திருச்சி: இதுவரை 82 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 83 விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு தரப்பட்டுள்ளதாக வேளாண் இயக்குநர் தகவல் அளித்துள்ளார். பன்னீர்செல்வம் தலைமையில் 17 விவசாயிகளே தற்கொலை செய்து கொண்டதாக அறிவித்திருந்தது. தற்கொலை எண்ணிக்கையை குறைத்து மதிப்பிட்டதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் தங்களுடைய பயிர்க்கடன்களை, கடன்களை வாங்கித் தான் நாங்கள் நகைகளை அடகு வைத்தும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மற்றும் கூட்டுறவு வங்கியில் கடனை பெற்று தான் விவசாயம் செய்திருக்கின்றோம். கடன்களை பெற்று செய்திருந்த விவசாயத்தையும், சாகுபடி செய்ய முடியவில்லை, அறுவடை செய்ய முடியவில்லை என்ற மனவிரக்தியில் மாரடைப்பு ஏற்பட்டு பலர் இறந்திருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய இழப்பீடாக ரூ.15 லட்சம் ஒரு குடும்பத்துக்கு குறைந்தபட்சமாக வழங்க வேண்டும் என்று பல்வேறு சங்கங்களும் வலியுறுத்தி வந்த நிலையில், ஆரம்பத்தில் 17 விவசாயிகளே தற்கொலை செய்து கொண்டதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.
தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் அனைவரும் கணக்கெடுத்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து விவசாய சங்கங்கள் வலியுறுத்தி வந்தார்கள். அந்த வகையிலே திருச்சியை சேர்ந்த, தமிழ் மாநில காங்கிரஸ் உடைய விவசாயிகள் தலைவராக இருக்கும் புலியூர் நாகராஜன், அவர் கடந்த மாதம் 9ம் தேதி வேளாண்துறை இயக்குநருக்கு கோரிக்கை மனுவை அளித்திருந்தார். அந்த மனுவில் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், பயிர்காப்பீடு சாகுபடி செய்ய முடியாமலும், செய்து பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும், அனைத்து விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இருக்கிறார்கள்.
இந்த கோரிக்கைளை வலியுறுத்தி தான் டெல்லியில் 33 நாளாக அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராடிக் கொண்டு வருகின்றனர். தஞ்சையில் 19வது நாட்களாக விவசாயிகள் போராடிக் கொண்டு வருகிறார்கள். இத்தகைய சூழலில் தமிழகம் முழுக்க விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. இந்த சூழ்நிலையில் வேளாண் துறை இயக்குநர், புலியூர் நாகராஜன் அளித்துள்ள கோரிக்கை மனுவிற்கு பதில் அளித்துள்ளார். அந்த பதில் மனுவில், இதுவரை 82 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு முதலமைச்சருடைய பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.3 லட்சம் விவசாயிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
17 விவசாயிகள் தான் இறந்திருந்திருந்தனர் என்று தமிழக அரசு கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்திருந்த நிலையில், தற்போது 82 பேர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதுமட்டு்மல்லாமல் 82 பேர் மட்டுமல்ல 200க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கிறார்கள், அவர்கள் அனைவருக்கும் இழப்பீட்டை குறைந்தபட்சம் ரூ.15 லட்சம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வேளாண் இயக்குநர் அக்கடிதத்தில், மத்திய உண்மை கண்டறியும் குழு எல்லாம், அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு நடத்திய பிறகு கடந்த பிப்ரவரி 21ம் தேதி தமிழகத்தின் 32 மாவட்டங்களையும் வறட்சி பாதித்த மாவட்டங்களாக அரசு அறிவித்தது.
அதை தொடர்ந்து பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து ரூ.2247 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் மூலமாக ரூ.18,00,733 லட்சம் விவசாய பரப்பானது பாதிக்கப்பட்டது. அதனால் இந்த பாதிக்கப்பட்ட விவசாய பரப்பில் இருந்து விவசாயம் செய்த 28,99,000 விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள தகவல்களை அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.