
ஊர்வலம், பொதுக்கூட்டம் ஆகியவை நடத்த கூடாது என போலீசார் திட்டவட்டமாக கூறிவிட்டனர். அதற்கு,  ஊர்வலத்தில் ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என உறுதியளித்தனர். அதையும் போலீசார் ஏற்கவில்லை.
இதனால், தடையை மீறி ஊர்வலம் நடத்தப்பட்டது. இதில் ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட்டபடி சென்றனர். இதையடுத்து போலீசார், தடியடி நடத்தி, அவர்களை கலைந்து செல்ல செய்தனர். இந்த தடியடி சம்பவத்தில் பலருககு காயம் ஏற்பட்டது.
இந்த சம்பவத்துக்கு பாஜக இளைஞர் அணி தலைவர் யோகேஷ் வர்ஷினே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் பக்தர்கள்தான். எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவர்கள் இல்லை. அவர்கள் மீது தடியடி நடத்தியது கண்டிக்கத்தக்கது.
மம்தா பானர்ஜியின் ஆட்சி, முஸ்லீம்களை திருப்திப்படுத்துவதற்காக இந்துக்களை குறிவைத்து தாக்குகிறது. இந்து மக்களிடம் அடக்கு முறையில் ஈடுபட்டு வருகிறது.
மேலும் முதல்வர் மம்தா பானர்ஜியின் தலையை வெட்டி கொண்டு வருபவர்களுக்கு ரூ.11 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றார்.
மாநில முதலமைச்சரின் தலையை வெட்டி கொண்டு வருபவர்களுக்கு ரூ.11 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts: