ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

ஆதாரில் தவறா? 17-ம் தேதி திருத்தலாம்

ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்து கொள்ளும் வசதி வரும் 17-ஆம் தேதி நடைமுறைப்படு‌த்தப்பட இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் சார்பில் மாநிலம் முழுவதும் செயல்பட்டு வரும் நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களில் திருத்தங்களைச் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறந்த தேதி, பாலினம், முகவரி, கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைத் திருத்தம் செய்து கொள்ளலாம் என்றும், இதற்கு 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
புகைப்படம், கைவிரல் ரேகை, க‌ருவிழி ஆகியவற்றையும் புதுப்பித்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Posts: